தனிப்பட்ட
முறையில் யாரோடும் பகைமை இல்லை .
என்னைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம் ; அதனால் அவரை எனக்கு பிடிக்காது என்பது இல்லை .
அந்தந்த நேரத்தில் அவரவர் நியாயம் அப்படியே இறுதிவரை தொடர வேண்டிய அவசியமில்லை .
ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு செயலும் அந்ததந்த நேரத்துத் தேவை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை .
முன்பு பேசிய வார்த்தைக்குள்ளேயே யாரும் ஆணி அடித்து நின்று கொண்டிருக்க முடியாது .
வாழ்க்கையும் சிந்தனையும் தினம் தினம் புதிதாகிக் கொண்டே இருக்கும் . அதை தடுக்க முடியாது .
ஒரு முளையில் கட்டிப் போட முனையும் சாதி ,மதம் , கடவுள் அனைத்தையும் அறுத்தெறிந்தாக வேண்டும்.
நீ , உன் குடும்பம் , உன் சகமனிதன் ,சக உயிர் , ஊர்
, நாடு , உலகம் , தண்ணீர் ,ஆகாயம் ,காற்று ,பூமி , எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் !
எல்லாம் உனக்கு மட்டுமல்ல அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும் எல்லா தலைமுறைக்கும் சொந்தமானது .
கண் கெட்ட
பின்போ ; கெடும் முன்பே ஞானம் வந்தால் சரி !
புதிதாகச்
சிந்திக்கப் பழகு !
மனிதனாக வாழப்
பழகு !
சு.பொ.அ.
29 /12
/25.
[ விடை பெறும்
ஆண்டு மண்டையில் குட்டிச் சொன்னவை ]
0 comments :
Post a Comment