சொல் .34.

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .34 [ 2/10/2018 ]

மனம்விட்டு சிரியுங்கள் . சிரிப்பே மருந்து .இப்படி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம் .நாமும் சொல்லியிருப்போம்.

சிரிப்பைக் கொண்டாடுவது போல் அழுகையைக் கொண்டாட முடியாதுதான் .ஆயினும் வாய்விட்டு அழுதால் நெஞ்சில் பாரம் குறையத்தான் செய்யும் .

அதிலேயும் பாருங்கள் ஆணா லட்சணமா இருக்கணும் பொம்பள மாதிரி அழக்கூடாதுன்னு ஆணுக்குச் சொல்லுவதும் ; பொம்பளையா லட்சணமாய் இருக்கணும் இப்படியா கெக்கெ பிக்கேன்னு சிரிப்பதுன்னு பெண்ணுக்குச் சொல்வதும் வாடிக்கை .

ஆணோ பெண்ணோ உணர்ச்சி ஒன்றுதானே ! உணர்ச்சியை தேக்கி அடக்கி வைப்பது யாராயினும் நோய்க்கு இடம் கொடுப்பதுதானே ! ஆணோ பெண்ணோ மனம்விட்டு சிரிப்பதும் ,வாய்விட்டு அழுவதும் தவறல்ல ;ஆரோக்கியத்தின் தேவை .

ஆனால் ,எங்கே எதற்கு எப்படி யாவர் முன் சிரிப்பது அல்லது அழுவது என்பதே முக்கியம் .








0 comments :

Post a Comment