சொல்.36

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .36 [ 4/10/2018 ]

குழந்தைகளுக்கு கதை சொல்வது எளிதான விஷயமல்ல .அவர்களின் ஞாபக சக்தியும் கற்பனை வளமும் நம்மை பிரமிக்க  வைக்கும் .

நேற்று சொன்ன கதையையே இன்று சொல்லும் போது நாம் ஒரு வார்த்தையை விட்டுவிட்டாலும் டக்கென்று பிடித்துவிடுவார்கள் .பாதி கதையில் அவர்கள் குறுக்கிட்டு வேறு கதையாக்கி விடுவார்கள் .

எல்லா விலங்குகளும் குழந்தைகளுக்கு பிடிக்கும் ஆனால் அந்த குள்ள நரி மட்டும் மோசமானது என்பதில் அவ்வளவு உறுதியாய் இருப்பார்கள் குழந்தைகள்.

யானையும் எலியும் நண்பர்களாகி விடுவார்கள் .சிங்கமும் ஆடும் கிரிகெட் விளையாடும் .கரடியும் மானும் நடனம் ஆடும் .

ஸ்பைடர் மேனும் , ஹீ மேனும் தலை நீட்டுவார்கள் .குழந்தைகளில் உலகம் விசித்திரமானது .சண்டை போட்டவர் திடீரென ஃபிரெண்டெஸ் ஆகிவிடுவார்கள் .

தாத்தாவுக்கும் பாட்டிக்கும் எதுவும் தெரியாது என்பதை தைரியமாகச் சொல்வது குழந்தைகள் மட்டுமே !அந்தப் பிஞ்சுக்கால்கள் நெஞ்சை மிதித்து ஆணவத்தை ,அகங்காரத்தை ,ஈகோவை துவம்சம் செய்துவிடுவார்கள் .

பேரப்பிள்ளைகளின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தேட ஆரம்பியுங்கள் உங்கள் அறியாமை கொஞ்சம் கொஞ்சமாய் விடைபெறும் .



































0 comments :

Post a Comment