தினம் ஒரு சொல் .25 [ 20/09/2018 ]
எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் எங்கேயும் இருப்பார்கள் .தங்களுக்கு
எல்லாம் தெரியும் என்பது அவர்கள் நினைப்பு .அவர்கள் மூக்கை நுழைக்காத விவகாரம் எதுவும்
இருக்காது .
நீங்கள் கூப்பிடவே வேண்டாம் .அவகளாகவே வந்து ஆலோசனைகளை அள்ளிவீசுவார்கள்
.ஒரு சிலர் மேலே ஒருபடி போய் தேரை இழுத்து தெருவில் விட்டதுபோல் சிக்கலில் மாட்டிவிடுவார்கள்
.
இவர்களைச் சமாளிப்பது பெரும் கலை .முக தாட்ச்சண்யம் பார்க்காமல்
கறாராக சொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை .
உங்கள் ஆலோசனைக்கு நன்றி ! நாங்கள் என்ன செய்வது என விபரம் அறிந்தவர்களிடம்
கேட்டுத் தெரிந்து கொண்டோம்.உங்கள் உதவி தேவைப்படும் போது நிச்சயம் கூப்பிடுவோம் .இப்படி
உடைத்துச் சொல்லப்பழக வேண்டும் .
எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனால்
தெரிந்ததுபோல் நடப்பதே சிக்கல் என உணர்வோம்.உணர்த்துவோம்.
.
0 comments :
Post a Comment