செய்திகளின்
எதிரொலி
[ சமூக வலைதளங்களில்
இன்று பார்த்த செய்திகளின் எதிரொலி ]
ஒருவர் இதயத்தை
தனியே சுமந்தபடி
மெட்ரோ ரயில்
பறக்கிறது
இன்னொருஉயிர்
பிழைக்கிறது
ஹைதராபாத்தில்
மருத்துவ
சாதனை !
சாதாரண மனிதன்
மருத்துவக்
காப்பீடுக்கு
நாயாய் அலைகிறான்
செலவு செய்ததில்
கால்வசி பெறவும்
கடும் போராட்டம்
.
பிரபல நடிகரோ
35 லட்சம்
கேட்கிறார்
25 லட்சம்
கிடைக்கிறது உடனே !
உயிர் காப்பீட்டில்
கூட
மலையும் மடுவுமாய்
ஏற்ற தாழ்வுகள்
!
கோமியம் குடித்தால்
நோயற்ற வாழ்வு
நூறாண்டு
வாழலாம்
உபதேசிப்பவர்
நட்சத்திர
மருத்துவமனையில்
வெளிநாட்டில்
சிகிட்சை !
மருத்துவ
கார்ப்பரேட்கள் மீது
மக்களின் எல்லையற்ற கோபம்
அதிசய சுகமளிக்கும்
தொடுதல்
அதை சாப்பிட்டால்
போதும்
இதைச் செய்தால்
போதும்
இப்படி நடந்தால்
போதும்
இலவச ஆலோசனைகளில்
சீக்கிரம்
விடை பெறும் உயிர் !
மருத்துவ
அறிவியல்
சகலருக்குமானது
மருத்துவக்
கண்டுபிடிப்புகள்
மகத்தானவை
கார்ப்பரேட்டுகளின்
லாபவெறியில்
வியாபாரப்
பொறியில்
உயிர்கள்
பணையம்
நோயே அண்டாமல்
வாழக்
கனவு காண்பது
இனிது !
நோய் நம்மை
சுற்றி
முற்றுகை
இட்ட வண்ணம் உள்ளதே !
சிகிட்சை
கைக்கு எட்டும் வகையில்
மருத்துவ
அறிவியல் சாதனை
வேருக்கும்
விரைந்து பாயும்
சமூக விடியல்
பூப்பது எப்போது ?
சுபொஅ.
19/01/25
0 comments :
Post a Comment