தினம் ஒரு சொல் .40 [ 8 /10/2018 ]
நான் சிறுவனாயிருந்த போது வீட்டில் எண்னை ஓவியமாய்
வரையப்பட்ட தாத்தா பாடியின் பெரியபடம் மாட்டப்பட்டிருக்கும் . போட்டோ எடுத்தால் ஆயுள்
குறைந்து போய்விடும் என்கிற மூடநம்பிக்கை வேறு .
என் வீட்டில் என் அப்பா அம்மா சிறிய போட்டோ
மாட்டப்பட்டிருக்கும் .இது தவிர வீட்டுப் பரணில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் பிரேம்
போட்ட போட்டோக்களை வீடு மாற்றும் போதோ /வெள்ளையடிக்கும் போதோ எடுத்து நினைவை அசைபோடுவதுண்டு
.
மேலும் கல்யாண ஆல்பம் உள்ளிட்ட பல்வேறு ஆல்பங்கள்
பீரோவை அடைத்துக் கிடக்கும் .என்றேனும் ஒரு நாள் அதனை எடுத்து புரட்டுவதும் அது குறித்து
உரையாடி மகிழ்வதும் உண்டு , ஆனால் போட்டோவோ ஆல்பமோ இரண்டு மூன்று தலைமுறைக்குப் பின்
குப்பைக்கு போய்விடும் .அல்லது மக்கி மங்கி மறைந்துவிடும் .
வருங்காலத்தில் இவை என்ன ஆகும் ? இப்போதே எல்லாம்
டிஜிட்டலுக்கு போய்க்கொண்டிருக்கிறது. நாளை இதைவிட உயர்ந்த தொழில் நுட்பம் இதை விழுங்கக்கூடும்
.
உங்கள் எழு தலைமுறையைச் சொல்லுங்கள் எனில்
உங்கள் பிள்ளையால் சொல்ல முடியுமா ?உங்களால் சொல்ல முடியுமா ? செத்தவருக்கு திதி கொடுக்கும்
போதுகூட தந்தைவழி பரம்பரையைச் சொல்வதன்றி தாய்வழியைத் தவறியும் சொல்வதில்லை .அவ்வளவு
இறுக்கமான ஆணாதிக்கச் சமூகம் .
இப்போதெல்லாம் மேலைநாடுகளில் ‘பரம்பரை மரம்’ என்கிற பெயரில் தாய்வழி தந்தை வழி
பேதமற்று படத்தோடு கணினியில் பதிவேற்றம் செய்கின்றனர் . எழுதலைமுறையை அறிய , அடுத்த
தலைமுறைக்கு அறிவிக்க முயல்கின்றனர் .
இங்கு நாமும் முடிந்தவரை எழுதலைமுறை இல்லாவிடிலும்
மூன்று தலைமுறையையாவது தொட முயலலாமே ! உங்கள் வாரிசுகள் தொடர்வர் . மெல்ல வளரட்டும்
இந்த “பரம்பரை மரம்” எழு தலிமுறைக்கும் அதன்
பின்னும்.
காதல் மணமும் ,சாதி,மத மறுப்பு மணமும் இந்த
பரம்பரை மரத்தை வீரியமாக்கட்டும் .
0 comments :
Post a Comment