ஒரு கொலை …. பரபரப்பான ஒரு நூல் விற்பனை….
26 வயது இளைஞன்
பட்டப்பகலில் ஒரு ஹோட்டல் வாசலில் ஓர் தொழில் அதிபரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில்
2024 டிசம்பர் 9 ஆம் நாள் கைது செய்யப்படுகிறார் . ஆனால் அந்த கொலையைச் செய்த இளைஞனுக்கு ஆதரவாக அமெரிக்காவே
குரல் கொடுக்கிறது . ஆச்சரியம் தான் .நடந்தது என்ன ?
அந்த இளைஞன்
பெயர் லூயிஜி நிக்கோலஸ் மஞ்ஜானி [Luigi Nicholas Mangione ] .இந்த இளைஞன் நன்கு படித்தவன் . அறிவாளி .வசதியான குடும்பத்தில் இருந்து
வந்தவன் . நல்லதோர் பணியில் இருப்பவன் . எந்த குற்றச் செயலிலும் ஈடுபடாதவன் .
சுட்டுக்க்கொல்லப்பட்டவர் பெயர் பிரைன்
தாமஸ் [Thompson] . அமெரிக்க யுனைட்டெட் ஹெல்த் இன்சுரன்ஸ் [American united
health insurance ] நிறுவனத்தில் உயர் பொறுப்பில்
உள்ள நிர்வாக இயக்குநர் . சுட்டுக்கொல்லப்பட்ட இடம் நியூயார்க் மான்ஹாட்டனில் உள்ள ஹில்ட்டன் மிட்டவுன் ஹோட்டல்
[New York Hilton Midtown hotel] வாயில் .சுட்டுக் கொல்லப்பட்ட
நாள் டிசம்பர் 24 .
காரணம் என்ன ?
அமெரிக்காவில் மருத்துவரை அணுகுவது மிக
சிரமம் .பெரும் பொருட்செலவு .இன்சுரன்ஸ் இல்லாதவர் மருத்துவ உதவி பெறவே இயலாது .கொரானாவின்
போது அமெரிக்காவில் உயிர் இழப்பு அதிகம் ஆனதற்கு அங்குள்ள மருத்துவத்துறை ஏழை மக்களுக்கு
எட்டாத உயரத்தில் இருந்ததே ஆகும் .
அமெரிக்காவில் 1கோடியே 40 லட்சம் பேர்
மருத்துவக் கடனைத் தீர்க்க தன் சாப்பாட்டுச் செலவைக் குறைத்து வயிற்றை இறுக்கக் கட்ட
வேண்டி இருக்கிறதாம் .
அங்குள்ள மருத்துவ இன்சுரன்ஸ் மிகவும்
கெடுபிடியானது . 16 சதவீதம் இன்சுரன்ஸ் கோரும் மனுக்கள் தள்ளுபடி ஆகிவிடுகிறதாம். அமெரிக்க
யுனைட்டெட் ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனத்திலோ 32 % சதவீத மனுக்கள் குப்பையில் எறியப்பட்டுவிடுமாம்
.அதாவது மூன்றில் ஒரு பாகம் மனுக்கள் நிராகரிக்கப்படுகிறதாம்.
உலகில் மருத்துத்திற்கு தனிமனிதர் செலவிட
நேரிடும் தொகை மிக அதிகமுள்ள நாடு என்பதில் முன்வரிசையிலும் ; உயிர் காப்பில் 42 வது
இடத்திலும்தான் அமெரிக்கா இருக்கிறது .
மஞ்ஜானி தன் முதுகுத் தண்டுவட பிரச்சனைக்காக சிகிட்சை எடுத்துக் கொண்டதற்காக மேற்படி இன்சுரன்ஸ்
நிறுவனம் சரியாக நடந்து கொள்ளாததால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது
.ஆயின் அதனை அந்நிறுவனம் மறுத்திருக்கிறது .
ஆனாலும் இந்த இளைஞனுக்கு ஆதரவாக அமெரிக்கா
முழுவதும் குரல் கொடுக்கிறார்கள் .ஏன் எனில் அமெரிக்க மருத்துவ இன்சுரன்ஸ் நிறுவனங்கள்
மீதான அதிருப்தியும் கோபமும் உச்சத்தில் மக்களிடம் உள்ளது .
இந்த இளைஞனுக்கு ஆதரவாக டிசம்பர் 4 சட்ட
உதவிக் க்குழு [December 4 th Legal Committee] அமைத்து நிதி திரட்டுகின்றனர் . இதுவரை
ஒரு லட்சத்து முப்பதாயிரம் டாலர் நிதி திரண்டிருக்கிறது . மஞ்ஜானியின் டுவிட்டர் பக்கத்தில்
ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது .மஞ்ஜானி குறித்து இணையத்தில் தேடுவோர் மிகவும் அதிகரித்து
விட்டனர் . விக்கிபீடியா இப்போதே அவருக்கு ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டது .
தனிநபர் கொலை எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு
அல்ல ; அதனை நியாயப்படுத்தவும் முடியாது .எனினும் மருத்துவ வசதிக்காக மக்களைக் கசக்கிப்
பிழியும் கடன்காரனாக்கும் முதலாளித்துக் கொள்ளைக்கு எதிரான கொதிப்பே இப்பிரச்சனையில்
கொப்பளிக்கிறது .
"மறு", "தாமதி", " தூக்கி எறி",[“deny,” “delay” and “depose”, ] என்கிற
தந்திரத்தை இன்சுரன்ஸ் நிறுவனங்கள் பின் பற்றுவதாகக் கூறப்படும் நிலையில் .கொலை செய்யப்பட்ட
இடத்தில் இந்த வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது பெரும் பரபரப்பாகி விட்டது .
இந்நிலையில் இன்சுரன்ஸ் கொள்ளை குறித்து ஜெய் எம் பெயின்மென் [Jay M Feinman ] எழுதிய தாமதி மறு அதை நியாயப்படுத்து என்கிற தாலைப்பில் Delay deny defend / Jay M Feinman ] எழுதிய நூல் பலவருடங்களுக்குப்
பின் பரபரப்பாக விற்பனை ஆகிறதாம் .
ஒரு கொலை ஒரு நூல் விற்பனையைத் தூண்டியதா ? அல்லது
மக்களின் உள்ளக் குமுறலின் வெளிப்பாடா ?
[இந்தச்
செய்தியை சில வாரங்கள் முன் வாசித்தேன் .கடந்து போய்விட்டேன்.இந்த மாத “ காக்கைச் சிறகினிலே”
மாத இதழில் எம். பாண்டியராஜன் எழுதிய நான்கு பக்கக் கட்டுரையை வாசித்தபின் முகநூலில்
அச்செய்தியை பகிரத்தோன்றியது . என் மொழியில் பகிர்ந்துவிட்டேன் . இச்செய்தி சொல்லும்
செய்தி நூறு !!]
சுபொஅ
05/01/25.
0 comments :
Post a Comment