சொல்.35

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .35 [ 3/10/2018 ]

தமிழ்நாட்டில் செவ்வாயோ வெறும்வாயோ என்பார்கள் .பொதுவாய் நல்ல காரியங்களை அன்று தொடங்க மாட்டார்கள் .கர்நாடகாவில் திங்களன்று எதுவும் தொடங்கமாட்டார்கள் .செவ்வாயே அவர்களுக்கு மங்களகரமான நாள் .கல்வி ஆண்டைக்கூட பொதுவாய் செவ்வாயன்றே தொடங்குவார்கள் .

அதுபோல் நிறைந்த அம்மாவாசை அன்று தொடங்கும் காரியம் வளர்பிறை போல் ஓங்கும் என்பது தமிழ்நாட்டு வழக்கு .நேர் எதிராய் அம்மாவாசை அன்று கொடுக்கல் வாங்கல்கூடச் செய்யமாட்டார்கள் கர்நாடகத்தில் .

திங்களும், செவ்வாயும், அம்மாவாசையும் மாநிலத்துக்கு மாநிலம் தன் முகமூடியை மாற்றிக்கொள்கிறதே எப்படி ?

அண்டை மாநிலத்திலேயே இப்படி எதிர் எதிர் நிலை எனில் , இந்தியா முழுவதும் சேகரித்தால் ஏகப்பட்ட முரண்பாடுகள் மூட்டை மூட்டையாக் கிடைக்கலாம் .

அதிலும் குரு பெயர்ச்சி ,சனிப்பெயர்ச்சி ,ராகு,கேது பெயர்ச்சி என ஜோதிட சிகாமணிகள் விடும் புருடாக்களுக்கு அளவே இல்லை .

இந்த நாளும் கோளும் நல்லதும் செய்யாது , கெட்டதும் செய்யாது .அது வெறும் மனப்பிராந்தி அவ்வளவே .

நல்லதைச் செய்ய நேரங்காலம் பார்க்காதீர் .முடிந்தவரை உடனே செய்து முடிப்பீர் .கெட்டதை முடிந்தவரை தள்ளிப் போடுங்கள் .அது நடக்காமல் போவது நல்லதுதானே !


0 comments :

Post a Comment