கண்கள் மெல்ல
மெல்ல பார்வையைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றன.
காதுகள் கொஞ்சம்
கொஞ்சமாய் கேட்கும் திறனை இழந்து கொண்டிருக்கின்றன .
மூக்கு படிப்படியாய்
நுகரும் சக்தியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது .
நாக்கு அணு
அணுவாய் மரத்துக் கொண்டிருக்கிறது
வாய் வெறுமே வாசலாய்ச் சுருங்கிக் கொண்டிருக்கிறது
கை கால்கள்
முடங்கி கிடக்கின்றன
மூளை அழுகி
நாறுகிறது
மரணத்தை முறைப்படி
எப்போது அறிவிப்பார்கள்?
‘ இந்திய
ஜனநாயகம்’ புதைக்கப்படுமா ? எரிக்கப்படுமா ? கழுகு காக்கைத் தின்ன வீசப்படுமா ?
எந்த மதத்து
சாமிக்கு சரியாகத் தெரியும் ? கேட்டுச் சொல்லுங்கள் பக்தர்களே !
சுபொஅ.
28/12/25.
0 comments :
Post a Comment