நேற்று எங்கு இருந்தன ?
நேற்று வாசித்த
புத்தகத்தை
இன்று வாசித்தேன்
புதிய சாளரங்கள்
திறந்தன
அவை நேற்று
எங்கிருந்தன ?
நேற்று பழகிய மனிதனிடம்
இன்று பழகினேன்
ஏதோ குறைபாடுகள்
தென்பட்டன
அவை நேற்றும்
இருந்தனவா ?
நேற்று நடந்த
தெருக்களில்
இன்று நடக்கிறேன்
அந்நியனாய்ப்
பார்க்கிறார்கள்
அந்தத் தெரு
எங்கே போனது ?
நேற்றில்
தொலைந்துபோன நானும்
இன்று காணும்
நானும்
ஒன்றல்ல எனில்
நேற்றைய நான்
தொலைந்த இடம்
எது ?
மாற்றம் ஒன்றே
மாறதது
மாற்றத்தின்
சூக்குமத்தை
மதத்தில்
தேடின் கிடைக்காது
மார்க்சியத்தில்
தேடு !
சுபொஅ.
16/08/25.
0 comments :
Post a Comment