கடவுளின்
ராஜ்யம் சமீபத்திருக்கிறது
கண்ணெதிரே
சாட்சியங்கள் வரிசை கட்டுகின்றன
சாட்சியம்
ஒன்று
வேதப்புரத்துக்கு
ராஜா யார் ?
தாய் தந்தையருக்கு
பிறக்காத தெய்வக் குழந்தை!
சாட்சியம்
இரண்டு
வேதபுரத்துக்கு
நியாயதிபதி யார் ?
கடவுள் சொல்ல
சொல்ல தீர்ப்பு எழுதுபவர்!
சாட்சியம்
மூன்று
வேதபுரத்துக்கு
குடவோலை அதிபதி யார் ?
கடவுள் ராஜா
கண்ணசைவில் காரியமாற்றுவோர்!
சாட்சியம்
நான்கு
வேதபுரத்துக்கு
கணக்குப் பிள்ளை யார் ?
காற்றில்
கணக்கெழுதும் கடவுளின் ஏவலாள் !
சாட்சியம்
ஐந்து
வேதபுரத்தாருக்கு
ஆசீர்வதிக்கபட்ட சாஸ்திரம் எது ?
கார்ப்பரேட்டே
கடவுள் .கடவுளே கார்ப்பரேட் !
சாட்சியம்
ஆறு
வேதபுரத்தாரின்
விதிதான் என்னவோ ?
வெந்ததைத்
தின்று விதிவந்தால் சாவது …
சாட்சியம்
முடிவதில்லை
கடவுளின்
வரம் பெற்ற சில குழந்தைகள் பஞ்சு மெத்தையில்
சபிக்கப்பட்ட
கோடிக்கணக்கான சாத்தானின் குழந்தைகள் சாக்கடையில்
கடவுளின்
ராஜ்யம் சமீபத்திருக்கிறது
கண்ணெதிரே
சாட்சியங்கள் வரிசை கட்டுகின்றன
சுபொஅ.
26/10/24.
0 comments :
Post a Comment