தினம் ஒரு சொல் .52 [ 20 /10/2018 ]
என் தாத்தா குடுமியையும் தலைமுடி முன்வெட்டையும்
மாற்றி கிராப்புக்கு மாறியபோது வீடே அல்லோகலப்பட்டதாம் . குடியே மூழ்கிவிட்டதாய் அவரது
தாத்தாவும் பாட்டியும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்களாம் . இத்தனைக்கும் எம் குடும்பம்
பிராமணர் அல்ல .
என் பாட்டி ஜாக்கெட் போட்ட போதும் அதே ஆர்ப்பாட்டம்தான்
.
என் அப்பா பெரிய வெங்காயத்தில் தயிர் பச்சடி
செய்யச் சொன்னபோதும் ;என் அம்மா அதை செய்த போதும் வீட்டுக்குள் பூகம்பமே வெடித்தது
. முட்டை வீட்டுக்குள் நுழைந்த போதும் அப்படித்தான் .
வீட்டுக்குள் கக்கூஸ் கட்டலாமா வேண்டாமா என்பதற்காக
நடந்த சண்டை கொஞ்சமா ?
அக்கா வயதுக்கு வந்த பின்னும் பள்ளிக்கு அனுப்ப
[ ஐம்பது அறுபது வருசங்கள் முன்பு ] அப்பா ஆச்சியோடு முட்டி மோதியது நினைவில் இருக்கிற்து
ஆனாலும் எட்டாம் வகுப்பைத் தாண்டவிடவில்லை .
ஐயர் பையன் லெதர் டெக்னாலஜி படிப்பதும் ; அருந்ததியர்
மகள் முட்டி மோதி டாக்டராவதும் மரபை மீறித்தானே ! கணித மேதை ராமானுஜம் வெளிநாடு போனதற்காக
அவர் இறந்த போது இறுதிக்கடன் செய்ய சக ஐயர்கள் மறுத்ததும் , அவர் மனைவி கிராமம் கிராமமாய்
ஓடி ஒழிந்து செய்ததும் .வரலாறு .இன்று அத்திம்பேர் ஆஸ்திரேலியா ,அண்ணா யூஎஸ் என பீத்திக்
கொள்வது மரபை மதித்தால் கிடைக்குமா ?
வீட்டுக்குள் எவ்வளவு மாற்றம் ? கோயிலும் வழிபாடும்
மாறாமலா இருந்திருக்கிறது ? சைவமும் வைணவமும் போட்ட சண்டை கொஞ்சமா ? இப்போது மிச்ச
சொச்சம் அங்கொன்று இங்கொண்று உண்டு . ஆயினும் எல்லா கோயிலுக்கும் எல்லோரும் போவர்
.
மாறாத மரபோ .சடங்கோ ,சம்பிரதாயமோ ,பழக்க வழக்கமோ
என்றும் எங்கும் எப்போதும் இல்லை ,மாற்றங்கள் நிகழும் போதெல்லாம் பழமைவாதிகள் முட்டி
மோதுவர் . ஆனாம் புதுமையே வெல்லும் ,பழமை வீழும் .
0 comments :
Post a Comment