பணம் சார் உளவியல்

Posted by அகத்தீ Labels:

 



இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஓர் வங்காளி இளைஞனோடு பேசிக்கொண்டிருந்தேன் .அவனுக்கு தொழில் அதிபராவதே கனவு . அந்தக் கனவோடு இப்போது வெளிநாடு சென்றிருக்கிறான் . அவனோடு பேசும் போது  சொன்னான் , “ நீங்கள் “The Psychology of Money” என்ற புத்தகத்தைப் படித்தால் கம்யூனிஸ்டாகத் தொடரமாட்டீர்கள் .”

 

நான் அந்த புத்தகத்தை படிக்க விரும்பினேன் . ஆயின் வாசிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை . அண்மையில் சேலம் பாலம் புத்தக நிறுவனத்தில் இப்புத்தகம் குறித்த செய்தி பார்த்தேன் . தமிழில் வந்திருப்பதை அறிந்தேன் .  “பணம் சார் உளவியல்” நூலை வரவழைத்தேன் . வாசித்தேன் .என் உளவியலுக்கு பொருந்தா நூல் இது .பங்கு சந்தைக்கும் எனக்கும் வெகுதூரம் .

 

இப்போது கைநிறைய சம்பாதிக்கும் , பெரும் கனவுகளை சுமந்து திரியும் , பட்டனைத் தட்டினால் பணமும் புகழும் கொட்ட ஆசைப்படுகிற நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கு ஆன்மீக வழிகாட்டும் “கார்ப்பரேட் குருஜி”க்கள் போல் பண வழிகாட்டும் உபதேசம்தான் இந்நூல் என எனக்குப் பட்டது. சிரமப்பட்டு படித்து புரிந்து கொண்டது இதைத்தான் . எனக்கு இத்துறையில் நாட்டம் இல்லாததால் அந்த முடிவுக்கு நான் வந்திருக்கவும் கூடும் .அது வேறு உலகம் ; நான் வேறு உலகம்.

 

சுபொஅ.

24/10/24.


0 comments :

Post a Comment