சொல்.63

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .63 [ 5 /11/2018 ]

 “நன்றி கெட்டவன் , அவனுக்கு/அவளுக்கு எவ்வளவு உதவி செஞ்சிருக்கேன் ஆனால் இப்படி செஞ்சிட்டானே/ளே..” என புலம்பும் தருணம் பலருக்கு வாய்த்திருக்கும் . விசுவாசம் கெட்டவன்/கெட்டவள் என பலரை சபித்திருப்போம் . ஆக நன்றி ,விசுவாசம் என்ற இரு சொற்களும் நம்மிடம் படாதபாடு படும் .

கொஞ்சம் யோசியுங்கள் வலுத்தவருக்கு அடிபணிந்து கிடப்பதே இங்கு விசுவாசத்தின் அளவு கோலாய் பொதுவாய் புரியப்பட்டுள்ளது . குடும்பம் ,நட்பு ,வியாபாரம் எங்கும் விசுவாசம் என்பது கேள்வி கேட்காமல் ஆதிக்கத்துக்கு அடிபணிவதாகவே அர்த்தப் படுத்தப்படுகிறது . கொஞ்சம் கேள்வி கேட்கத் துவங்கியதும் நம்பிக்கைத் துரோகி ,நன்றி கெட்டவன்/கெட்டவள் என அர்ச்சனை துவங்கிவிடும் .

கண்மூடித்தனாம யாரையும் எங்கும் எப்போதும் நம்புவது கூடாது . இதன் பொருள் இருபத்தி நாலுமணி நேரமும் சந்தேகத்தோடு நடுங்கிக்கொண்டே இரு என்பதா? அல்ல .அல்லவே அல்ல . விசுவாசமும் சந்தேகமும் ஒன்றை ஒன்று சார்ந்தததே . ஐயமற தெரிந்தபின் நம்பின் அது விசுவாசம் ;எதையும் யோசிக்காமல் நம்பினால் அது சரணாகதி அல்லது அடிமைத்தனம் .இந்த வேற்பாடு புரியாவிடில் எங்கும் குழப்பமே மிஞ்சும் .

ஆபத்துக்கு உதவினார் ஆகவே அவருக்கு நன்றி செலுத்துவது இயல்பு .தவிர்க்ககூடாத பண்பு .ஒவ்வொருவருக்கும் தேவை .ஆனால் நன்றி செலுத்துவதன் பெயரால் அவரின் அனைத்து அராஜகங்களுக்கும் துணை போவதோ அல்லது கண்டு கொள்ளாமல் இருப்பதோ எந்த விதத்தில் நியாயம் ? நன்றி செலுத்தவும் எல்லை உண்டு .

நாம் வாழும் சமூகத்தில் விசுவாசம் ,நன்றி இரண்டையும் ஆதிக்கம் செய்வோர் அநீதி இளைப்போர் தங்கள் வசதிக்காக வளைக்கும் போக்காகவே உள்ளன . எல்லாவற்றையும் போலவே இதற்கு எல்லையும் உண்டு மறுபக்கமும் உண்டென உணர்வதே அனுபவப் பாடம் .  
Su Po Agathiyalingam




























































































0 comments :

Post a Comment