தினம் ஒரு சொல் .46 [ 14 /10/2018 ]
வரவுக்குள் வாழ வேண்டும் போதனை சரிதான் .ஆனால்
யாராலும் பின்பற்ற முடியாமல் இருப்பதேன் ? பல காரணங்கள் உண்டு .
முதல் காரணம் , சம்பளம் மாதாமாதம் ஏறாது .
வருவாய் உயரவு மிகமிகக் கடினம் .ஆனால் விலைவாசி தினசரி ஏறும் .மாதாந்திர குடும்ப பட்ஜெட்
வீங்கிக்கொண்டே போகும் .
இரண்டு , எதிர்பாரா மருத்துவச் செலவுகள் .
மூன்று ,பிள்ளைகளின் கல்விச் செலவு
நான்கு , உறவு ,நட்பு என எதிர்பாராமல் வரும்
திருமணம் ,கருமாதி இதர செலவுகள்
ஐந்து , எதிர்பாராச் செலவுகளுக்காக வாங்கிய
கடன் அதற்கான வட்டி என பெருகிக்கொண்டே போகும் புற்றுநோய்
ஆறு , திடீர் வேலை இழப்பு ,ஊதிய இழப்பு போன்றவை
ஏழு ,குடி ,சூது போன்ற வழியில் பணத்தை இழத்தல்
எட்டு ,ஆடம்பர மோகம் , நுகர்வெனும் பெரும்பசி
ஒண்பது ,அடுத்தவரைபோல் மினுக்க ஆசைப்பட்டு
கடன்வலையில் சிக்குதல்
பத்து .குடும்பத்தாரின் ஊதாரித்தனம்
இன்னும் பல இவற்றுள் நம்மால் தவிர்க்க முடிந்தவையும்
உண்டு ;நம் கைக்குள் அடங்காததும் உண்டு .
என்ன செய்வது ? மாதந்தோறும் கணவன் –மனைவி உட்கார்ந்து
பேசி குடும்பப் பட்ஜெட் போடுங்கள் . தவிர்க்கக்கூடியதை தவிருங்கள் .அது கடன் புதை சேற்றில்
சிக்கமாலிருக்க உதவும் . கவுரவத்துக்காகவோ மரியாதைக்காகவோ எதையும் செய்ய வேண்டாம்
.உங்கள் சக்தி எவ்வளவோ அதனோடு நிறுத்துங்கள் !
பிள்ளைகளுக்கும் வீட்டு நிலையை திறந்த புத்தகமாய்
சொல்லி வளருங்கள் .உங்கள் வலி அவர்களுக்குத் தெரிய வேண்டும்!
உங்கள் வீட்டு பட்ஜெட்டுக்கும் , அரசு போடும்
நாட்டுப் பட்ஜெட்டுக்கும் உள்ள தொடர்பை யோசிக்கத் தொடங்குங்கள் ..அரசியல் விழிப்புணர்வின்
மூலவிதை அதுதான்….
போதனைகளால் புண்ணு ஆறாது . போராட்டமே வாழ்க்கை
!!
0 comments :
Post a Comment