கூட்ட மேலாண்மை [ crowd management
] தனிக்கலை .
அதில் கடைசி இடம் : இது சரியா ?
பித்துக்குளித்தனத்துக்கு முடிவில்லையா
?
நேற்று நடை
பயிற்சி சென்றேன் .மழை வந்துவிட்டது . வேறு வழியில்லை ஒரிடத்தில் ஒதுங்கினேன் .எனக்கு
முன்பே அங்கு வழக்கமாக வழியில் சந்திக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் ஒதுங்கி
இருந்தனர் . உரையாடலில் கேலியாக , “ என்ன தமிழர்கள் ! ஒரு சினிமா நடிகனைப் பார்க்கப்போய்
40 பேரு செத்துருக்காங்க …” என்றார் .
அவரின் ஏளனம்
உறுதினாலும் . கொஞ்சம் அமைதி காத்தேன் . மேலும் கொஞ்சம் பேசலானார்கள் . ஜூன் மாதம்
இங்கு [பெங்களூரில் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கிரிகெட் பார்க்கப் போன ரசிகர்கள் நெரிசலில்
11 பேர் செத்தனர் என்பதை அவர்களுக்கு நினைவூட்டி வரிசையாக சிலவற்றை சொல்ல ஆரம்பித்ததும்,
“ ஐயையோ பத்திரிகைக்காரன்கிட்ட வாய் கொடுதிருக்கக்கூடாது “ன்னு சொல்லிகிட்டே நடக்கலானார்கள்
. மழையும் சற்று ஓய்ந்திருந்ததால் நானும் நடக்கலானேன்.
நடக்கும்
போது என் நினைவுத் திரையில் பலகாட்சிகள் ஓடலாயின .
41 மனித உயிர்கள்
பலியாகி உள்ளன . வெறும் பிம்ப அரசியலை முன்னிறுத்தி பொறுப்பற்றதனத்தோடு நடந்து கொண்டதால்
ஏற்பட்ட விபத்து . எம் ஜி ஆருக்கு இதைவிட பெருங்க்கூட்டம் இதைவிட அதிக நேரம் காத்திருந்தது
உண்டு தமிழ்நாட்டு வரலாற்றில் .ஆனால் கட்டுப்படுத்த உள்ளூர் கள தலைவர்கள் இருந்தனர்
.ஓர் அரசியல் இருந்தது .இப்போது விஜயிடம் எதுவும்
இல்லை ; முதலமைச்சர் எனும் பெருங்கனவைத் தவிர . யாரோ ஆட்டுவிக்க ஆடும் பொம்மைகளால் விளைந்த விபரீதம்
இது .
2016 ஜெயலலிதா
ஹெலிகாப்டரில் பறந்து பறந்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது பல மணி நேரம் தாமதமானதால் சேலத்தில் மூன்று பேர்
விழுப்புரத்தில் இரண்டு பேர் வெயிலில் மயக்கமடைந்து சாவு . ஆனால் உள்ளூர் தலைமை பொறுப்பாய்
செயல்பட்டதால் பதட்டம் கவ்வவில்லை .சாவு அதிகரிக்கவில்லை . ஒப்பிட்டால் எங்கு பலவீனம்
என்பது புரியும் .
ஸ்டாலின்
ஆட்சியில் 2024 மெரினா கடற்கரை விமான சாகசத்தின்
போது வெயிலில் மயக்கமடைந்து நான்கு பேர் சாவு.
அது அரசின் பொறுப்பற்றதனமே என்பதில் ஐயமில்லை .
1992 பிப்ரவரி
ஜெயலலிதா சசிகலா மகாமகத்தில் குளிக்க கும்பகோணம் சென்றனர் .அங்கு ஏற்பட்ட நெரிசல் மற்றும்
இடிபாட்டில் 48 பேர் உயிர் இழ்ந்தனர் .
2015 ல் ஜெயலலிதா
ஆட்சியில் வெள்ள நிவாரணம் வழங்கும்போது வியாசர் பாடியில் நெரிசலில் பலர் சாவு .
இந்தியாவில்
2001 க்கும் 2022 க்கும் இடையே மட்டும் 3074 பேர் நெரிசலில் மிதிபட்டு செத்துள்ளனர்
.2024 ஜூலையில் உத்திரபிரதேசத்தில் போலோ பாபா
சாமியாரைத் தரிசிக்கப் போய் செத்தவர்கள் 128 பேர் நெரிசலில் மிதிபட்டு சாவு .
உத்திர பிரதேஷ்
பாரபங்கி அஷுனேஸ்வர் ஆலயம் , ஹரித்துவார் மனஸா தேவி கோயில் ,பூரி ஸ்ரீ குண்டிச்சா கோயில்
, கோவா லையரி தேவி கோயில் .திருபதி வெங்கடாஜலபதி கோயில் ,சபரிமலை இப்படி வரிசையாக பலகோயில்களில் நெரிசலில் மிதிபட்டு
சாவு . டெல்லி ரயில் நிலையத்தில் பண்டிகை கால நெருக்கடியில் மிதிபட்டு சாவு .செத்தவர்கள்
எண்ணிக்கை தொடந்து செய்தியாக வருகிறது .பதட்டப்படுகிறோம் .கண்ணீர் விடுகிறோம் . மறந்து
போகிறோம் .
உலகெங்கிலும்
கூட இதுபோல் நடந்துள்ளன. 2015 ல் மெக்காவில் நெரிசலில் 2300 பேர் மரணமடைந்த விபரம்
அறிவோம் . 1922 அக்டோபரின் தென்கொரியா சியோலில் ஒரு விழாவில் மிதிபட்டுச் செத்தது
159 பேர். இந்தோநேஷியாவில் 135 பேர் இப்படி பல செய்திகளாய் கடந்து போகிறோம்.
ரசிகன் ,
விளையாட்டு ஆர்வலன் ,பக்தன் , படித்தவன் ,படிக்காதவன் , அந்த மத நம்பிக்கையாளன் ,இந்த
மத நம்பிக்கையாளன் , அந்த நாட்டுக்காரன் ,இந்த நாட்டுக்காரன் என எங்கும் நெரிசல் சாவு
நடக்கிறது . கும்பல் மனோநிலையும் வதந்தியும் பதட்டமும் இந்த நெரிசல் சாவின் அடிப்படை
ஆகும் . எல்லா சாவுக்கு பின்னாலும் ஒருவித பித்துபிடித்த மனோநிலையில் கூடும் கூட்டமே
இந்த சாவுகளின் காரணி ஆகிறது .
இந்த நாளில்
கோயிலுக்குப் போனால்தான் சாமி அருள் புரிவாரா ? இந்த சாமியாரை தரிசித்தால் தரித்திரம்
போகுமா ? இந்த சினிமாவை இன்னொருநாள் பார்த்தால் என்ன ?அவர் பேச்சை தூர இருந்து கேட்டால்
போதாதா ? அலைபேசியும் தொலைகாட்சியும் கணினியும் எல்லாவற்றையும் உங்கள் கண்ணுக்குள்
கொண்டு வந்து காட்டுதே . நெடுநேரம் பார்க்கலாமே .கேட்கலாமே . நொடி தரிசனத்துக்காக முண்டி
அடித்து சாவது விவேகமா ?
கும்பல் மனோநிலை
இதை எல்லாம் யோசிக்காது .இந்த பித்துக்குளித்தனம் இருக்கும் வரை இத்தகைய சாவுகள் தொடரத்தான்
செய்யும் . ஆம் .எவ்வளவு கெடுபிடிகள் , ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் மீறி நடப்பதும்
உண்டு .இவற்றில் அக்கறை காட்டாமல் அலட்சியம் காட்டிய அரசின் பொறுப்பற்ற தனங்களும் உண்டு
.
கீழ்மட்ட
அளவில் தலைமைப் பண்புமிக்கவர்கள் இருந்தால் ,வழிகாட்டினால் ,அதைப் பின்பற்றி நடந்தால்
நெரிசல் சாவுகள் நேராது . கூட்ட மேலாண்மை [ crowd management ] தனிக்கலை .நாம் அதில்
கடைசி இடம் என்பதுதான் வேதனை .
தினசரி போக்குவரத்து
நெரிசலைப் பாருங்கள் போக்குவரத்து விதிகளுக்கு
உட்பட்டு வரிசையாக இடம் விட்டு போய்க்கொண்டே
இருந்தால் பிரச்சனை மிகக்குறைவு .முந்திச் செல்ல முயலுவோரால் மொத்த ஒழுங்கும் சீர்குலைந்து
தேவையற்ற தாமதமும் வந்து சேரும் . நாம் எப்போது பொது ஒழுங்கை மதித்து நடக்கப் போகிறோம்
?
கரூர் கோரநிகழ்வின்
முதன்மை குற்றவாளி விஜயின் அணுகுமுறையும் ரசிக பித்துகுளித்தனமுமே ! அரசு தரப்பின்
சில சறுக்கல்களும் இருக்கும் ! ஆய்க ! திருத்துக !
சுபொஅ.
29/09/25.
0 comments :
Post a Comment