சொல்.79

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .79 [ 24 /11/2018 ]
ஒருவர் என்னிடம் குகை மனிதர்கள் எந்த வகை உணவு உண்டார்கள் ; நோயற்று இருந்தனர் என ஒரு விரிவுரை நிகழ்த்திவிட்டு நாமும் அதுபோல் உண்டால் நோயற்று வாழலாம் என முடித்தார் .நான் சொன்னேன் , “ அந்த குகை மனிதர் போல் உணவுக்கு தினசரி நாலய்ந்து மைல் காடு ,மலை ,மழை ,வெயில் என சுற்றித் திரிவோம் .பின்னர் அது போல் உண்போம் .” என்றேன் . அவருக்கு கோபம் வந்துவிட்டது .

பின்னர் எங்களுக்குள் பெரும் விவாதம் நடந்தது .இன்று மனித குலம் பல்வேறு காய்,கனி ,கீரை வகைகள் ,தானியவகைகள் , விதவிதமான விலங்குகள் ,பறவைகள் ,கடல் உயிரிகள் என புலால் வகைகள் , அவித்தல் ,பொரித்தல் ,வறுத்தல் , சுட்டல் என விதவிதமான சமையல் பாணிகள் , சுவைகள்  இவை எதுவும் ஒரு இரவில் ஒருவரால் ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதல்ல . எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ,எத்தனை சோதனை முயற்சிகள் ,எவ்வளவு உயிரிழப்புகள் .. முதலில் அந்த வரலாற்றை அறியுங்கள் .ஒரு கீரை ,ஒரு கனி ,ஒரு விலங்கு உண்ணத் தகுதியானதா இல்லையா என்பதை உண்டு , நோயில் விழுந்தோ ,உயிரிழந்தோ மனித குலம் அனுபவித்து கண்ட  கதை நெடிது .

இன்று திடீரென சில ரட்சகர்கள் அவதரித்து ,அதை சாப்பிடாதே ,இதைச் சாப்பிடாதே ,இப்படி சாப்பிடு ,அப்படி சாப்பிடு  முன்னோர் முட்டாள்களா , பாரம்பரியம் ,பண்பாடு ,புடலங்காய் ,புண்ணாக்கு என வித்தாரமாய் பேசுகிறார்கள் . அது கதையில் வரும் கத்திரிக்காய் கறி சமைக்க உதவாது .

இன்றைய உணவுப் பழக்கத்தில் சில பிழைகள் இருக்கலாம் ,ஆனால் மொத்தமும் பிழை அல்ல . அந்தந்த புவியியல் , தடபவெப்பம் , விளைச்சல் ,தேவை , வாங்கும் சக்தி என எண்ணற்ற அம்சங்களோடு வளர்ந்திருக்கும் இன்றைய உணவுப் பழக்கத்தை நிராகரிப்பதெல்லாம் சில நாள் கூத்தே .

நிதானமாக சமூக அறிவியல் நோக்கோடு ஒருங்கிணைந்த பார்வையை உருவாக்க முயலாமல் ஆளுக்கொரு பக்கம் இழுப்பதே இன்றைக்கு மிக ஆபத்தான போக்கு !நம் உணவு ,நம் உரிமை  அதில் தலையிட எவனுக்கும் இல்லை அதிகாரம் !!!
Su Po Agathiyalingam



0 comments :

Post a Comment