தினம் ஒரு சொல் … 7 [ 28 /8/2018 ]
முதியோர் இல்லங்கள் என்பது சமூகச் சீரழிவின் அடையாளமாய் பலரால் சுட்டப்படுகிறது . உணர்வுபூர்வமாய் அணுகும் யாரும் அப்படித்தான் கருதுவர்.
நேற்று இருந்தது போன்றா இன்று சமூகம் இருக்கிறது ? கூட்டுக் குடும்பம் அதன் இருப்பை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வருகிறது . வலி இருப்பினும் வாழ்க்கை நெருக்கடிகளின் திசை அதுதான் .
”பிறக்க ஓரிடம் பிழைக்க ஓரிடம்” என்பது ஒரு காலத்தில் சோகமாய் பார்க்கப்பட்டது .இன்று வாழ்க்கையாகிவிட்டது .
ஒருவர் வாழ வேண்டுமெனில் அவர் ஓடிக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாய சமூகச் சூழல் ;அந்த ஓட்டத்திற்கு பாசம் சுமையாகவோ , தடையாகவோ மாறிவிடக் கூடாதல்லவா ?
எல்லோரையும் முதியோர் இல்லத்திற்கு அனுப்புங்கள் என்று சொல்லவில்லை ; தேவையும் இல்லை .
ஆனால் ஒருவர் வாழ்க்கைச் சூழலில் பெற்றோரை கைவிடாமல் பாதுகாப்பாய் முதியோர் இல்லம் அனுப்புதல் பிழையல்ல ;தவிர்க்க முடியாத யதார்த்தம் .
“முதியோர் இல்லம் என்பது ஆதரவற்றவர்களின் மடம்” என்ற நிலை மாறி ; “மூத்த குடிமக்களின் நந்தவனமாய்” ஊருக்கு ஊர் தேவையே !
“
0 comments :
Post a Comment