புதுநாற்றா முளைக்கோணும் …
ஆண்டுக் கொரு இழவென்றால்
அழுது அழுது தொலச்சிடுவேன்
!
அன்றாடம் இழவென்றால்
தொண்டக் குழியிலும்
ஈரமில்ல..
[ஆண்டுக் கொரு
இழவென்றால் ]
சாதிவெஷம் தலக்கேறி
ஆணவக் கொலையாகும்
நாதியற்ற ஜீவனுக்கு
நாள்தோறும் அழுவேனோ
?
[ஆண்டுக் கொரு
இழவென்றால் ]
மதம்பிடிச் சலைகின்ற
அதிகார திமிராலே
சதியாலே சாவோருக்கு
அழுதழுது ஓய்வேனோ?
[ஆண்டுக் கொரு
இழவென்றால் ]
இயற்கையும் பழிவாங்க
புயலுக்கும் மழைக்கும்
பொசுக்கென போனோருக்காய்
அழுது தொலைப்பேனோ
?
[ஆண்டுக் கொரு
இழவென்றால் ]
விழுந்த தென்னைக்கா
அழிந்த நெல்லுக்கா
இடிந்த குடிசைக்கா
எத்தனைக்கு நானும்
அழ …
[ஆண்டுக் கொரு
இழவென்றால் ]
நெஞ்சில் மிதிக்கிற
வெலவாசிக்கும்
படிச்ச பிள்ள வேலயின்றி
பித்துபிடிச்சு
நிப்பதுக்கும்
அழுதபடி வாழ்வேனோ
?
[ஆண்டுக் கொரு
இழவென்றால் ]
சக்கரையா பேசும்
சர்க்காரு
சாமனியன் அடிமடிய
புடுங்குது !
உடுத்திருக்கும்
கோவணதையும்
உருவ அல்லோ பார்க்குது
!
[ஆண்டுக் கொரு
இழவென்றால் ]
மத்தியில ஆளுகிற
மந்திரிங்க மொத்தபேரும்
அம்பானி அதானி
பங்காளியாப் போனாங்க
…
[ஆண்டுக் கொரு
இழவென்றால் ]
பொணத்தையும் நக்கித்
தின்னும்
புத்திகெட்ட அடிமைக
சென்னக் கோட்டயில
ஜடமாய் இருக்காங்க
…
[ஆண்டுக் கொரு
இழவென்றால் ]
ஏழ பாளங்க என்ன
பண்ணித் தொலைக்கிறது
பூச்சி மருந்த
குடிக்கணுமோ
நாண்டுகிட்டு சாகணுமோ
நாடாள்வோரா நாக்கழுக
சொல்லுங்க …
[ஆண்டுக் கொரு
இழவென்றால் ]
வம்பா பொணமாகி
வாழ்வ முடிக்காம
கம்பா நிமிரோணும்
கையரிவா துக்கோணும்
நாதியற்று செத்து
நாறிக் கிடக்காம
போராடி விழுந்து
புதுநாற்றா முளைக்கோணும் !!
[ஆண்டுக் கொரு
இழவென்றால் ]
சு.பொ.அகத்தியலிங்கம்.
0 comments :
Post a Comment