தினம் ஒரு சொல் .30 [ 28/09/2018
]
சாம்பாரில் உப்பு சரியாக இருக்கிறதா
என ஐந்து பேரிடம் கேட்டால் ஐந்து பதில் வரும் .ஏனெனில் ஒவ்வொரு நாக்கும் ஒவ்வொருவிதமாய் பழகிவிட்டது .
அறுசுவை என சொல்லிவிட்டு அதில்
எது சுவை இல்லை என்பீர் ? பாவற்காய் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது . சிலருக்கு
இனிப்பு ,சிலருக்கு புளிப்பு ,சிலருக்கு காரம் , சிலருக்கு துவர்ப்பு ,சிலருக்கு உவர்ப்பு
,சிலருக்கு கசப்பு என சுவை மாறுபடும் .
ருசியாகச் சமைப்பதும் ; ருசித்துச்
சாப்பிடுவதும் தனிக்கலை .அது வாய்க்கப் பெறுவது பெரும் பேறு . அதே சமயம் நாக்கு ருசிக்கு
அடிமையாகி கொஞ்சம் குறைந்தாலும் தொண்டைக் குழியில் இறங்காது என்பது அதீதம் .
அம்மாவோ ,மனைவியோ ,கணவனோ அல்லது
யார் சமைத்தாலும் ஒருநாள் போல் ஒருநாள் அமையாது .ஏதோ காரணம் இருக்கக்கூடும் . இதனைப்
புரியாமல் சாப்பாட்டின் மீது வெறுப்பைக் காட்டுவது அறியாமையின் உச்சம் மட்டுமல்ல ;ஆணாதிக்கத்தின்
உச்சமும்கூட .இது பெண்களிடமும் வெளிப்படக்கூடும் .
ஒரு கவளம் சோறுகிடைக்காமல் துடிக்கும்
பல்லாயிரம் மக்களின் வலியை ஒரு நிமிடம் நெஞ்சில் நிறுத்துங்கள் .
கிடைத்ததை ருசித்துச் சாப்பிடுங்கள்
. எப்படியும் ஆறு சுவையில் ஒன்றாகத்தானே இருக்கும் .பாராட்டுங்கள் .வாழ்க்கை நரகமல்ல
நந்தவனம் என்பது புலனாகும் .
.
0 comments :
Post a Comment