’நான்’ என்பதைவிட
‘நாம்’ என்பது நல்லதுதானே
அப்படித்தான்
நினைத்திருந்தேன் நானும்
அவன் ‘நாம்’
என்று சொன்னபோது
முதலில் புரியவில்லை
புரிந்த போது
உரக்கச் சொன்னேன்
அந்த ‘நாம்’
இல் நான் இல்லை .
வெறுப்பை
விதைக்கும் ‘நாம்’இல்
‘நான்’ ஒரு
போதும் இருக்கவே மாட்டேன்
யாருக்கு
எதிரான ’நாமிலும்’’நான்’இல்லை.
இப்படி ‘நான்
‘ சொல்வது திமிரல்ல
நல்லிணக்கம்
.பன்மையின் வலிமை .
’நான்’ சொல்வது
புரிந்ததா ?
சுபொஅ.
13/12/25.
0 comments :
Post a Comment