சும்மா கிடந்த சொல்ல எடுத்து – [ 3 ]
வாழ்க்கைக் கோணலை கேலி செய்த காகம் …
சு.பொ.
அகத்தியலிங்கம்.
“காதல்
என்பது
நம்
வசத்தில் இல்லை
அது
ஒரு விநோதமான நெருப்பு
பற்ற
வைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது” மிர்சா காலிப் எழுதிய காதல் வரிகள்
காலத்தை மீறி வாழ்கின் றன . வென்ற காதலாயினும் தோற்ற காத லாயினும் அது வீரியமிக்க பாடலாய்
இனிக்கும் . எப்படித் தெரியுமா
?
“ துள்ளாத
மனமும் துள்ளும்
சொல்லாத
கதைகள் சொல்லும்
இல்லாத
ஆசையைக் கிள்ளும்
இன்பத்
தேனையும் வெல்லும் - இசை
இன்பத்
தேனையும் வெல்லும்” (கல்யாணப் பரிசு - 1959 ) “ஆசையிலே பாத்தி கட்டி அன்பை விதைப்பதும்
” “ அன்பு மயில் ஆடலுக்கு மேடை அமைப்பதும் ” காதலின் குணம். “கனிந்தும் கனியாத உருவெடுத்தாலும்”
“ இருந்தும் இல்லாத நிலைவரினும் ” காதலின் உயிர் முடிச்சு அன்பே .அது தியாகம் செய்யும்
. பழிவாங்காது . அப் படி பழிவாங்கின் அங்கு காதலில்லை வெறும் காமமே .
“காதலுக்கு
நாலு கண்கள்
கள் வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின்
உருவத்திலோ
கண்ணுமில்லை காது மில்லை ” ( இரத்தினபுரி இளவரசி
1959) என்பது பட்டுக்கோட்டைக் கட்சி . “ கண் ணும் கண்ணும் கட்டினக் கூட்டை / கலைக்க
முடி யுமா ? ” ( குமார ராஜா 1961 ) ஆம் ,கண்ணோடு கண்பார்த்து பொய்
சொல் வது அவ் வளவு சுலபமல்ல. ஆனால் கள் வனும் காமுகனும் நேருக்கு நேர் பார்க் காமல்
திருட்டுப் பார்வை பார்ப்பார்கள். இந்த காமுகர்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டுமே தவிர
காதலையே பழிக்கக் கூடாது “வழியில் பார்த்து சிரிச்சதெல்லாம்/ மனைவி ஆகுமா ?
” என அவள் கேட்பதும்; “ உன்னைப் பார்த்த கண்ணு
வேற/ பெண்ணைப் பார்க்குமா ? / உள்ளம் கலந்த பின்னே இனி / சொன்னாலும்
கேட்குமா ? ” ( குமார ராஜா -1961) என அவன் பதில் தருவதுமாக காதலைப்
போற்றியவன் பட்டுக்கோட்டை. இக்காதல் திருமணத்தில் முடியும் என்பதோடு இவன் கனவு முடிவதில்லை.
அந்தத் திருமண வாழ்வின் பயன் என்ன ? அது எப்படி இருக்க வேண்டும்
என்றும் கனவு கண்டான்.
அதே
சமயம் இருவர் சேர்ந்து இல் வாழ்வு காண கனவு கண்ட கவிஞர் ஒரு பால் உறவு குறித்தோ, தனித்து வாழு தல் குறித்தோ
யோசித்ததில்லை.அவன் வாழ்ந்த காலகட் டத்தில் மனித உரிமை குறித்தும் ஒரு பால் உறவு குறித்தும்
இன் றைக்கு ஏற்பட்டுள்ள விரிவும் புரிதலும் கிடையாது . அது கவிஞனின் குற்றமல்ல;
காலத்தின் குற்றம் .
அதனாலேதான்
“நாட்டுக்கு மட்டும் போதனை சொல்லி / நம்பிய பெண்ணின் நிலையை அறியா / ஞானியை நீயும்
பாரு இது / ஞாயந் தானா கேளு ” ( பதிபக்தி -182) என பெண் மூலம் கேள்வி எழுப்புவான்.
இன்றைய அரசியல் கேள்வி ஒன்றை அன்றைக்கே எழுப்பி விட்டானோ !
“எனது
வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும்
நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா?” என கவிஞர் புலமைப் பித்தன் திரைப்பாடலில் எழுப்பிய கேள் வியை அன்றே தன் பாணியில்
எழுப்பிய வர் பட்டுக்கோட்டை. “ இருள் சூழ்ந்த உலகில் / பொதுவாழ்வு தோன்றும் வரை / தூங்காது
; கண் தூங்காது ” ( கற்புக் கரசி 1957) என உறுதியாய் உரைத்தவர் பட்டுக்
கோட்டை.
அதுமட்டுமா ? காக் காய்க்கும் காக்காய்க்கும்
கல்யாணம் செய்துவைக்கும் வழமையான குழந் தைப் பாடலை உள்வாங்கி அக்கதைப் பாடலூடே வாழ்வின்
இலக்கணத்தையே வரைந்து காட்டிவிட்டார். அதுவும் காக் கையை புகழ்வதுபோல் மானுடரின் கன்
னத்தில் அடித்து சொல்லுவார். அந்தக் காட்சியைக் கொஞ்சம் பார்ப்போம். “ காக்கைக்கும்
காக்கைக்கும் / கல் யாணமாம் /கானக் கருங்குயில் கச்சேரி யாம் ” எனத் தொடங்கினார். அந்தக்
கல்யா ணத்தில் கண்ட பக்கமெல்லாம் அழைப்பு, பழங்களும் விதைகளுமே
பரிசு , பரம் பரை மொழியில் வாழ்த்து என்றெல்லாம் ஆண்களும் பெண்களும்
விவரிப்பது வரை இப்பாடல் ( பிள்ளைக்கனியமுது 1958 ) இனிக்கும்; அப்புறம்தான் சுருக் கென்று குண்டூசியால் குத்துவார் கவிஞர். பாடலின் நிறைவுப்
பகுதியில் சொல்லு வார் “மனிதனைக் கேலி / பண்ணிக்கிட் டதாம் அவன் / வாழ்க்கைக் கோணலை
எண் ணிக்கிட்டதாம்” இப்படி காக்காய்கள் சொல்லுவதேன்? மனிதனிடம்
மண்டிக் கிடக்கும் இழிகுணங்களை முன் பத்திக ளில் பட்டியலிடுகிறார் .
“ ஒற்றுமையில்லா
மனிதரைப் போல் அது ஒண்ணை ஒண்ணு கொத்திக்கிட்டு ஓடலையாம் ”.. “ உயர்வு தாழ்வு என்று
பேதம் பேசிக்கிட்டு / ஒதுங்கி வாழ இடம் தேடலையாம் ! ”… “அதிகமாகச் சேத்துக் கிட்டு
/ அல்லும் பகல் பாத்துக்கிட்டு / இருப்ப வங்க போல நடக்கலையாம்! ”.. “நல்ல இதயத்தை மாத்திக்
கிட்டு / ஈயாத வன் போல / கதவைத்தான் சாத்திகிட்டுச் / சாப்பிடலையாம் ! ”…. “ வரிசை
தவறாம / குந்திக்கிட் டதாம்/ வந்ததுக்கெல்லாம் இடம் / தந்துக்கிட்டதாம்! ”… இப்படி
உயரிய விழுமியங்களை காக்கைகள் பின்பற்றும் போது அதனை மறந்த மனிதன் வாழ்க்கை கோணலன்றி
வேறேன்ன ? என்ன
கேலி ! என்ன கிண்டல்! பாடலை ரசிக்கவும் சுவை யாக இருக்கும் ! அழகியல் கொஞ்சும்! அசை
போட்டால் தன்னெஞ்சே தன்னைச் சுடுமே!
இப்படிச்
சொன்ன கவிஞன் யதார்த் தவாதியும் கூட. ஆகவேதான் , “ ஒரு குறையும் செய்யாமே / ஒலகத்திலே யாருமில்லே
அப்படி உத்தமனாய் வாழ்ந்தவனை இந்த உலகம் / ஒதைக் காமல் விட்ட தில்ல ” ( கண் திறந்தது
- 1959) என நாட்டு நடப்பைப் பாடினான். மனம் நொடிந்து சுருண்டு படுக்க சொல்லவில்லை.புரிந்து
நடக்க வழி சொன்னவன். சுற்றிலும் நெருக்கடி இருக்கும். அதை மீறவும் வழி இருக்கும்.இங்கு
மனுஷ்ய புத்திரன் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது ;
“கொசுக்கள்
எல்லா இடங்க ளுக்குள்ளும்
எப்படியோ
நுழைந்து விடுகின்றன
எறும்புகள்
எந்தப்
பாதுகாப்பிலிருந்தும்
எதை
யாவது /கொண்டுவந்துவிடுகின்றன
மின்மினிகளுக்கு
இந்த
இருளைக் கடப்பதில்
எந்தக்
குழப்பமும் இல்லை
சில்வண்டுகள்
கலைத்து விடுகின்றன
ஊரடங்கு
உத்தரவுக ளின்
பயங்கர
மௌனங்களை
எவ்வளவுக்கெவ்வளவுசிறியதாக
இருக்கிறோமோ
அவ்வளவுக்கவ்வளவு
பயமில்லா
மல் இருக்கலாம் ”
இந்தக்
கவிதையின் தலைப்பு “ பயமற்ற வாழ்வு ”…முயன்றால் முடியாததுண்டோ. வாழ்க்கையின் சவால்களை
வெற்றி கொள்ள இயற்கை நமக்குப் பல முன்னு தாரணங்களைக் கொண்டிருக்கிறது .
கூர்ந்து
பார்ப்பதும் புத்தி கொள்முதல் செய்வதும் நம் கையில் அல்லவா ? பட்டுக்கோட்டை அத்திக்கில்
முத்திரை பதித்தவன் . திரைப்பட பாடல்களின் கடு மையான வரையறைக்குள் நின்று கொண்டே பட்டுக்கோட்டையால்
விரும் பியதைச் சொல்ல முடிந்தது. யுக மவுனங்களை உடைத்தது அவனது அச்சமற்ற எளிய வரிகள்.
அது எப்படி சாத்தியமாயிற்று ? பார்ப்போம் அடுத்த வாரம்.
நன்றி : தீக்கதிர் , இலக்கியச் சோலை 19 - 05 -
2014
0 comments :
Post a Comment