ஒவ்வொருக்குள்ளும்
இருக்கிறது
இரண்டு முகம்
தாராளம் கஞ்சத்தனம்
ஒழுக்கம்
ஒழுக்கமின்மை
நேர்மை நேர்மையின்மை
பொறுப்பு
பொறுப்பின்மை
அறம் அறமின்மை
மனிதம் மனிதமின்மை
விசால இதயம்
குறுகிய மனசு
அன்பு அன்பின்மை
ஒவ்வொருக்குள்ளும்
இருக்கிறது
இரண்டு முகம் !
ஊரே கொண்டாடும்
ஒருத்தருக்குள்ளும்
ஓர் வில்லன்
தூங்கிக் கொண்டிருப்பான்
ஊரே பழிக்கும்
வில்லன் இதயத்தின்
ஓரத்திலும்
ஈரக்கசிவு இருக்கும் .
யார் யாருக்கு
எப்போது
எங்கு ஏன்
எப்படி
என்பது மட்டுமே
கேள்வி !
ஒவ்வொருக்குள்ளும்
இருக்கிறது
இரண்டு முகம் !
சுபொஅ.
11/09/25.
0 comments :
Post a Comment