நேற்றைய கள்ள
ஓட்டும் ; இன்றைய ஓட்டுத் திருட்டும் …
“ கள்ள ஓட்டு”
புதிதல்ல ; தேர்தல் தோறும் பேசப்படுபவைதான் . செத்தவர் வாக்களிப்பதும் , உயிரோடு இருப்பவர்
செத்துப் போவதும் தேர்தல் அதிசயங்கள் .ஆங்காங்கு வலுவான கட்சியோ / சாதியோ /தனிநபரோ
வாக்குச் சாவடியைக் கைப்பற்றி தங்களுக்குத் தாங்களே வாக்களித்துக் கொள்வது அது . ஆள்
மாறாட்டம் செய்து வாக்களிப்பதும் “ கள்ள ஓட்டே” . இவை எல்லாமே சட்டப்படி குற்றம் .
கைதாகலாம் .வழக்கு பாயலாம் . ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்படலாம் . இவை எல்லாம்
அங்கொன்று இங்கொன்றாக நடக்கும் . இதுவே தவறுதான்
. தவிர்க்க வேண்டும் . தடுக்க வேண்டும் .
இப்போது அம்பலப்படுத்தப்படும்
“ ஓட்டு திருட்டு” என்பது தேர்தல் ஆணையமே திட்டமிட்டு
மோசடி செய்து பாஜக வென்றதாக அறிவிக்கும் மகா மோசடி .ஜனநாய விரோத செயல் . வேலியே பயிரை
மேயும் கொடூரம் . இதனை செய்வதற்காகவே தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் இருந்து
உச்சநீதி மன்ற நீதிபதியை நீக்கிவிட்டு உள்துறை அமைச்சரை சேர்த்தது மோடி சர்க்கார்
. நாக்பூர் கைக்கூலி – ஆர் எஸ் எஸ் அடியாட்களை நியமித்து மோசடியை அரங்கேற்றியது . கொள்ளையடிக்க
வசதியாய் தம் கொள்ளைக்கார கூட்டத்தில் ஒருவனையே காவலாளியாக நியமிக்கும் கொடுமை .
ஏற்கெனவே
நீதிமன்றம் , அமலாக்கத்துறை ,வருமானவரித்துறை ,ஊடகங்கள் ,கல்வி , ,சிபிஐ என ஒவ்வொரு உறுப்பையும் தன் சாவிக்கு இயங்கும் ரோபட்டாக மாற்றிய
நாக்பூர் கண்ட்ரோல் ரூம் தேர்தல் ஆணையத்தையும்
கைப்பற்றிவிட்டது .அதற்கேற்ப சட்டத்தை திருத்தியது மோடி சர்க்கார் . இப்போது தேர்தல்
ஆணையம் ’ஓட்டு திருடும் இயந்திரமாகிவிட்டது’ .
EVM வாக்கு
இயந்திரமும் மோசடிக்கான கைக்கருவி ஆக்கப்பட்டுவிட்டது .
“ நான் அளிக்கும்
வாக்கு நான் வாக்களித்த கட்சிக்கே போகும் என உத்தரவாதம் தரமுடியுமா தேர்தல் ஆணையமே
!” இப்போது மக்களின் கேள்வி இதுவே !
நாளை சுதந்திரதினம்
.
ஆயின் தேர்தல்
ஜனநாயகம் நாக்பூர் நாசசக்திகளிடம் சிக்கிச்
சீரழிவதை எப்படிக் கொண்டாடுவது ?
இதை எதிர்த்த
போராட்டம் எளிதல்ல ; நெடிய மக்கள் போராட்டத்துக்கு தயாராவோம் ! வெல்வோம் !
சுபொஅ.
14/08/25.
0 comments :
Post a Comment