தினம் ஒரு சொல் .49 [ 17 /10/2018 ]
ஒரு முறை மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னார்
, “ நான் சிறு வயதாயிருக்கும் போது டிராபிக் போலீஸாக வரவேண்டும் என ஆசைப்பட்டேன் .ஏனெனில்
அவர் கையைக் காட்டினால்தான் எல்லா வண்டியும்
நிற்கிறது .போகிறது .அவரே அதிக அதிகாரம் உள்ளவர் என நினைத்தேன்.”
பொதுவாக குழந்தையாய் இருக்கும் போது ஒன்றில்
இருக்கிற ஆர்வ்ம் போகப்போக குறைந்து இன்னொன்றுக்குத் தாவிவிடுகிறது . பலர் கல்லூரியில்
சேரும் போது இருந்த ஆர்வம் வேகமாய் வற்றி இன்னொரு பக்கம் திரும்பிவிடுகிறது .
படித்தபின் பிழைப்புக்காகத் தேடுகிற வேலை பெரும்பாலும்
மனதுக்கு உகந்ததாக இல்லாமல் வாழ்க்கை நிர்ப்பந்தத்திற்கு ஓடிக்கொண்டிருப்போரே அதிகம்
.எதிர்பார்ப்பின் ஏமாற்றமும் வலியும் எல்லோரிடமும் ஏதோ ஒரு அளவில் இருக்கத்தான் செய்யும்
.
வாழ்க்கைப் பாட்டிற்கு ஏதோ ஒரு வேலை ; தன்
ஈடுப்பாட்டிற்கு இலக்கியம் , விளையாட்டு ,சமூகசேவை ,இசை ,அரசியல் என ஏதாவது ஒன்றைத்
தேர்ந்து ஓடிக்கொண்டே இருப்பவர்கள் ஓரளவு மன அழுத்தமின்றி நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்
. தன் ஈடுப்பாட்டிற்குரிய துறையில் வெற்றிக்கொடி நட்டு வாழ்பவர்கள் மிகச் சொற்பமே!
இதிலும் ஆண்களுக்கு கிடைக்கும் அனைத்து சுதந்திரமும்
வாய்ப்பும் பெண்களுக்கு கிடைத்துவிடுமா ? கிடைக்காது .அதன் வலியை காயத்தை ஆண் சமூகம்
உணர்வதுகூட இல்லை .நம் சமூக கட்டமைப்பு அப்படி .அதையும் மீறி சாதிக்க வருகிற பெண்கள்
மீது வீசப்படும் சொல்லம்புகள் சொல்லும் தரமன்று.
ஆணோ பெண்ணோ தனக்குப் பிடித்த ஓர் துறையில்
காலூன்றி நடக்க ஏற்ற சமூக அமைப்பும் சூழலும் இங்கு இல்லை .லாபவெறியில் தறிகெட்டலையும்
சுரண்டல் சமூகமே இது . இந்த சுரண்டல் அமைப்பை தகர்த்தால்தானே உங்கள் வலியும் காயமும்
உங்கள் சந்ததிக்காவது குறையும் மெல்ல ; மெல்ல மறையும்.
சரி ! சரி ! அதற்காக ஒரு வார்த்தையேனும் ஒரு
அசைவேனும் உங்களிடம் உண்டா கொஞ்சம் அசைபோடுங்கள்! !
0 comments :
Post a Comment