’நெல்லு மரம்’
பார்க்க
பயணம் போகும்
குழந்தைகள்!
புல்லுக்கு
நீர் பாய்ச்சும் அதிசயத்தை
இமை மூடாமல்
பார்த்தனர் !
வாசமுள்ள
பூக்கள் வாடிவிடுவதை
கண்டு கண்கலங்கினர்
!
பந்தியில்
இலைபோட்டு பரிமாறியதை
பார்த்து
துள்ளிக் குதித்தனர் !
பச்சைக் குதிரை
தாண்டி விளையாட
பரவசமாய்
ஓடினர் !
பிளாஸ்டிக்
, பாஸ்ட்புட் .டிஜிட்டல் உலகிலிருந்து
விடுபட்ட
குழந்தைகள் !
சுபொஅ.
21/07/25.
0 comments :
Post a Comment