சொல்.38

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .38 [ 6 /10/2018 ]


முகூர்த்த நாளில் ஐந்தாறு திருமண அழைப்புகள் .அருகருகே இருப்பினும் போய்  “தலையைக் காட்டிவிட்டாவது” வரலாம் . வெவ்வேறு ஊர் மூலைக்கு ஒன்றானால் என்ன செய்வது ?

எல்லோரும் இந்தச் சிக்கலை அனுபவித்திருப்போம் .ஆனாலும் நம் வீட்டில் திருமணம் நிச்சயிக்கும் போது இதை எல்லாம் யோசிப்பதே இல்லை .ஆண்டு முழுவதும் சுமார் 56 மூர்த்தநாட்களே பஞ்சாங்கம் சுட்டிக்காட்டும் பின் என்ன செய்வது என்பதே எல்லோரின் கேள்வியும் .

எல்லா நாளும் நல்ல நாளே என்கிற தெளிவுவரின் இந்த சிக்கலில் இருந்து எளிதில் மீளலாம் . ஆனால் பஞ்சாக்கத்திலிருந்து மீள முடியாதோர் பாடு சிக்கலே !

கோவை போன்ற நகரங்களில் முகூர்த்த நாளன்று கோவிலிலோ / வீட்டிலிலோ பத்து இருபது நெருங்கிய உறவினரை மட்டும் அழைத்து திருமணம் முடித்துவிட்டு .மண்டபம் கிடைக்கிற வசதியான நாளில் வரவேற்பு நடத்திவிடுகின்றனர் .இதுவும் ஒரு வழி .

என் நண்பர் ஒருவர் இதே போல் வீட்டில் திருமணம் முடித்தார் .தன் அலுவலக நண்பர்களுக்கு அவர்களுக்கு வசதியான நாளில் அலுவலகம் அருகில் ஒரு கெட் டுகெதர் ஏற்பாடு செய்துவிட்டார் .அதுபோல் தந்தை ,மாமனார்வீடு , மணைவி நண்பிகள் என அவரவர் வந்துபோக தோதாக சிறிய சிறிய சந்திப்புகள் ஏற்பாடு செய்துவிட்டார் . செலவு அதிகமாகுமோ எனக் கேட்டேன் . இல்லை என கணக்குச் சொன்னார் .மேலும் எல்லோரோடும் நெருங்கி கைகுலுக்க, உறவாட. உரையாட இனிதாக இருந்தது என்றார் .இதுவும் சரிதான் .

திருமணமோ அல்லது வேறு எந்த நிகழ்வோ நடத்துவோர் வசதியை மட்டுமல்ல வந்துபோவோர் வசதியையும் யோசித்து அவரவர் சூழலுக்கு ஏற்ப விதவிதமாய் திட்டமிடலாம் .சடங்கு போன்ற கும்பல் சந்திப்பு வேண்டாமே !













































0 comments :

Post a Comment