சொல்.41

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .41 [ 9 /10/2018 ]

பாரம்பரியம் மாறாததுமல்ல ;மாற்றக்கூடாததும் அல்ல . கொஞ்சம் அசை போடுங்கள் ! உங்கள் வீட்டிலிருந்தே விசாரணையைத் தொடங்குங்கள் !

நான் குழந்தையாய் இருந்த போது என் தாய் மாதம் தோறும் மாதவிடாய் நாளில் புழக்கடையில்தான் இருப்பார் .நாங்கள் அவர் அருகே போகவேண்டுமெனில் அம்மணமாகத்தான் போக வேண்டும் .தவறுதலாய் டவுஜர் ,சட்டையோடு போய்விட்டால் உடனே ஆச்சி கத்துவாள் .அந்த டவுஜர் ,சட்டையைக் கழற்றி துவைக்க போட்டுவிட வேண்டும் . இன்று எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் .பாரம்பரியம் என திரும்பிச் செல்ல முடியுமா ?

என் அக்கா திருமணத்திற்கு ரவிக்கைக்குப் பதில் கட்ஜோளியும் பிரேசியரும் வாங்கியபோதும் ஆச்சி எல்லாம் கெட்டுப்போச்சென கூப்பாடு போட்டார் .இன்று எவ்வளவு தூரம் வந்துவிட்டோம் ?

இப்படி சில மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் ஆணாதிக்கம் இன்னும் தகர்ந்த பாடில்லையே !நரம்ப்போடு பின்னியுள்ள பாலின பாகுபாட்டை களையாதவரை நாம் நாகரீகர் என சொல்லும் அருகதை உண்டோ ?

வீடானும் நாடானாலும் பாரம்பரியம் என்பது காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கும் .சாதிய அடிப்படையிலும் பாலின சமத்துவத்திற்கு எதிராக உள்ளதுமான எல்லா விதமான பழக்க வழக்கங்களும் வீட்டிலிருந்தும் நாட்டிலிருந்தும் துடைத்தெறியப்பட வேண்டும் .

ஆனால் அதற்கான இடைவிடா போராட்டம் அவ்வளவு எளிதல்ல ஏனெனில் சமூக உளவியலில் ஊறிப்போயுள்ள கசடுகளுக்கு எதிரானது அல்லவா அது .






















































0 comments :

Post a Comment