எது ஆன்மீகம் ? [ 17 ]
“தியானம்
செய்து பார் ! அமைதி கிடைக்கும் ! ஆன்மீகம் புரியும் .ஆன்மீகம் என்பது வாதித்து வெல்லும்
சமாச்சாரமல்ல ; உணர வேடியது ; ஒவ்வொருவரும் தனித்தனியே உணர வேண்டியது…” எனக் மிகக்
கோவமாக எனக்கு தனியே பின்னோட்டம் அனுப்பிய நண்பருக்காக இன்று நான் சில செய்திகளைச்
சொல்ல வேண்டி இருக்கிறது
“தியானம் செய்யும்
போது நமது மனம் அமைதி அடைவதும் அதற்குப் பின்னால் உள்ள விஞ்ஞானமும் மூளையில் உள்ள ரசாயனங்க ளின் விளையாட்டுத்தான்.”
போல் ஜோசேப்
எனும் மருத்துவர் “தாய்நாடு” [ டிசம்பர் 2024 ]என்கிற ஈழத்தமிழர் இதழில் “போதையால் என்றும் முதுமை இல்லை” ஏனெனில் இளமையிலேயே
இறந்து போவீர்கள் என எச்சரித்து எழுதிய கட்டுரையில் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் .
அந்தக் கட்டுரையில்
மூளை குறித்து அவர் தரும் தகவல்கள் நம் கட்டுரைத் தொடருக்கும் பொருந்தும் , உங்கள்
வாதத்துக்கும் பதிலாகும் என்பதால் அதிலிருந்து நீண்ட சில பத்திகளை இங்கு கீழே தருகிறேன்
. போதை தெளியவும் அது உதவும் .
“நமது
மூளையின் அறிவியல் என்பது இன்னும் முழுமையாக புரியாத புதிராக இருந்தாலும் 100 பில்லியன் நியூரோன்ஸ் (Neurons) என்ற நரம்புக்கலங்கைளயும் அவற்றை இணைக்கும் ஸ்னாப்ஸ்(Synapse) என்ற ஆயிரம் ட்ரில்லியன் எண்ணிக்கையிலான இணைப்பான்கைளயும் கொண்ட ஓர் அற்புத படைப்பாகும். … போதையின் விஞ்ஞானத்தை முதலில் சரியா கப் புரிந்து கொண்டாலே அதிலிருந்து வெளிவருவதும் அல்லது அடிமையாகாமல் இருப்பதும் இலகுவானதாகும். “
“… நமது மூளையில்
முன் பகுதியானது தீர்மானங்கைளச் சரி யாக எடுப்பதற்கும் தர்க்கரீதியான சிந்தைனை, கற்றல், நல்லது கெட்டது தீர்மானித்தல், முடிவெடுத்தல் இப்படி பல பணிகளுக்கு பொறுப்பானது.
நடுமூளையானது நமது ஐம்புலன்கள், உடலின் அசைவுகள், நடத்தல், ஓடுதல் போன்ற தசைக ளின் இயக்கங்கள், செய்தி பரிமாற்றம் மற்றும் மூளைத் தண்டுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதால் அதனுடன் இணைந்து இதயத்தின் இயக்கம், சுவாசம், உடல் வெப்ப நிலை பேணுதல், குறிப்பாக Survival என்ற தக்கனப் பிழைத்தலும் தப்பித்தலும் செயல்படுவது மூளையின் இந்தப் பகுதி தான். மற்றும் மூளையில் உள்ள லிம்பிக்சிஸ்டம்(Limbic
system) என்ற பகுதி மிக முக்கிய மானது, ஏனென்றால் நமது மனம், கனவுகள், கற்பைனகள், உணர்வுகள் உணர்ச்சிகள், பழக்க வழக்கங்கள், உறக்கம் இப்படி பலவிதமான செயல்பாடுகளுக்கு காரண கர்த்தா இவர்தான். நாம் அழுவதும் சிரிப்பதும், அன்பு காட்டுவதும் கோபப்படுவதும், பாசமும் நேசமும், காதலும் ,காமமும், கவைலயும், பயமும் இப்படி எல்லாவற்றிற்கும் பின்புலத்திலிருந்து நம்மை ஆட்டிவைப்பதும் இந்த கதாநாயகன் தான்.”
“ஒருவர் போதைக்கு
அடிமையாகிறார் என்றால் அவைர சமூகம் கேவலமாக பார்ப்பதும் தள்ளி வைப்பதும் ஒதுக்குவதும் இயல்பு. அவர் செய்யும் சமூக விரோதச் செயல்களுக்கு யார் பொறுப்பு? அவரா? அவரது மூளையா? அவரது மனமா? வாழ்க்கை முறையா? குடும்பமா? சமூகமா? என்றால் நாம் இதுவைர சொல்லிவரும் பதில்கள் எல்லாம் கொஞ்சம் சந்தேகத்தை எழுப்புகின்றன. ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டுங்கள், இரக்கம் காட்டுங் கள்..., இப்படி தொன்று தொட்டு வாய் நிறைப் பேசுகிறோம். ஆனால், இதற்கும் பின்னால் இருக்கும் விஞ்ஞானத்தைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை .”
“தொடக்கத்தில்
குறிப்பிட்ட மூளை நரம்புக் கலங்கள் மற்றும் அதில் உள்ள பல்லாயிரம் கோடி இணைப்புகள் என்ற ஸ்னாப்ஸ்களில்(Synapse) ஆயிரக்கணக்கான நியூரோடிரான்ஸ்மிட்டர்ஸ்(Neurotanmitters)
என்ற நரம்பு ரசாயனங்கள் உள்ளன. அவற்றைஅவ்வப்போது தேவைக்கேற்ப சுரப்பது இந்த மூளையின் லிம்பிக் சிஸ்டம் தான். அதில் குறிப்பாக Dopamine,
Oxytocin,Serotonin,Endorphine, GABA.., இப்படி
பல நூறு. அவசியத்தை பொறுத்து சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். ஒக்ஸிரோ- ஸின் இல்லை என்றால் நீங்கள் ஒருவைர ஒருவர் நேசிக்க முடியாது, அன்பு காட்ட முடியாது, ஏன் நீங்கள் காதலிக்கவே முடியாது. இந்த என்டோர்பின் மற்றும் டொப்பாமின் இல்லை யென்றால் நீங்கள் சிரித்து மகிழ முடியாது, இன்பத்தையும் வாழ்வின் எந்த சந்தோஷங்கைளயும் அனுபவிக்க முடியாது. அது மட்டுமல்ல, அட்ரினலின் GABA போன்ற நியூரோகெமிக் கல் உங்களிடம் இல்லை என்றால் Survival என்ற சவால்களை எதிர்கொண்டு போராடி வெற்றி
பெறுதல் இல்லாமல், உயிர் வாழ்தலே கேள்வியாகிவிடும். ஆம். இப்படி நமது மூளையைப் பற்றி இன்னும் அறியேவண்டியது ஏராளம் உண்டு.”
“இனிப்பை
ருசித்து சுவைக்கிறீர்கள், காதலிக்கோ மனைவிக்கோ குழந்தைக்கோ முத்தங்கள்
கொடுக்கிறீர்கள், அது உங்களுக்கும் பிடிக்கிறது. காதலியின் அடுத்த முத்தத்திற்காக காத்திருந்து ஏங்குகிறீர்கள். மேலும் நாங்கள் ஒரு நல்ல விடையத்தை செய்யும்போது யாராவது நம்மைப் பாராட்டமாட்
டார்களா என்று ஒரு சிறிய நன்றிக்காக, பாராட்டுக்காக ஏங்கித் தவிக்கிறோம். போட்டிகளில் வெற்றி பெறத்துடிக்கிறோம். இப்படி, இவை எல்லாம் ஒருவித போதைதான். இவை மீண்டும் மீண்டும் செய்தாலும், மூளை செய்யத் தூண்டினாலும் அதனால் எந்தவித பாதிப்புகளும் இல்லை. அதேபோலத் தான் நாம் தேநீர், காப்பி அருந்துவதும், ஏன் தியானம் செய்யும் போதும் நமது மனம் அமைதி அடைவதும் அதற்குப் பின்னால் உள்ள விஞ்ஞானமும் மூளையில் உள்ள ரசாயனங்களின் விளையாட்டுத்தான்.”
“மாறாக,
போதை மருந்துகளும் மதுவும் கஞ்சாவும் அப்படி அல்ல. அதில் உள்ள ரசாயனங்கள் மூளையிலும் உடலிலும் உள்ளத்திலும் பல பாதிப்புகைள உண்டாக்குகின்றன.
முதல் முறை எடுக்கும் போது ஒரு தற்காலிகமாக, நான் முன்பு குறிப்பிட்ட நியூரோ கெமிக்கல்ஸ்(Neurochemicals)
போன்றவற்றை தூண்டி ஒருவித கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் மனதில் இன்பத்தையும் உண்டாக்கி விடுகின்றது. இந்த உணர்வுகள் மூளையின் லிம்ப்பிக் சிஸ்டத்தில் உள்ள நினைவுப் பதிவுகளில் உள்வாங்கப்பட்டு ஒரு புதிய, புதிய அனுபவம் என்பதைப் பதிவு செய்கிறது. மீண்டும் அந்த நியூரோ கெமிக்கல்ஸ் குறையும் போது லிம்பிக் சிஸ்டமானது நடுமூளைக்கு தகவல் கைளை அனுப்பி நமது வழக்கமான அன்பு பாசம், பாராட்டு மகிழ்ச்சி, வெற்றி இவைகைள விட செயற்கையான போதை ரசாயனங்களால் கிடைக்கும் கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் உயர்ந்தது, எந்தவித முயற்சியும் இல்லாமல் இலவசமாக இலகுவாக கிடைக்கிறது, அதனால் மீண்டும் மீண்டும் இதுவே பரவாயில்லை என்ற உணர்வினை தீர்மானங்களை எடுக்கும் முன்மூளைக்கு தகவல்களைச் சொல்லும். அதை ஏற்றுக் கொண்டு முன்மூளையும் முடிவெடுப்பதால் போதை மருந்துகளின் மீது ஒரு ஆசையினைத் தூண்டி தொடர்ச்சியாக எடுப்பதில் ஆர்வம் உண்டாகிறது.”
“அதன்
பின்பு இப்படி பல நாட்கள் தொடர்ந்தபிறகு,
நடுமூளையினையும் நான் முன்பு குறிப்பிட்ட லிம்பிக் சிஸ்டம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும். பிறகென்ன போதை மருந்தோ, மதுவோ, கஞ்சாவோ எதுவோ... அதை எடுக்கவில்லை என்றால் நடுமூளை தனது வேலையைக் காட்டத்
தொடங்கிவிடும். கை, கால் நடுக்கம், இதயப் படபடப்பு, மூச்சுவிடுவதில் சிரமம், பதட்டம், பயம், மனச்சோர்வு, எதிலும் விருப்பமின்மை, பசியின்மை, தலைவலி, தூக்கமின்மை, உடல் வலி... இப்படி பல அறிகுறிகளை உண்டாக்கிவிடும்.
இவைதான் மருத்துவத்தில் வித்ரோவல் சிம்டம்ஸ்(Withdrawal
symptoms) என்று அழைக்கப்படுகிறது. மீண்டும் போதை ஏறும்போது மட்டுமே இந்தக் குணங்குறிகள் எல்லாம் மறைந்துவிடும். “
“பின்னர்
நடுமூளை Survival என்ற உயிர் வாழ்தலுக்கு தக்கனப் பிழைத்தல் எனும் தன் ஆயுதத்தைக் கையில்
எடுத்துக் கொள்ளும். எப்போதுமே முழு மூளையினையும் உடலையும் மதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து மிரட்டிக் கொண்டே இருக்கும். இந்த நிலை போதைக்கு அடிமையான ஒருவருக்கு ஆபத்தான கட்டமாகும். இதை மருத்துவத்தில் அடிக்சன்(Addiction) என்று அழைக்கிறோம். இவ்வாறாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் நபர்கள் பல்வேறு விதமான உடல், உள நோய்களுக்கு ஆளாகின்றனர்.
சமூகத் தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு தனிமை உணர்வு மேலாங்குகிறது. பாதுகாப்பற்ற உணர்வும் அதனால் சமூக விரோத செயல்கள் மீதான தொடர்பும் ஈடுபாடும் தலைதூக்கும். “
ஆக, போதைக்கு
அடிமை ஆக்குவதும் மூளையின் செயல்பாடுதான் . அன்புக்கோ காதலுக்கோ நட்புக்கோ அடிமையாக்குவதும்
மூளையின் வேலைதான் .மனம் என்பதும் மூளையின் செயல்பாடுதான் . மூளை எவ்வளவு நுட்பமானது
என்பது இதன் மூலம் விளங்க வில்லையா ? தியானத்தில் மன அமைதி கிடைப்பதும் மூளையின் வேலைதான்
. டீ காபி தியானம் எல்லாவற்றையும் ஒரு கோட்டில்தான் இணைக்கிறது மூளை .தியானத்துக்கு
என ஸ்பெஷல் எதுவும் கிடையாது .இப்படியே நீட்டினால் ஆத்மா ஆன்மவிருப்பம் என்பது எல்லாம் மூளை ஆட்டுவிக்கும் செயல்தான் . வேதியியல்
வினைதான் என்பது விளங்கும் . விளங்காமல் அதற்கு சிலர் அடிமை ஆகி இருப்பதும் மூளையின்
வேதியியல் விளையாட்டே .ஆம் போதை பழக்கம் எப்படி அடிமை ஆக்குகிறது என்பதைப் பார்த்தோமே,
அப்படித்தான் இந்த ஆன்மீக மனோபாவமும் .
இவ்வளவு சொல்லக்
காரணம் ஒரு நண்பர் மதம் ,மூடநம்பிக்கை ,சம்பிரதாயங்கள் எல்லாம் நான் நம்பவில்லை.ஏற்கவில்லை .ஆனால் ஆன்மீகம் அறிவியலுக்கு
நெருக்கமானது என்று சொன்னார் . ஆயின் உண்மை அதுவல்ல என்பதை போதைக்கு அடிமையாக்கும்
மூளை பற்றிய விவரணையே சொல்லும் .
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் “ கடவுள் உண்டா
?” என்கிற ஒரு சிறு பிரசுரம் எழுதி இருந்தார்
.அதில் கடைசியில் சொல்லுவார் .நீ தினசரி காலையில் காபி சாப்பிடுகிறாய் .ஒரு நாள் சாப்பிடாவிட்டால்
தலைவலிக்கிறது என்பாய் .அது பழக்கத்தால் வந்தது .காவி குடிப்பதிலிருந்து விடுபடுவது
பெரும் போராட்டம் .கடவுள் நம்பிக்கையும் பழக்கத்தால் மனதில் உறைந்து போயுள்ளது .ஒரே
நாளில் தூக்கி எறிவது சிரமம்தான் .ஆயினும் முடியும் மெல்ல மெல்ல விடுபட வேண்டும் .
[ அந்த பிரசுரம் யாரிடமாவது இருந்தால் வாங்கிப் படியுங்கள் ]
அது சரி
! ஆனாலும் என இழுப்போருக்கு மேலும் சொல்வோம்
தொடர்வோம்
சு.பொ.அகத்தியலிங்கம்.
0 comments :
Post a Comment