Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

தோழமையான அறிவிப்பு

Posted by அகத்தீ Labels:

 


தோழமையான அறிவிப்பு

 

அன்பான தோழர்களே !

வணக்கம் .

நாளை தேர்தல் முடிவுகள் வந்துவிடும் . திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் .எனக்கு ஐயமில்லை.  

மாநில அரசு புதிய சூழலை , புதிய சவால்களை உறுதியோடு எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் .

ஒவ்வொரு கட்சியும் மக்கள் நலன் சார்ந்து போராட்டங்களையும் பரப்புரைகளையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் .

பாசிச அபாயம் தொடர்வதையும் ; மாநில உரிமைகள் ஆபத்தானக் கட்டத்தை நெருங்குவதையும் ; ஜனநாயக  சமூகப்  பொருளாதாரப்  பண்பாட்டு நெருக்கடிகள் முற்றுவதையும் ; முழுமையாக உள்வாங்கி ஒவ்வொரு நகர்வையும் திட்டமிட வேண்டும் . 

 

நான் தமிழ்நாட்டில் இப்போது குடியிருக்கவில்லை . நேரடி அரசியல் பங்கேற்பும் இல்லை . சமூக வலைதளங்களில் முடிந்தவரை இயங்கி வந்தேன் . இனி இதில் என் பணியை முடிந்தவரை குறைத்துக் கொள்ளலாம் என யோசிக்கிறேன் .

 

ஏனெனில் என் நெடுநாள் கனவான  ஒரு எழுத்துப் பணிக்கு திட்டமிட்டு வருகிறேன் .அதற்கு நிறைய வாசிக்க வேண்டி உள்ளது . தயாரிக்க வேண்டி உள்ளது . நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது . எனவே சமூக வலைதளங்களில் உலவும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள விழைகிறேன் .

 

தேவைப்படும்போது சந்திப்பேன் .

 

நன்றி !

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

03 /05 /26 .


மலர்களின் கொண்டாட்டம்..

Posted by அகத்தீ Labels:

 





மலர்களின் கொண்டாட்டம்..

 

 [ சென்ற ஆண்டு செர்ரி ப்ளாசம் [ cherry  blossom ] கொண்டாட்டத்தின் போது அமெரிக்காவில் பேரன் பேத்தியோடு இருந்தேன் . இந்த ஆண்டு அதனை நினைவூட்டி கான்வாஸில் Acrylic paint cherry blossom வரைந்து புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பேரன் முகில் . பழைய நினைவும் புதிய புகைப்படமுமாய் இங்கு …]

 

புகுந்த வீட்டில் கொண்டாடப்படும் மருமகள்களைப் பார்த்திருக்கிறீர்களா ?

 

ஆண்டுதோறும் அலைஅலையாய் திரண்டு ஆர்ப்பரிக்கும் அதிசயத்தை தரிசித்து இருக்கிறீர்களா ?

 

மருமகள்கள் கூட்டம் ஒருப்போல் புன்னகைத்து மெல்லிய ஊதா கலந்த வெள்ளுடையோ மெல்லிய இளம் சிவப்பு கலந்த வெள்ளுடையோ பூண்டு ஒயிலாக ஆடுவதை கண்டு ரசிக்காத கண்கள் இருந்தென்னவோ !

 

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் ஆண்டுதோறும் வசந்த கால துவக்கத்தில் ( மார்ச் இறுதி முதல் இரண்டு வாரங்கள் ) கொண்டாடப்படும் " மலர்களின் புன்னகைத் திருவிழா" -  "செர்ரி ப்ளாசம் (cherry blossom ) திருவிழாவில்" தான் இந்த அற்புதம்

 

செர்ரி மலர் கூட்டம் அமெரிக்க மண்ணில் இயல்பாய் பிறந்ததல்ல.

 

வந்தேறியதுதான் ; குடியேற்ற அமெரிக்க மண்ணைப் போல..

 

பூர்வகுடிகளை அழித்து உரிமைகொண்ட இரத்த கறை படிந்த பாரம்பரியம் இந்த மண்ணுக்குத்தான் செர்ரி மலருக்கல்ல..

 

1912 ல்  ஆம் முதல் உலகப்போருக்கு இரண்டு ஆண்டுகள் முன்பு நட்பு கரத்தோடு ஜப்பானில் இருந்து வந்ததே இம்மலர் கூட்டம் . இம்மலரின் பூரவீகம் சீனா எனபது அதன் சொந்தக்கதை.இந்த மலர் காகித மலர் போல் மெனமையாக இருக்கும். மல்லிகை முல்லை போல் வாசம் கிடையாது.

 

ஜப்பான தலைநகர் டோக்கியோ மேயர் ஓகியோ முவாயிரம் செரி மலர் செடிக் கனறுகளோடும் சர்வதேச சகோதரத்துவச் செய்தியோடும் இந்த மண்ணுக்கு வந்தார்.

 

அன்று வேர்பிடித்த மலர்க்கூட்டம் .இன்றும் கொண்டாடப்படுகிறதே வரலாற்று அற்புதம். 1935 ல் தான் அரசின் அதிகாரபூர்வ கொண்டாட்டமானது.

 

 

 

இடையில் இரண்டாம் உலகப்போரின் போது கொண்டாட்டம் இல்லாது போனது.

 

மதப்பூச்சோ சடங்குகளின் தொகுப்போ இல்லாத ஜனநாயகத் திருவிழா. எல்லோருக்குமாக புன்னகையை வாரி இறைக்கும் திருவிழா ! ஊட்டி மலர் காட்சியோடு ஒப்பிடலாம். ஆனால் அங்கு போவோரும் கோவில்கள் தேடுவது நம் ஊர். ஸ்பெஷல்.

 

ஜோடிகளாய் தம்பதிகளாய் குடும்பமாய் நட்பாய் இளையோர் நடுத்தரவயதினர் முதியோர் குடும்ப அங்கமாகிவிட்ட நாய்கள் மகிழ்வோடு கூடும் நாளே செர்ரி ப்ளாசம்.

 

ஆடிப்பாடி ,காற்றாடி விட்டு ,பாய் விரித்தமர்ந்து ,கொண்டுவந்த உணவைக் கூடி உண்டு இன்பச் சிற்றுலா ( PICNIC)வென மகிழ்வே முந்தி நிற்கும்.

 

ஓவியம் வரைவோர் ஓர்புறம். புகைப்படம் எடுக்காதோர் விழாவுக்கு வராதாரே என்பது எழுதா இலக்கணம்.

 

சடங்குகளில் சம்பிரதாயங்களில்  கொண்டாட்டங்களை தொலைத்த இந்தியன் தமிழன் மலர்களின் புன்னகைக் கொண்டாட்டத்தில் மனதைப் பறிகொடுத்தேன்.

 

30/03/25 எங்கள் வாழ்வில் இனிய நினைவலைகள்...

 

சுபொஅ.

31/03/25

வர்ஜீனியா.

 

 

 


 


Alzheimer ஞாபக மறதி

Posted by அகத்தீ Labels:

 



Alzheimer ஞாபக மறதி

 

நானும் இன்னொரு மூத்த குடிமகனும் தினசரி நடை பயிற்சி செல்வோம் . தினசரி அந்தக் கோயிலைக் கடக்கும் போது இன்னொரு மூத்த குடிமகன் கோலூன்றி நகர்ந்து வருவார் .

அவரைப் பார்த்ததும் , புன்னகைப்போம் .அவரும் புன்னகைப்பார் .

நாங்கள் , “ குட் ஈவினிங்.”

அவர் , “ குட் ஈவினிங் . நீங்க எங்க குடியிருக்கீங்க ?  

“ கார்டன் ரெஜிடென்சி”

“ உங்க வயது என்ன ?”

” 73 …. 76 “ [ அவரவர் வயதைச் சொல்லுவோம் ]

“ எனக்கு வயது 68 “ எனபார் . தினசரி இதை மாற்றிக்கொண்டே இருப்பார் முதல் நாள் சொன்னது ஞாபகம் இருக்காது . ஒவ்வொரு நாளும் இதே கேள்வி . அவர் வயது மாறிக்கொண்டே இருக்கும் . ஞாபக மறதிதான் காரணம் . கடந்த ஓராண்டுக்கு மேலாக இப்படித்தான்  அவரை தினசரி கடக்கிறோம் .

 

எங்களுக்கு இப்போது ஞாபக மறதி இல்லை என்பது மகிழ்ச்சி . ஆயின் முதியோர்களில் நூற்றுக்கு இருபது பேர் Alzheimer எனும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்படுகின்றனர் . இதனால் தொலைந்து போவதோ , வீட்டார் அல்லது சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாவதோ , ஒதுக்கப்படுவதோ , தன்னையே மறந்து போவதோ நடக்கிறது.

 

அண்மையில்  பேராசிரியர் தோழர் முத்து மோகன் இப்படி தொலைந்து மீண்டது செய்தியானது .மூத்த தோழர்கள்  பலர் கடைசி காலத்தில் இதன் பாதிப்போடு வாழ்ந்ததை அனுபவத்தில் பார்த்தோம் .சர்க்கரை போன்ற கோளாறுகளை கட்டுக்குள் வைக்கத் தவறுகிறவர்கள் இதில் சீக்கிரம் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து அதிகம் .

 

ஆக , முதியோர்களுக்கு ஞாபக மறதி நோய்  இப்போது அதிகரித்து வருகிறது. ஆரம்ப அறிகுறி தென்பட்டதுமே சிகிட்சை எடுப்பது மிக முக்கியம் .

 

தொடர்ந்து நூல்களை வாசிப்பதும் வாசித்து அறிந்ததை அடுத்தவர்களுக்குச் சொல்வதும் ஞாபக சக்தியை அதிகரிக்க நல்ல பயிற்சியாகும் என்பதை ஞாபகத்தில் நிறுத்துங்கள் . தொடருங்கள் ! பெரியார் ,காந்தி ,தோழர் இஎம்எஸ் ,கலைஞர் கருணாநிதி , போன்ற ஆளுமைகள் கடைசிவரை கூர்மையான நினைவாற்றலோடு  இருந்ததில் தொடர் வாசிப்பும் தொடர் உரையாடலும் மிக முக்கியமானது .

 

ஒரு கவிஞரிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னார் , “ நீங்கள் படித்த கவிதைகளை அடுத்தவருக்குச் சொல்லிப் பழகுங்கள். உங்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும் . “

“ அவர் சொல்வது சரியா பிழையா என உளவியல் வல்லுநர்கள் சொல்லட்டும். பாரதி ,பாரதிதாசன் ,தமிழ் ஒளி போன்றோர் கவிதைகளை நினைவுகூர்வது எளிது அதன் சந்த லயம் அதற்கு உதவும் ; இன்றைய கவிஞர்கள் கவிதை அப்படியா ? நமக்கு எதுக்கு வம்பு ? கவிஞர் சொன்னா ரசிக்கணும் கேள்வி கேட்கக்கூடாது .சரிதானே !”

 

நான் எழுதிய “ முதுமை வரமா சாபமா “ நூலின் கடைசியின் என் கவிதைகள் சில தொகுத்திருப்பேன் .அதில் ஒன்று

 

“உணவு பரிமாறுகிறார் எதிரே வைக்கப்பட்ட

காய்கறியின் பெயர் மறந்துவிட்டது

தலையைச் சொறிகிறேன் .

நடை பயிற்சியில் வணக்கம் சொல்கிறார்

தினசரி பார்ப்பவர் பெயர் மறந்துவிட்டது

ஞாபகத்துக்குக் கொண்டுவர அல்லாடுகிறேன்

தினசரி பதிவு போடுகையில்

அநேகமாய் தேதியைத் தப்பாகக் குறிக்கிறேன்

யாராவது சுட்டியபின் திருத்துகிறேன்

மின் விளக்கை அணைக்க மின் விசிறியை நிறுத்த

தண்ணீர் குழாயை மூட மறந்து போகிறேன்       

யாராவது சுட்டும் போது இளிக்கிறேன் ;

என்றோ படித்தது எல்லாம் நினைவில் இருக்கிறது

சின்னச் சின்ன மறதிகள் பாடாய்ப்படுத்துகிறது!

எதற்கு இதனை எழுத வந்தேன் ?

மறந்து விட்டது .ஞாபகம் வந்ததும் சொல்கிறேன்.”

 

இந்தக் கவிதையை பதிவிட்ட போது பல நண்பர்கள் தம்மைச் சொல்வதாகச் சொன்னார்கள் .

இது போல் எழுத நிறைய உண்டு .நினைவுக்கு வரவேண்டுமே ! ஆனால் முதுமையின் சோகம் என்ன தெரியுமா ?

 

“ நினைவில் இருக்க வேண்டியவைகள் மறந்து போவதும் ; மறந்து தொலைக்க வேண்டியவைகள் நினைவில் வந்து வந்து பாடாய்ப் படுத்துவதும்தான் .”

 

நான் என்ன சொல்ல வந்தேன் ?

ஞாபகம் வந்தபின் சொல்லுகிறேன்.

 

சுபொஅ.

18/12/25.


நேற்று பயணத்தில் ஓர் காட்சி .சிறு துரும்பும் பல்குத்த உதவுமாம் ….

Posted by அகத்தீ Labels:

 

நேற்று பயணத்தில் ஓர் காட்சி .

சிறு துரும்பும் பல்குத்த உதவுமாம் ….

 

நான் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன் . என் அருகில் நடுத்தர வயதை எல்லாம் கடந்துவிட்ட ஊழியர் ஒருவர் அமர்ந்திருக்கிறார் .  அநேகமாக பணிஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கலாம் .நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டை . நடுவில் சந்தனம் . கையில் இருக்கும் பை அவர் ஓர் அரசு ஊழியர் எனச் சொல்லாமல் சொன்னது . ஒன்றரை  மணி நேரம் அவரோடு பயணம் .

 

 ஒவ்வொரு நூறடிக்கும் இடது பக்கமோ வலது பக்கமோ திரும்பி கன்னத்தில் போட்டுக் கும்பிடுகிறார் . ‘ வெளியூரா ?’ என என்னிடம் கேட்டுவிட்டு , என் பக்கம் திரும்பி கும்பிட்ட சாமியின் பெயரைச் சொல்கிறார் . நாலய்ந்து கும்பிடு முடிந்த பின் அடுத்து வருகிற சாமி குறித்து முன் தகவல் தரத் தொடங்கிவிட்டார் .

 

அவர் நம்பிக்கை .அவர் உரிமை . நான் சொல்ல என்ன இருக்கிறது . ஆனாலும் நான் எங்கேயும் கும்பிடாமல் இருப்பது அவருக்கு உறுத்தலாகிறது .

 

“ சார் ! கிறிஷ்டியனா ? ”

 

இல்லை என தலையாட்டினேன் . இதுவரை நான் அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை .

 

“ நீங்க முஸ்லீமா இருக்க முடியாது , தொப்பியோ தாடியோ இல்லை.”

 

“ தலையாட்டி .புன்னகைத்தேன்…” ; வேறென்ன செய்வது ?

 

“ எல்லாமே பகவான்தான் சார் ! அவங்க அவங்க நம்பிக்கை அவங்கஅவங்களுக்கு…” இப்படி அவர் சொன்னதும் லேசாக சிரித்து வைத்தேன் . அப்போதும் பேசவில்லை .

 

“ சார் ! அடுத்து அந்த எடத்தில இரண்டு நிமிஷம் நிக்கும் சார்… அங்க உயரமான சாமி  சிலை இருக்கு சார் ! பஸ்லில் இருந்து பார்த்தாலே சாமி தெரியும் … எல்லோரும் கும்பிடுவாங்க … ரொம்ப சக்தி உள்ள சாமி …. ரொம்ப பவர் ஃபுள்…  வேண்டிக்கிட்டா நிச்சயம் நிறைவேறும்…”

 

இதுவரை பேசாமல் இருந்த நான் மெல்ல வாய் திறந்தேன் , “ அப்போ நீங்க இதுவரை கும்பிட்டது எல்லாமே சக்தி குறைவாக உள்ள சாமிகளோ….”

 

நான் கேட்டதும் , “ அப்படி இல்லை சார் ! ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கு, ஆனால் இவருக்கு ’ஃபுள் பவர்’ [அழுத்திச் சொன்னார்] இருக்கு… அதத்தான் சொன்னேன் … நான் ஒரு சாமிய விடமாட்டேன் … சிறுதுரும்பும் பல்குத்த உதவும் … சார் … ஒண்ணையும் விடக்கூடாது..”

 

அவரின் அப்பிராணித்தனத்தைப் பார்த்து சிரித்துவிட்டேன் .

 

அவர்  , “ சார் ! சிரிக்காதீங்க … ஆபத்துக்கு ஒரு சாமி இல்லாட்டா ஒரு சாமி உதவுவாரு சார் !”

 

தொடர்ந்து வழிநெடுக பல ’சிறுதுரும்புகளை’ கும்பிட்டுக் கொண்டே  சுட்டிக்காட்டிக்கொண்டே வந்தார் … நான் பேசாமல் மனதுக்குள் சிரித்தபடி பயணித்தேன் .

 

வழியில் ஒரு தர்க்காவையும் மேரிமாதாவையும்கூட கும்பிட்டார் . அதுவும் அந்த ’சிறு துரும்பு’ கணக்காக இருக்கும் போலும் …

 

ஓய்வு காலக் கணக்கும் வாழ்க்கைக் கணக்கும் ஒத்துப் போகாமல் ; பிரச்சனைகளின் கனம் தாங்காமல் தத்தளிக்கும் அவர் ஏதேனும் துரும்பைப் பிடித்தாவது கரையேறிவிடலாம் என எண்ணுகிறாரோ என்னவோ ! பலர் அப்படித்தான் .

 

இவர்களைப் போன்றோரோடு உரையாட அறிவு மட்டும் போதாது கொஞ்சம் பாச உணர்ச்சியும் தேவை அல்லவா ?

 

[ சேலம் ஆத்தூர் பயண அனுபவம் ]

 

சுபொஅ.

11 /12 /25 .

 

 

 

 


குழந்தைக் கதை

Posted by அகத்தீ Labels:

 




 


 

 

 

 

தோழரே ! [ அமெரிக்காவிலிருந்து எழுதியது

என் பேத்தி நூலகத்தில் இருந்து எடுத்து வந்த ஒரு புத்தகம் என்னைக் கவர்ந்தது . உடனே என் வழியில் மொழியாக்கிவிட்டேன் .

உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்.                                                            

 

ஒவ்வொரு பக்கத்துக்கும் வண்ணப்படம் முக்கியம் .

 

நூலாசிரியர் அனுமதி இல்லாமல் வெளியிட முடியாது .

 

சுபொஅ.

02/04/25.

வர்ஜீனியா

 

 

 

 “நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்”

Be Who You Are

ஆசிரியர் : டாட் பார்

Todd Barr

 

https://www.bing.com/ck/a?!&&p=1bb3a006a30d9a811aff5383bf89b3fabe1bcb7efdffe7d8d7e8ed21c5ef1485JmltdHM9MTc0MzU1MjAwMA&ptn=3&ver=2&hsh=4&fclid=3f4e9636-41d8-6ab4-3063-841e406a6b0e&u=a1L3ZpZGVvcy9yaXZlcnZpZXcvcmVsYXRlZHZpZGVvP3E9YmUrd2hvK3lvdSthcmUmbWlkPTc5QjBFQkIxQUEwQTJDN0FFQjI1NzlCMEVCQjFBQTBBMkM3QUVCMjUmRk9STT1WSVJF&ntb=1

 

Be Who You Are

 

[1]

Be Who You Are

நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்

 

[2]

Be old . be young.

வயது மிகக்குறைந்த சிறுவராக இருங்கள்

இளைஞராக இருங்கள்

 

[3]

Be different colour .

எந்த நிறமாக வேண்டுமாயினும் இருங்கள் !

எந்த மதமாக சாதியாக வேண்டுமாயினும் இருங்கள்

 

[4]

Wear everything you need to be you .

நீங்கள் எப்படியாக இருக்க விரும்புகிறீர்களோ அப்படியே ஆடை அணிகலன் அணியுங்கள் !

 

[5]

Speak your language

உங்கள் மொழியில் பேசுங்கள் !

 

[6]

Learn in your own way

உங்களுக்கு பிடித்தமான வழியில் கற்றுக்கொள்ளுங்கள்

 

[7]

Be proud of where you’re from

நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்

 

[8]

Be your own family

நீங்கள் உங்கள் சொந்த குடும்பத்தோடு இருங்கள்

 

[9]

Just Be Who You Are

நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்

 

[10]

Be silly

ரொம்ப வாலாக விளையாட்டுத்தனமாக இருங்கள் !

 

[11]

Be brave

தைரியமா இருங்கள் !

 

[12]

Dance

ஆட்டம் போடுங்கள் !

 

[13]

Play

Discover

Learn

Read

விளையாடுங்கள்

கண்டுபிடிங்க

கற்றுக்கொள்ளுங்கள்

படிங்க ள்

 

[14]

Share your feelings

 உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

 

[15]

Happy

Mad

Sad

Silly

Scared

Proud

மகிழ்ச்சியாக இருங்கள்

பைத்தியம் போல குதிங்கள்

சோகமா இருங்கள்

விளையாட்டுத்தனமான இருங்க

பயந்து இருங்கள்

பெருமையா திரியுங்கள்

 

[ 16 ]

Just Be Who You Are

நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்

 

[17]

Try new things

புதியன  முயற்சி செய்யுங்கள்

Eat

Tacos

சாப்பிடுங்க

பிரியாணி ,சமோசா

இட்லி , கொழுக்கட்டை

 

[18]

Pizza

Noodles

பீசா , நூடுல்ஸ்

பருப்பு சாதம் ,

முட்டை ஆம்ப்லெட்

 

[19]

Be confidence

நம்பிக்கையோடு செயல்படுங்கள் !

 

[20]

Stand up for yourself

உங்களுக்காக நீங்களே எழுந்து நில்லுங்கள்

 

[21]

Be energetic

சுறுசுறுப்பாக இருங்கள் !

 

[22]

 

Be peacefull

நிம்மதியாக இருங்கள்

நிம்மதியாய் உறங்குங்கள் !

Be calm and do yoga

அமைதியாக இருங்க சந்தோஷமாக உடற்பயிற்சி செய்யுங்கள்

 

 

 

[23]

Be the  best that u can be

முடிந்தவரை நல்லவராய் இருங்கள்

 

 [24]

Just Be Who You Are

நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்

 

 

[25]

It doesn’t matter what colour you , where you are from , Or who is in your family . Every one needs to be loved . Always Love yourself and be who you are !

 

Love !

நீங்கள் எந்த நிறம்,

நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்,

நீங்கள் எந்த சாதி , எந்த மதம் , எந்த இனம்

உங்கள் மொழி யாது

அல்லது உங்கள் குடும்பத்தில் யார் யார் இருக்கிறார்கள் அல்லது இல்லை

நீங்கள் ஏழையா பணக்காரரா  

என்தெல்லாம்  முக்கியமல்ல.

 

ஒவ்வொருவரும் நேசிக்கப்பட வேண்டும்.

எப்போதும் உங்களை  நீங்களே நேசியுங்கள் !,

நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்!

 

அன்பென்று கொட்டு முரசே !