இன்றொரு நாள்
அரசியல் பேசாதிரு மனமே !
நீ பேசிக்கொண்டேதான் இருக்கிறாய்
யார் கேட்கிறார்கள் ?
கசக்கும் உண்மை தேவை இல்லை
காதுல பூ சுற்றும் ரீல்ஸில்
பழகு !
கனவில் காய்த்த கத்திரிக்காயில்
ஊருக்கே விருந்து வை !
வெறுங் கையால் முழம் போட்டு
ஊருக்கே பட்டா கொடு !
தப்பித் தவறி நல்லது நடப்பின்
உன் லேபிளை ஒட்டு !
பிரச்சனை பெரிதாயின்
பழியை பிறர் மேல் போடு !
‘ கொள்கை எதிரி’ எனில்
ரகசிய நண்பன் !கவனம்.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா
நீ ஒரு ‘தூயசக்தி ! நம்ப
வை !’
அவ்வளவுதான்....
இன்றொரு நாள்
அரசியல் பேசாதிரு மனமே !
சுபொஅ.
0 comments :
Post a Comment