எது ஆன்மீகம்
? [2]
ஆன்மீகம்
பற்றிய விவாதம் நாத்திகத்தை தொடாமல் செல்ல இயலாது . நாத்திகம் குறித்து சில செய்திகள்
தெரிவோம்.
பொதுவாய் நாத்திகர் என்று சொன்னாலும்
அதிலும் நாத்திகர் ,பகுத்தறிவாளர் ,சுயமரியாதைக்காரர் ,கம்யூனிஸ்ட் ,மதச்சார்பற்றோர்
,மதமறுப்பாளர் ,கடவுள் மறுப்பாளர் , ஐயுறுவோர் ,கடவுள் கவலையற்றோர் ,சுதந்திர சிந்தனையாளர்
,அறிவியல் பார்வையாளர் ,பொருள் முதல்வாதி ,லோகாயவாதி ,சித்தர் மரபு ,ஆதிபவுத்தம் ,சார்வாகம்
இப்படி பல வகைப்பாட்டில் நாத்திகம் அல்லது பகுத்தறிவு தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும்
உலகெங்கும் இயங்குகிறது
Irreligion, which
may include deism, agnosticism, ignosticism, anti-religion, atheism, skepticism, ietsism, spiritual but not
religious, freethought, anti-theism, apatheism, non-belief, pandeism, secular humanism, non-religious theism, pantheism, panentheism, and New Age, varies in the countries around the
world. இப்படி விக்கிபீடியா பெரிய பட்டியலையே சுட்டுகிறது
.இவற்றை அப்படியே தமிழாக்கம் செய்யவில்லை .தமிழில் நாமறிந்த சிலவற்றை ஆரம்பத்தில் சுட்டினேன்.
எல்லோரும் ஒருப்போல் பேசுவதில்லை . ஒவ்வொருவருக்கும்
ஒரு தனித்த பார்வை உண்டு .ஆயினும் இப்பிரிவினர் எல்லோரும் மனிதனை அனைத்துக்கும் மேலாக
மதிக்கின்றனர் .அறிவைப் பயன்படுத்தக் கோருகின்றனர் . உலக மாந்தரை சாதி ,மத ,இன ,பிரதேச
இன்ன பிற அடிப்படையில் பிளவுபடுத்துவதை நிராகரிக்கின்றனர் . கண்மூடிப் பழக்கங்களை கேள்விக்கு
உட்படுத்துகின்றனர் . ஆயினும் “சமூக மாற்றம்
” [ social change ]எனும் கேள்வியில் நாத்திகர்
எல்லோரும் ஒரே நிலையில் இல்லை. பொதுவாக “சமூக
சீர்திருத்தமே” [social reform] பெரும்பாலோர் நிலை .ஆயினும் ,உங்களுக்குத் தெரியுமா
இந்த நாத்திகர்கள் யாரும் பிற மதவழிப்பாட்டு தலங்களை இடித்ததில்லை .
மொத்தத்தில் மனிதத்தை உயர்த்திப் பிடிப்பவர்களே நாத்திகர்கள்
. இதில் தவறினால் அவர்களை நாத்திகர்கள் எனச் சொல்லல் தீதே !
பெரியார் பேசிய நாத்திகமும் அறிவியல் அறிஞர் ஸ்டீவன்
ஹாக்கிங் பேசிய நாத்திகமும் ஒரே குரலில் இல்லை . பெரியார் சாதி என்னும் இழிவை வெறுத்தார்
.சாதியை நியாயப்படுத்தும் மதத்தை எதிர்த்தார் .மதத்தை காக்கும் கடவுளை நிராகரித்தார்
. ஆக மனிதனின் சமத்துவ நோக்கில் கடவுளை நிராகரித்த மனிதநேயர் அவர் . அவர் பாணி சீழ்க்
கட்டியை நீக்க அறுவை சிகிட்சை செய்யும் பாணி . வலுவாக கடவுள் மறுப்பு ,நாத்திகம் ,பகுத்தறிவு பேசி மக்கள்
தலைவராய் நின்றதுதான் இவரது தனித்துவம் .சாக்ரட்டீஸ் இங்கர்சால் போன்றோரின் பகுத்தறிவுவாதம்
இன்னொரு தளம் .
“இயங்கியல்
பொருள் முதல்வாத” சித்தாந்த அடிப்படையில் கடவுளையும் மதத்தையும் அணுகியவர்கள் கம்யூனிஸ்டுகள்
. எல்லாவகையிலும் மனிதர்களுக்கிடையே சமத்துவம் தழைக்க வேண்டும் என்பது அவர்கள் நிலை
. சமூக மாற்றமே இவர்களின் இறுதி இலக்கு.
ஸ்டீவன் ஹாக்கிம் ஓர் இயற்பியல் அறிஞர் . இளமையிலேயே
இறந்து போவார் என்கிற மருத்துவக் கணிப்பை ; மீறி உடல் முழுவதும் சதை செயலற்று முடங்கிய
போதும் சிந்திப்பதை நிறுத்தாமல் இயற்பியல் உலகில் சாதனை செய்தவர் . அவர் அறிவியல் ரீதியாக
கடவுளை மறுத்தார் .அவர் பேசிய நாத்திகம் அறிவியல் தளத்தில் சவாலாக நிற்கிறது .
“விசுவாசி,” “ஐயுறாதே” என்பது மதங்களின் பாதையாகவும் “கேள்வி கேள்,” “சந்தேகி” என்பது அறிவியல் பாதையாகவும், பார்வையாகவும் உள்ளது.
மதங்களைப் பற்றிய விமர்சனம்தானே எல்லா தத்துவ விமர்சனங்களுக்கும்
அடித்தளம். ஆனால் மதங்களை அறிவியல்பூர்வமாகக் கூட விமர்சிக்க முடியாத ஒரு பாசிச சமூகச்
சூழல் இன்று நிலவு கிறதே ஏன்?
ரிச்சர்ட் டாக்ஃ கின்ஸ் என்கிற மேலைதேச மரபணு விஞ்ஞானியும்
பகுத்தறிவாளரும் தன் பத்து வயது மகளுக்கு எழுதிய புகழ்பெற்ற கடிதத்தில் கூறுவார்:
“துப்பறியும் நிபுணர்கள் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி உண்மைகளை கண்டறிவதுபோல் எல்லாவற்றையும்
விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்”
கடவுள், புனிதநூல், பழம்பெருமை எல்லாம் இத்தகு விமர்சனத்துக்கு
உட்பட்டதே என்பதே பகுத்தறிவாளர் வாதம். இது ஒரு பாதை.
இப்படி புனித நூல்களை ஆராயக்கூடாது என்பது மத நம்பிக்கையாளர்
வாதம்
. “திருடனைக் கண்டுபிடிப்பதற்காக வீட்டில் சோதனை செய்ய
நுழையும் போலீஸ்காரர் மனோபாவத்துடன் கீதையையோ பிற மதத்தவர் கௌரவிக்கும் மார்க்க தரிசன
நூல்களையாவது படிப்பதில் பயனில்லை. படிப்பது கூடாது” என்றார் ராஜாஜி.
இன்று அதற்கும் ஒருபடி மேலே போய் அவை கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்று வாதிடப்படுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளை கருத்துக்களைக் கொண்டு
மதவாத கருத்துக்களை நியாயப்படுத்தும் ஆபத்தான போக்கும் தலைதூக்கியுள்ளது.
அறிவியலைப் பற்றி நின்று உண்மையைச் சொல்ல நாம் தயங்கக்கூடாது.
அறிவியல் என்பது இத்தகைய சோதனைகளைக் கடந்து வெற்றி பெறவே என்பதறிக !
சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் பழுத்த பகுதறிவாளர்
,பொதுவுடைமை சித்தாந்தி .அவர் பகுத்தறிவு என்றால் என்ன என்ற கேள்விக்கு சொன்ன பதில்
முக்கியமானது .
“பகுத்தறிவின் தன்மை என்ன? எல்லா விஷயத்திலும் பகுத்தறிவை உபயோகித்தல்; எங்கே கொடுங்கோன்மை தாண்டவமாடுகிறதோ அங்கே பகுத்தறிவு எதிர்த்துப் போராடும். எங்கே சுதந்திரத்திற்கு அபாயம் நேரிடுகிறதோ அங்கே பகுத்தறிவு இத்யாதி அபாயத்தைத் தடுக்கச் செல்லும். எங்கே பசியும் பிணியும் வறுமையும் அறியாமையும் வருத்து கின்றனவோ அங்கே பகுத்தறிவு பசித்தோருக்கும் வருந்துவோருக்கும் உதவிபுரிந்து நிற்கும். இதைத்தான் உண்மையான பகுத்தறிவின் அடையா ளம். மற்றவைகளெல்லாம் போலிப்பகுத்தறிவே” என்றார்.
ஆன்மீகமும் அன்பைத்தானே போதிக்கிறது என்கிறார்கள் .அதனையும் அலசுவோம்….
தொடர்வோம்…
சுபொஅ.
22/10/24.
0 comments :
Post a Comment