தினம் ஒரு சொல் … 15 [ 5 /9/2018 ]
நான் சொன்னதை நீங்கள் தப்பாகப்
புரிந்து கொண்டீர்கள் …. நான் சொல்ல வந்தது அதுவல்ல … இப்படி நாம் பல சந்தர்ப்பங்களில்
பேசியிருப்போம் .
தப்பு யாரிடம் ? நாமும் அவசரப்பட்டு
பேசும் போது சொல்ல வந்த செய்தி சரியாக பதிவாகமல் போயிருக்கக் கூடும் . உணர்ச்சிக் கொந்தளிப்பில்
தாறுமாறாக வார்த்தைகளைக் கொட்டி இருக்கக்கூடும் .நமக்கே தெளிவு இன்மை இருக்கக்கூடும்
.
அதேபோல் கேட்டவரும் உணர்ச்சிக்
கொந்தளிப்பில் உள்வாங்குவதில் தவறியிருக்கக்கூடும் – சரியாக காது கொடுக்காமல் இருந்திருக்கக்கூடும்
– தெளிவின்மை அவருக்கும் இருக்கக்கூடும்
அப்போதைக்கு அதனை மேலும் பேசாமல்
அமைதி காப்பதும் ,ஒத்திவைப்பதும் ,பின்னர் தனியாக இருவரும் அசை போடுவதும். மீண்டும்
பேசுவதும் பயன் தரலாம் .முந்தைய புரிதல் குறைபாடு சற்று தணியலாம் .
ஒருவர் அடுத்தவர் கோணத்தில்
நின்று கொஞ்சம் யோசிப்பின் இருபக்கமும் புரிதல் மேம்படும் .
ஒவ்வொருவரும் அடுத்தவரைப் புரிந்து
கொள்வதும் ,புரியவைப்பதும் ஓர் கலை .அதை மெல்லக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் கடைசிவரை
….அதுவே வாழ்க்கை விதி.
“
0 comments :
Post a Comment