தினம் ஒரு சொல் .62 [ 31 /10/2018 ]
கோபத்தை அடக்கு என்பதே எல்லோரும் ,எங்கும்
,எப்போதும் சொல்லும் அறிவுரையாக இருக்கிறது . ஆனால் கோபம் வராத மனிதர்களை ஒரு போதும்
சந்திக்கவே இயலாது .கோபம் எல்லோருக்கும் வரும் . உறவுகளை ,நட்புகளைக் காயப்படுத்தும்
,முன்னேற்றதுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பொசுக்கென பொங்கும் கோபம் பொல்லாதது
.வேண்டாதது .களையப்பட வேண்டியது .
கோபமும் ஒரு நல்ல உணர்வே , அதை கையாளுவதில்தான்
எப்போதும் தோல்வி அடைகிறோம் . கோபம் அது இருபக்கமும் கூர்மையான கத்தி ; அதனைப் பயன்
படுத்துவதில் மிக நுட்பம் தேவை .அதனைப் பயிலாததுதான் உண்மையானப் பிரச்சனை .
எதற்குக் கோபப்பட வேண்டும் எதற்குக் கோபப்
படக்கூடாது .எங்கு கோபப்பட வேண்டும் .எங்கு கோபப்படக் கூடாது .எப்படிக் கோபப்பட வேண்டும்
.எப்படி கோபப்படக்கூடாது .இப்படி பல நாம் கறக வேண்டும் .
ஒருவர் பணியைச் சரியாகச் செய்யாத போது வருகிற
கடமைக் கோபம் , குழந்தை தப்பு செய்யும் போது கண்டிக்கும் பாசக்கோபம் ,கணவன் மனைவி இடையே
தோன்றும் பொறுப்பான கோபம் , வாய் கூசாமல் ஒருவர் பொய்யுரைக்கக் கேட்டு வரும் சத்தியக்கோபம்
இப்படி எண்ணற்ற உண்டு . இவை போன்றவை எல்லாம் மின்மினியாய் தோன்றி மறைய வேண்டிய கண நேரக்
கோபங்கள் .நெஞ்சில் சுமக்கக்கூடாத கோபங்கள் .
சமூகத்தில் கண்ணெதிரே நடக்கும் அநீதிகள் கண்டு
உன் விழிகள் சிவக்கவில்லை எனில் நீங்கள் மனிதரல்ல மரக்கட்டையே . இந்த லட்சியக் கோபம்
இறுதி இலக்கை அடையும் வரை ஆறாமல் கனன்று கொண்டே இருக்க வேண்டும் .இந்த கோப நெருப்பை
விசிறிக் கொண்டே இருக்க வேண்டும் .
கோபப்பட வேண்டியவற்றுக்கு கோபப்படாமல் இருப்பதும்
;கோபப்படக்கூடாதத்க்கு கோபப்படுவதுமே நாம் செய்யும் மிகப்பெரிய பிழையாகும் . புரிந்தால்
நல்லது .
Su Po Agathiyalingam
0 comments :
Post a Comment