தினம் ஒரு சொல் .27 [ 25/09/2018 ]
எல்லோர் வீட்டிலும் ஒரே மாதிரிக் கொழுக்கட்டை , எல்லோர் வீட்டிலும்
ஒரே மாதிரி அதிரசம் , எல்லோர் வீட்டிலும் ஒரே மாதிரி சுண்டல் ,இப்படி ஒவ்வொரு பண்டிகையும்
ஏதேனும் ஒன்றுக்குள் அடங்கிப் போகிறது .பல வேளை சலிப்பாகவும் ஆகிப்போகிறது .
ஏன் மாற்றி யோசிக்கக் கூடாது ? நகரங்களில் அருகருகே இருக்கும்
ஐந்தாறு குடும்பங்கள் கொஞ்சம் முன்கூட்டியே கலந்துரையாடினால் நிலைமை மாறலாமே !
ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் ஒரு பண்டம் செய்யலாம் . கூட்டாகச்
சேரும் போது எல்லோருக்கும் ஐந்தாறு வகை கிடைக்கும் . பண்டிகைக்கு வண்ணமும் வனப்பும்
சேருமே !அதுமட்டுமா எண்ணங்களிலும் இணக்கமும் இனிமையும் கூடுமே !
கூட்டம் சேர்த்து கூட்டாஞ்சோறு ஆக்கியுண்ணும் பழைய கிராமியப்
பண்பாடு மெல்ல மங்கி மறைகிற போது , அதன் வேரிலிருந்து புதியன நகரங்களில் யோசிக்கலாமே
!மாதம் ஒரு முறை ஐந்தாறு குடும்பங்கள் திட்டமிட்டு ஆளுக்கொரு வகை உணவு தயாரித்து கூடி
பங்கிட்டு உண்டால் உறவு மேம்படுமே ! உற்சாகம் குலவையிடுமே!
ஆனால் ஒன்று ,பாராட்டும் உள்ளமும் ஒத்துப்போகும் உயர்ந்த அணுகுமுறையும்
,விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மையும் இருக்க வேண்டும் .வளர்க்க வேண்டும் .முயற்சிக்கலாமே!
.
0 comments :
Post a Comment