விழிப்பு
கண்ணை திறந்து
கொண்டுதான் படுத்திருக்கிறேன்
என்னைச் சுற்றிலும்
இருளின்ராஜ்யம்தான்
இருட்டு என்பது
என்ன குறைந்த ஒளிதானே
மெல்ல மெல்ல
ஒவ்வொன்றாக புலனாகிறது
ஆயினும் மனதை
அப்பியுள்ள இருட்டு விலகவில்லை
ஆயிரம் பேய்களின்
நர்த்தனம் கூக்குரல்
கதிரவன் மெல்ல
நகைக்கிறான் கிழக்கில்
இமை சொருகிக்
கொண்டு குறட்டை
ஒவ்வொரு நாளும்
இதேகதை தொடர்கிறது
விழிப்பு
என்பது எப்போது? வெகுதூரமா ?
சுபொஅ.
18/08/25.
0 comments :
Post a Comment