சொல் ,21

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .21 [ 15/09/2018 ]  

நேற்றொரு பேச்சு இன்றொரு பேச்சு என்பது என்னிடம் என்றைக்கும் இல்லை என நெஞ்சை நிமிர்த்துவது பலரின் வாடிக்கை .

பொதுவாய் அது சரிதான் ,ஆனால் எப்போதும் அதுவே சரியல்ல .மாறாதது எதுவும் இல்லை . நேற்றுச் சொன்ன எல்லாம் இன்றைக்கு அப்படியே சரியாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை .

நேற்றோ இன்றோ என்பதல்ல முக்கியம். பேசியதில் எது சரி எது நியாயம் என்பதே கேள்வி .

நேற்று சொன்னது பிழை எனில் வம்படியாய் அதனை தூக்கிச் சுமக்க வேண்டாம் . எப்போதும் உண்மையைத் தேடுவதாய் இருக்கட்டும் நம் பேச்சு .



 .





0 comments :

Post a Comment