முக்கண் முதல்வா !

Posted by அகத்தீ Labels:

 




முக்கண் முதல்வா !

தென்னாடுடைய சிவனாரே !

அனைத்தும் அறிந்த உமக்கே

மூன்று கண்கள் தேவைப்படும் போது

எங்களுக்கு இரண்டு கண்கள்

எப்படிப் போதும் ?

குறைந்தது நாலுகண்கள் தேவை

 

நடக்கும் போது

சாலை மேடு பள்ளங்களை

பார்த்துப் பார்த்து நடக்க இரு கண்கள் !

எதிர் வரும் வாகனங்களை

எதிர் கொண்டு வழிவிட்டு நடக்க

கட்டாயம் வேண்டும்

இன்னொரு கண்கள் !

அருள் தருவாயா சிவனே !

 

அது சரி ! தமிழில்ச் சொன்னால்

உனக்குப் புரியாதாமே !

நீ பிஎம் ஸ்ரீ பள்ளியில்

சமஸ்கிருதப் மீடியத்தில்

படித்தவனாமே !

நான் சொல்லவில்லை ஈஷா !

தனியாக சுடுகாடமைத்து

உன்னை அதன் ‘ஓணராக்கி’ [owener ] இருக்கும்

சிவா  ராத்திரி வியாபாரி

கலர் கலர் ரீல் டான்ஸ் சாமியார்

சொல்லுகிறான்!

 

சிவா !

எமக்கு நாலு கண்கள்

கட்டாயம் வேண்டும்

நாலு பக்கமும் பார்த்து

எச்சரிக்கையாக ஒதுங்க  

ஆனால்

வேண்டவே வேண்டாம்

நியாயத்தைப் பொசுக்கும்

நெற்றிக்கண் !

 

சுபொஅ.

22 /02 /26 .

 


0 comments :

Post a Comment