சொல்.42

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .42 [ 10 /10/2018 ]

 “மனப்பாடக் கல்வி ஒழிக!” என பொதுவாய்ச் சொல்லுவதுண்டு. இதன் பொருள் என்ன ? எதையும் மனப்பாடம் செய்வதே பிழையா ?இல்லை .இல்லவே இல்லை .சிறுவயதில் ஞாபக சக்தியை வளர்க்க மனனம் செய்யும் பயிற்சி தேவை. தேவையே .

ஆனால் கல்வி என்பது படித்ததை அப்படியே வாந்தி எடுப்பதல்ல ; மாணவரின் படைப்பாற்றலை ,ஆராய்ச்சி மனப்பாங்கை உசுப்பிவிடுவதே ஆகும் .இதைச் சொல்லவே மனப்பாடக் கல்வி ஒழிக என்றனர்.அவ்வளவே !

ஒரு முறை தோழர் இஎம்எஸ் சொன்னது இன்னும் ஞாபகத்தில் உள்ளது .நான்[இஎம்எஸ்] சிறு வயதில் சமஸ்கிருத சுலோகங்களை மனனம் செய்தேன் .அர்த்தம் புரியாமலே மனனம் செய்தேன் .அர்த்தம் புரிந்த பின் இப்போது அந்த சுலோகங்களை விமர்சிக்கிறேன் .அந்த சுலோகங்களை மனப்பாடம் செய்ததால் எனக்கு ஞாபக சக்தி பயிற்சி கிடைத்தது மிகப்பெரிய லாபம் .அது இன்றுவரை பயன்படுகிறது .மனப்பாடம் கல்வியின் ஒரு கூறு .அதை நாம் நிராகரிக்கக் கூடாது .ஆயின் மனப்பாடம் மட்டுமே கல்வி ஆகாது .

தோழர் இஎம்எஸ் ,கலைஞர் கருணாநிதி ,பெரியார் ,அம்பேத்கர் ,நேரு , என பலரும் வாழ்வின் இறுதிவரை நிறைய ஞாபக சக்தி உடையவராய் இருந்தது எப்படி ? தொடர்ந்து படிப்பதும் – படித்ததை நினைவில் பதிப்பதும் – அவ்வப்போது நினைவுகூர்ந்து பயன்படுத்துவதுமே அவர்களின் பணியாக எப்போதும் இருந்ததே காரணம் .

தொடர்ந்து படிப்பதும் – படித்ததை நினைவுகூர்ந்து பிறருக்குச் சொல்லுவதுமாய் வாழ்வை முன்னெடுப்பின் உங்கள் வாழ்வின் இறுதிவரை நினைவு பிறழாமல் வாழலாமே .முயற்சி செய்க ! பயிற்சி செய்க !

0 comments :

Post a Comment