சாக்லேட்டில் தண்ணீரில் செல்போனில் நூண் அரசியல்

Posted by அகத்தீ Labels:

சாக்லேட்டில் தண்ணீரில் 
செல்போனில் நுண் அரசியல் ...

சு.பொ. அகத்தியலிங்கம்

அரசியல் பேசும் அயல் சினிமா
ஆசிரியர்: இ.பா. சிந்தன்
வெளியீடு: கோணம்,
பாரதி புத்தகாலயம்7,
இளங்கோ தெரு, தேனாம்பேட்டைசென்னை - 600 018

பக்: 192, விலை ரூ.140 /-


உங்களுக்கு சினிமா பிடிக் கும் தானே! ஆனால் அரசி யல் பிடிக்குமா ?”“ சார் ! அரசியல் நமக்கெதுக்கு? சினிமாவைப் பார்த்தமா ரசித்தமா அதோட விட்ரணும்..”இப்படித்தான் நம் உரை யாடல் தொடரும். ஆனாலும் ஒவ்வொரு சினிமாவும் அரசியல் பேசிக் கொண்டுதான் இருக்கிறது... நம்முடைய சமூக உளவியலை அது செதுக்கிக்கொண்டும் சிதைத்துக் கொண்டும்தான் இருக்கிறது. தமிழ் சினிமாவும் இப்படித்தான். பராசக்தியும் வேலைக்காரியும் இரத்தக்கண்ணீரும் அதுபோன்றபடங்களும் பேசிய அரசியல் ஒருவிதம். ஜென்டில்மேனும், அந்நியனும் அதுபோன்றபடங்களும் பேசும் அரசியல் இன்னொரு ரகம் . ரோஜாவும், கள்ளழகரும், விஸ்வரூபமும் பேசும் அரசியல் வேறு ரகம். ஒவ்வொரு படமும் ஒரு அரசியலை பேசிக்கொண்டே தான் இருக்கிறது . ஆனால் அந்த அரசியல் யாருக்காக ? எதற்காக? இதுவே அடிப்படைக் கேள்வி.

இவரா அவரா என்ற சாக்கடை அரசியல் அல்ல; – சாதி மத தீய அரசியல் அல்ல;– வாழ்க்கையை மேம் படுத்தும் வர்க்க அரசியலை நம் படைப்புகள் பேசுகின்றனவா? இங்கே அப்படியொரு புதிய வெளிச்சக் கீற்று . இந்தப் புத்தகம் 16 அயல் மொழி சினிமாக்கள் பற்றி பேசு கிறது. சினிமா விமர்சனமல்ல; திரைக்கதை சுருக்கமுமல்ல ; அந்த சினிமாக்களை முன் வைத்து பின்புலத்தோடு ஒரு அறிமுகம் தருகிறது. இப்படங்களில் அப் படி என்ன சிறப்பு இருக்கிறது ? உங்களின் இன்னொரு உறுப்பாகவே மாறிப்போன செல் போன்கள் - உங்கள் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் சாக்லேட் - நீங்கள் அருந்தும் கோக், உங்கள் சமையலறையிலுள்ள தேங்காய் எண்ணெய், நீங்கள் தாகம் தணிக்கும் தண்ணீர்; இப்படி ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் நெஞ்சைப் பதறவைக்கும் கதை இருப்பதை நீங்கள் அறிவீர்களா? ஒரு சதி இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா ? இப்புத்தகம் அதற்கு உதவும் .

காங்கோவில் கிவு பகுதியில் கிடைக்கும் கோல்டன் மற்றும் கசி ரைட் ஆகிய இரு கனிமங்கள்தான் நாம் பயன்படுத்தும் செல்போனின் அடிப்படை என்பதை அறிவீர்களா? இந்தக் கனிமங்களைக் கொள்ளைய டிக்க காங்கோவில் உள்நாட்டு யுத்தம் தூண்டி விடப்படுவதை ஊடகங்கள் அம்பலப்படுத்திய துண்டா? இதுவரை 50 லட்சம் மக்கள் கொல்லப்பட்ட துயரை யாரறிவார்? பன்னாட்டு நிறுவனங் களும் ஏகாதிபத்தியமும் கொடூ ரமாய் நடத்தும் கனிமவேட்டையை அம்பலப்படுத்தும் படமே டென் மார்க்கைச் சார்ந்த பிராங் தயாரித்த BLOOD IN MOBILE –(செல்போனில் காங்கோ மக்கள் ரத்தம்)

சாக்லேட்டை விரும்பாத குழந் தைகளும் இல்லை . பெரியவர்களும் இல்லை. சாக்லேட் தயாரிக்க பெரிதும் பயன்படும் கோகோ 45 விழுக்காடு உற்பத்தி செய்யப்படுவது ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட். அங்கு கோகோ தோட்டங்களில் 18 லட்சம் குழந்தைத் தொழிலாளிகள் வதைக்கப்படுகிறார்கள்.
அந்த ஏழைக் குழந்தைகளின் கண்ணீரும் வியர் வையும் ரத்தமும் நாம் சாப்பிடும் ஒவ்வொரு சாக்லேட்டிலும் உறைந்து போயிருக்கிறது; அத்துடன் பன் னாட்டு நிறுவனங்களின் கொடூர சுரண்டலும் மனித உரிமைகளை அதிலும் குழந்தை உரிமைகளை மிதிக்கும் அநியாயமும் கலந்து இருக் கிறது. இதனை வெளிச்சம் போட்டுக் காட்ட டென்மார்க்கைச் சார்ந்த மிக்கி மிஸ்திராதி தயாரித்த படமே THE DARK SIDE OF CHOCOLATE(சாக்லேட் தயாரிப்பின் கசப்பான மறுபக்கம்) பஸ்ஸில் ரயிலில் பயணிக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் எதிர் கொள்ளும் முக்கிய சவால் ஆண்க ளின் வக்கிர உரசல் .
பெண்களின் பாலியல் கொடுமைகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட எகிப்து படம் “678” (ஆம் பேருந்து தடம் எண் 678) எல்லோருக்கும் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்க விழைவது நல்ல முயற்சி . ஆனால் குண்டு மழை பொழியும் யுத்தகளத்தில் இது சாத்தியமா? மனிதன் மீது நம்பிக் கையும் காதலும் ததும்பி வழியும் போது எதுவும் சாத்தியமே . சமிரா மக்மல்பப் என்கிற ஈரானிய பெண் இயக்குநர் இயக்கிய BLACK BOARDS (போர்ச்சூழலில் ஆசிரியப் பணி ) நம்மை உலுக்குகிறது . மழைத்தண்ணீரை பிடிக்கவும் காசு கொடுக்க வேண்டுமாம். தண்ணீரையும் விற்பனைச் சரக்காக் கும் முதலாளித்துவச் சுரண்டல் கொடூரத்தின் சாட்சியாய் பொலி வியா. இதற்கு எதிராக கிளர்ந்தெழுந் தனர் மக்கள். இதனைப் படமாக் கியிருக்கிறார் இயக்குநர் செபாஸ் டின் தயாரிப்பாளர் கோஸ்டா இருவரும் .

EVEN THE RAIN – 2010 (பொலிவிய தண்ணீபுரட்சி )கோக் நிறுவனம் ஒரு நாட்டின் நீராதாரத்தை ஒட்ட உறிஞ்சுவது டன்; உழைப்பாளிகளையும் ஒட் டச் சுரண்டுகிறது. உரிமை கேட்க தொழிற்சங்கம் அமைத்தால் கொலைவாளைச் சுழற்றுகிறது . கொலம் பியாவில் எட்டு தொழிற் சங்கத் தலைவர்களைக் கொன்றிருக் கிறது . இதனை அம்பலப்படுத்தும் THE COCA COLA CASE (கொலை கார கோக் )கியூபா எப்படி அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளைத் தாங்கி நிற்கிறது என்பதைச் சொல் லும் HOW CUBA SURVIVED PEAK OIL படம் மூன்றாம் உலக மக்களுக்கு நல்ல பாடம். சமத்துவத் திற்காகப் போராடிய இங்கிலாந்துப் பெண்களின் கதை , ஊடகங்கள் மறைத்துவிட்ட வெனிசுலாவின் மக்கள் புரட்சி, – முதலாளிகளான அர்ஜெண்டினா தொழிலாளிகள் – பூகென்வீலில் நடந்த தேங்காய் புரட்சி, – ஆப்பிரிக்காவின் சேகு வேரா என்றழைக்கப்படும் தாமஸ் சங்கராவின் வாழ்க்கைக் கதை – THIS IS NOT A FILIM படம் தயாரித்து அரசு அடக்குமுறைக்கு அடிபணிய மறுத்து சிறையேகிய ஜாபர் பனாகி- அமெரிக்காவின் அங்காடித்தெரு பாலஸ்தீன மக்களின் போராட் டத்தை நம்பிக்கையை வெளிப்படுத் தும் முயற்சியில் ஐந்து கேமிராக்களை இழந்த கதை; என ஒவ்வொன்றும் ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் சுரண் டலை அதன் அரசியலை வலுவாகப் பேசுகின்றன.
திரைப்படத்தின் தொழில் நுட்பம் அழகியல் இவற்றை இந் நூல் பேசவில்லை. தேவையும் இல் லை. ஒடுக்குமுறையினூடே எந்தவாய்ப்பும் வசதிகளுமற்ற சூழ லில் உலகம் அறிய வேண்டிய உண்மைகளை – சுரண்டல் ஆதிக்கஅரசியலை உரக்கப்பேசுகிறது இந்நூல். தீக்கதிர் வண்ணக்கதிரிலும் மாற்று இணைய இதழிலும்தொடர்ந்து இ.பா.சிந்தன் எழுதிய வற்றின் தொகுப்பே இந்நூல். கம்ப் யூட்டர் துறையில் நன்குபடித்துமென்பொருள் வல்லுநராய் திகழும் இ.பா. சிந்தனின் சமூக அக்கறையும் தெளிவான சிந்த னையும் உயிரோட்டமான எழுத்தாற்றலும் வியக்கவைக்கின்றன.

பாராட்டுக்கள். தன் தந்தை பாக்கியம் பிள்ளை ஊட்டிய சமூக விஞ்ஞானமே தன் விழிகளைத் திறந்ததாக சிந்தன் வாக்கு மூலம் தருகிறார். சிந்தனோடு பாக்கியம் பிள்ளைக்கும் எமது பாராட்டுகள். வாழ்த்துகள். இன்றைய ஊடக உலகம் பொதுவாக உலகமயத்தையும் அதன் தீய விழைவுகளையும் பேசுவதில்லை; மாறாக சமூக உளவியலை அவர்களுக்குச் சாதக மாக தகவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. அதில் குறிப் பிடத்தக்க வெற்றியும் பெற்றுள் ளன.

இந்தச் சூழலில் மக்கள் பிரச்சனைகளை – அதன் அரசி யலை கவிதையாய், சிறுகதை யாய், நாவலாய், குறும்படமாய், ஆவணப்படமாய், ஓவியமாய், நாடகமாய் படைப்போனே இன்றையத் தேவை . அத்தகைய படைப்புகள் விமர்சன ஜாம் பவான்களுக்கு குமட்டலைத் தரலாம்; ஆனால் சமூகத்தை நேசிக்கும் படைப்பாளியும் போராளியும் அதனை உயர்த்திப் பிடித்தாக வேண்டும். இந்நூல் அதன் சாட்சி. இந் நூலைப் படியுங்கள்! இது பேசும் அரசியலை விவாதியுங்கள்! பரப்புங்கள்! அதுவே பல புதிய வாசல்களைத் திறக்கும்






0 comments :

Post a Comment