தினம் ஒரு சொல் .24 [ 19/09/2018 ]
அவர் ரொம்ப தங்கமானவர் . இருக்கிற இடம் தெரியாது .யார் வம்பு
தும்பிற்கும் போகமாட்டார் . இப்படி சிலரைப் பற்றி சொல்லுவார்கள் .
அவர் வீடடங்கி இருக்கமாட்டார் . ஊரு வேலையெல்லாம் இவர் தலைமேல்தான்
.இப்படி சிலரைப் பற்றி கூறுவர் .
பின்னதாக இருக்க விருப்பமில்லையா பரவாயில்லை . நிச்சயம் முன்னதாக
இருக்காதீர்கள். !
பெருநகரில் பெரும்பாலான அபார்ட்மெண்ட் வாழ்க்கை வெறும் இயந்திரமாகிக்கொண்டிருக்கிறது.
வீட்டுக்கும் வெறும்கூட்டுக்கும் வித்தியாசம் உண்டு .குடியிருப்பென்பது
வெறுமே உண்டு உறங்கும் மடமல்ல .உயிரும் உணர்வும் உலாவும் வாழிடம். இதனை மனதில் நிறுத்துங்கள்
!
அண்டை அயலாரோடு பழகுங்கள் !நட்பாய் இருங்கள் ! சுற்றி நடப்பதென்ன
என என்று உற்று நோக்குங்கள் ! அநீதிக்கு எதிராய் முணுமுணுக்கவாவது செய்யுங்கள் !நீங்கள்
ஒரு மனிதர் இயந்திரமல்ல …
.
0 comments :
Post a Comment