மனச்சாட்சி
சொன்னது ,
“ என்னோடு
வாழ்வது
மிகமிக கஷ்டம்தான்.”
அவன் மறுமொழி
சொன்னான்,
“ ஆம் .அறிவோம்.
இதயத்தை மரத்துப்
போகச் செய்யும்
வித்தை அறிவோம்..”
மனச்சாட்சி
மயங்கி விழுந்தது
மனக்குரங்கின்
ஆட்டம் தொடங்கியது .
ஹிட்லர்
,கொயாபல்ஸ் ,முசோலினி
எல்லோரும்
ஒற்றை உருவில்
ஒரே நாட்டில்
ஒரே தேசத்தில்
ஒரே மொழியில்
இரே குரலில் …
சுபொஅ.
29.01.25.
0 comments :
Post a Comment