தினம் ஒரு சொல் … 11 [ 1 /9/2018 ]
இளைஞர்களுக்கு உபதேசமும் பிடிக்காது ; உபதேசிப்பவரையும் பிடிக்காது என அடிக்கடி இளைஞர்கள் மீது குற்றப்பத்திரிகை வாசிப்பது உண்டு .
யாருக்குமே , எங்குமே , எப்போதுமே உபதேசம் பிடிக்காது என்பதே முழு உண்மை.
ஆனால் எல்லோருக்கும் அடுத்தவருக்கு உபதேசிப்பது எனில் லட்டு அல்லது விருப்பமான ஏதேனும் தின்பண்டம் சாப்பிடுவதுபோல் அவ்வளவு பிடிக்கும் .
உபதேசங்கள் ஏன் பிடிப்பதில்லை ?
அவை ஒரு வழிப்பாதையாய் இருப்பதாலும் ; உரையாடலுக்கு இடம் தருவதாய் இல்லாததாலும் உபதேசங்கள் முகத்தைச் சுழிக்க வைக்கும் . .
எங்கள் அனுபவத்திலிருந்து என்றே பெரும்பாலும் தொடங்குவதாலும் ; சுட்டுக்கொண்ட அனுபவத்தையும் .காயங்களையும் தடவி ; புதிய மற்றும் ,பரிசோதனை முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாலும் உபதேசங்கள் விரும்பப்படுவதில்லை .
செக்குமாடு போல் ஒரே தடத்தில் பயணிக்கவே உபதேசங்கள் உந்தித்தள்ளுவதாலும் வெறுப்பு மேலோங்குகிறது .
உபதேசங்களை நிறுத்துவோம் ! உரையாடலைத் தொடங்குவோம் !
சுயமாய் ஒவ்வொருவரும் முடிவெடுக்க ; சோதனைகளை செய்து பார்க்க உரையாடல் உந்துவிசையானால் யாருக்கு கசக்கும் ?
“
0 comments :
Post a Comment