சொல்.80

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .80 [ 25 /11/2018 ]
சாவு வீட்டிற்கு துக்கம் கேட்க வருகிறவர் ஒவ்வொருவர் உள்மனதிலும் என்ன ஓடுகிறது என்பதை படம் பிடிக்க ஏதேனும் கருவி இருக்குமானால் எவ்வளவு இயந்திரத்தனமாய் நாம் இயங்கிறோம் என்பது புரியும் . இப்படி ஒரு முறை நான் சொன்ன போது விவாதம் அதைச் சுற்றி சூடுபிடித்துது .

மெய்தான் துக்கம் கேட்பது ஒரு சடங்கு . இன்னும் சொல்லப் போனால் கல்யாணத்துக்கு நல்லதுகளுக்கு போகாவிடிலும் இழப்புக்கு போகாமல் இருக்க முடியாது என்கிற சமூக நிர்ப்பந்தமும் ,சில சம்பிரதாயங்களுமே பலரை உடனே அங்கு விரட்டுகிறது .கடனை வாங்கியேனும் சில செய்முறைகளைச் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது .

மரணத்தை சடங்காக்காமல் ,சம்பிரதாயக் கட்டுக்குள் சுழலாமல் மெய்யான இழப்பின் வலியை உள்ளன்போடு பங்கு போடும் காலத்தை நோக்கி எப்போது நகரப் போகிறோம் ? மரணத்திலிருந்து யாரும் தப்ப முடியாது .சிலருக்கு அது அகால மரணமாகிவிடும் . சிலருக்கு கனிந்து உதிர்வதாய் இருக்கும் . எல்லா வலியும் ஒன்றல்ல .

திருமணத்தைப் போலவே மாணத்தையும் சாதி ,மதக் கட்டிலிருந்து விடுவித்து மனிதாபிமானத்தோடு அணுகுகிற ஒரு புதிய பண்பாட்டைச் செதுக்குவது அவ்வளவு சலபமல்லதான்.ஆயினும் காலம் அதை நோக்கி நம்மை துரத்துவதை அறிவீர் !

ஆறுதல் சொல்வதும் ,அரவணைப்பதும் மனிதப் பண்பு அதனை ஒரு போதும் இழந்துவிட முடியாது ஆயினும் அங்கே தலைதூக்கும் அர்த்தமற்ற சடங்கு ,சம்பிரதாயம் ,நிர்ப்பந்தம் ,செலவு இவை தவிர்க்கப்பட வேண்டுமா ? வேண்டாமா ? கொஞ்சம் யோசித்தால் நியாயம் விளங்கும் .
Su Po Agathiyalingam



0 comments :

Post a Comment