இடுக்கண்
வருங்கால் நகுக !
நடை பயிற்சி
செல்லும் போது
முதியோர்கள்
கையில் ஊன்றுகோல்
அவசியம் வேண்டும்
வெறி நாய்களிடமிருந்து
தன்னைக் காத்துக்கொள்ள.
பாதம் முதல்
இடுப்பு வரை
கடிபடா கவச
உடை
பாதுகாப்புக்காக
தலைக்கவசம்
போல்
கட்டாயமாக்கலாம்
!
இடுப்புக்கு
மேலே
என்ன செய்வது
கேடயம் தாங்கி
நடப்பது
வீரர்க்கு
மட்டுமல்ல
அனைவர்க்கும்
நன்று !
[ நேற்று
நடை பயிற்சியின் போது நாங்கள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டது . ஜீவகாருண்ய வழியில் வேறு
எப்படி யோசிக்க முடியும் ?]
நடை முடிந்து
பெஞ்சில்
உட்கார்ந்ததும்
கொசு கடிக்கிறது
வலையைச் சுற்றிக்கொண்டே
திரியலாமோ
?
எலிப் பொறி
கரப்பான்
பூச்சி மருந்து
வாங்கச் சொன்னார்களே
இனி வீட்டில்
என்ன பதில்
சொல்வது ?
இடுக்கண்
வருங்கால் நகுக !
சுபொஅ.
21/09/25.
0 comments :
Post a Comment