அடுத்த நிமிடமே ஆணாகிவிடுகிறாய்..

Posted by அகத்தீ Labels:




சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 19
அடுத்த நிமிடமே நீ ஆணாகிறாய்...
சு.பொ.அகத்தியலிங்கம்.

“நாளும் கிழமையும் / நலிந்தோர்க் கில்லை / ஞாயிற்றுக் கிழமையும் / பெண்களுக்கில்லை ” - கவிஞர் கந்தர் வனின் இந்த நாலுவரிக் கவிதையை மேற்கோள் காட்டாமல் பெண்ணி யம் குறித்து யாரும் பேசமுடியாது .

“ முத்தங்களாகிய கலவியில் மயங்கி / இறுக அணைத்து வியர்வையில் ஒட்டி / கரைந்துபோகும் அடுத்த நிமிடமே / நீ !ஆணாகி விடுகிறாய்” என கசக்கும் யதார்த்தத்தை போட்டு உடைக்கிறார் தமிழீழக் கவிஞர் றஞ் சினி .

“பெண்ணெனும் மாயப் பிசாசாம்” எனச் சபித்த மரபும் தமிழுக்கு உண்டு; கணவனிடம்கூட தன்னாசையை சொல்லக்கூடாதென இலக்கணச் சங்கிலி பிணைத்ததும் தமிழ்மரபே ; இதை மீறி உடல் இச்சையை தன் காதலனான இறைவனை விளித்துப் பாடிய ஆண்டாளும் , காரைக்கால் அம்மையாரும் தமிழ் மரபே . பாரதி யும் பாரதிதாசனும் பெண் உரிமை யில் புதுத்தடம் பதித்தனர் . பெரி யாரை விஞ்சிய ஒரு பெண்ணியவாதி யாருண்டு இங்கு?பெண்சமத்து வத்துக்கான கம்யூனிஸ்ட்களின் குரல் தனித்துவமானது .மணலூர் மணியம்மா போன்ற வீரியமிக்கப் பெண் போராளிகள் களங்கண்ட தஞ்சை மண்ணில் பிறந்த பட்டுக் கோட்டையிடம் அதன் மரபும் வீரியமும் தெறித்தோங்கியது .

“ஆம்பளைக் கூட்டம் ஆடுற ஆட் டம் / அத்தனையும் பார்த்தோம் கேட்டோம் - அதை / ஆரம்பிச்சாத் தெரியும் திண்டாட்டம் ” என அதிர டியாய் தொடங்குவார் “ புதுமைப் பெண்” (1959) திரைப்படத்திலே . இந் தப் பாடல் முழுவதும் ஒரே சாடல் தான் . ஆனால் அனைத்தும் உண்மை. “ அடங்கிக் கிடக்கிறதும் பணிஞ்சு நடக்கிறதும் / ஆக்குறதும் காக்கற தும் நாங்க /உண்டாக்கிறதும் காக்கிற தும் நாங்க / அதை அடிச்சிப் பறிக்கிற தும் அடுத்துக்கெடுக்கிறதும் / அட்ட காசம் பண்ணுறதும் நீங்க ” இந்த வரிகளைத் தொடர்ந்து அவர் பாடு வார் , “ ஆணுக்குப் பெண்கள் அடி மைகள் என்று / யாரோ எழுதிவச் சாங்க - அன்று / யாரோ எழுதிவச் சாங்க - அதை / அமுக்கிப் பிடிச்சுக் கிட்டு விடமாட்டேன்னு / ஆண்கள் ஒசந்து கிட்டாங்க - பெண்கள் / ஆமை போல ஒடுங்கிப் போனாங்க” எவ்வளவு பெரிய செய்தியை சும்மா போகிறபோக்கில் சொல்லிவிட்டார் . அதுதான் பட்டுக்கோட்டை .அடுத்த பத்திகளில் விதவை மறுமணம் , பாலியல் வன்முறை பேசுவார், சாடு வார் .

தாலி பெண்ணுக்கு வேலி என்பார் ஒரு சாரார் ; தாலி அடிமைச் சங்கிலி என்பார் இன்னொரு சாரார் . பட்டுக் கோட்டை நடைமுறை யதார்த்தத்தோடு யோசித்தவன் . “ வீரக்கனல் ” ( 1960) திரைப் படத்தில் ஆணும் பெண் ணும் மாறி மாறிப் பாடுவதாக ஒரு பாடல் .“போட்டுகிட்டா ரெண்டு பேரும் / சேர்ந்து போட்டுக்கணும் - ஒலகம் / புதுசா மாறும் போது பழைய / மொறைய மாத்திக்கணும் ”என அவள் எடுக்க “தாலி போட்டுக் கிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் ”என அவனும் ஒத்திசைக்க பாடல் கம்பீரமாய் எழும் . அப்போது பெண்சொல்வது தான் முக்கியம் , “ போட்டுக்கிடும் முன்னே நல்லா / பொண்ணும் புள் ளையும் பாத்துக்கணும் / புடிக்கு தான்னு கேட்டுக்கணும்” அதில முக்கியம் என்னவெனில் பெண்ணி டம் விருப்பத்தை கேட்பதைக்கூடத் தவறுன்னு கருதற அந்தநாளில் பெண் வாயிலாக முதலில் விருப்பத்தைக் கேட்கணும்னு சொன்னது சாதாரண விஷயமல்ல .

“ புரிஞ்சுக்காம ஆரம் பிச்சா / ஆபத்தில மாட்டிக்கணும் ” என அவன் சொல்வது விளக்கமா கியது .தாலி விவகாரம் அவ்வளவு சுலப மானதா ? பெண் மூலம் பட்டுக் கோட்டை ஒரு கருத்தை - பாமர நெஞ்சில் புரையோடிய ஒன்றை சொல்லவைப்பார் , “ கழுத்திலே தாலி கெடந்தா / காலிகூட மதிப்பான் - கொஞ்சம் / கண்ணியமா நடப்பான் - இந்த / கயிறு மட்டும் இலையின்னா / கழுதை போல இடிப்பான் ” இதற்கு ஆண் மூலம் பதில் சொல்வார் , “ ஆம்புளைக்கும் தாலி கெடந்தா / அடுத்த பொண்ணு மதிப்பா - கொஞ் சம் / அடங்கி ஒடுங்கி நடப்பா - இந்த / அடையாளம் இல்லயின்னா / அசட்டுத்தனமா மொறைப்பா ”

ஒருமுறை ஒரு திருமண விழாவில் வாழ்த்துரைக்கும் போது ஆணுக்கும் தாலி வேண்டும் . அடையாளம் வேண்டும் என இப்பாடலைச் சொல்லி நான் பேசினேன் . பெண் களிடம் பெரும் வரவேற்பு . அடுத்து வாழ்த்த வந்த தோழர் வே . மீனாட்சி சுந்தரம் , “ அகத்தி சொல்வது சரி தான். ஆனால் இந்த ஆம்புளைங்கள நம்ப முடியாது. தாலியைக் கழற்றி வச்சுகிட்டு ஊர் மேயத் தொடங் கிவிடுவானுக , அதனாலே திருமண மான ஆண்கள் நெற்றியில் பேசாமல் பச்சை குத்திவிடலாம்”என அதிரடி குண்டை வீசினார் . பெண்கள் மத்தி யில் ஆரவாரம் அடங்க வெகுநேரம் ஆனது .ஆணாதிக்கம் மீதான பெண் களின் பொருமல் அந்த ஆரவாரத்தில் வெளிப்பட்டது .

பேச்சு எப்படி இருப்பினும் தமிழ்நாட்டில் பெருவாரியான திருமணம் தாலியோடுதான் அரங் கேறும் . பட்டுக்கோட்டையும் இதை அறிவான் . எனவே இப்பாடலில் பின்னர் வந்த வரிகளில் “போடுற முடிச்சை இறுக்கிப் போடணும் - இழுத்துப் பார்க்கணும் - எடையில் பிரிஞ்சுக்காம முறுக்கிப் போட்டுக் கணும் - உண்மைஅன்பு ,ஆசை இரண்டையும் சேத்துப் போட்டுக் கணும் - பொறுப்பு வளர்ப்பு சட்டம் நாமே போட்டுக்கணும் - வரவு செலவு திட்டம் போட்டுக்கணும்” என வரிசையாய் சொல்லுவார் . இருவரும் இணைந்தே அனைத் திலும் செயல்படலே வாழ்க்கை என்பது பட்டுக்கோட்டையின் முடிபு.மனைவியைக் குழந்தையை மறந்து திரிந்தவனை மன்னிக்கக் கூடாது என்பன போன்ற வலுவான கருத்தோட்டங்களை முன்பே பார்த்தோம் . எங்கும் சமத்துவம் தேடி யவன் அவன் .

அதேசமயம் இன் றைக்கு வீறிட்டெழும் பெண்ணிய நோக்கு அந்நாளில் பெரியாரிடம் வெளிப்படினும் சமூகத்தில் - குறிப்பாக பெண்களிடம் இன்றைக்கு முனைப்பு பெற்ற அளவு பெற வில்லை ; இருப்பினும் பட்டுக் கோட்டை முடிந்த அளவே - அது வும் திரைப்பட வரம்புக்குள் நின்று பேசினான் .கிஷ்வர் நஹீத், என்னும் பாகிஸ் தானிய பெண் கவியின் குரலொன்று இன்னும் தீர்க்கமானது.

“ஒரு ஆடுகுதிரையின் மீது
ஒரு குழந்தை ஆடுகிறது
அது மரக் குதிரை
குழந்தையின் ஸ்பரிசம் அறியாதது
குழந்தை குதிரையை அடிக்கிறான்
தனது திறமையைக் கண்டு
தன்னையே மெச்சிக் கொள்கிறான்
அவன் வளர்ந்து பெரியவனாகிறான்
மரக்குதிரையில் மீண்டும் சவாரி செய்கிறான்
ஒரு சடங்கின் மூலம்
தன் இளமையை அறிவிக்கிறான்.
இரவு கழிந்ததும்
குதிரை உருமாறுகிறது
குதிரையை அடிப்பவன்
தன்னைத் தானே மெச்சிக்கொள்கிறவன்
மாறாமலேயே இருக்கிறான்:
எஜமானனாக
சவாரி செய்பவனாக
கணவனாக “

சரி ,பட்டுக்கோட்டையின் இதர சமூகத்தடங்களை அடுத்து பார்க் கலாம் .

நன்றி : தீக்கதிர் 8 செப் 2014

0 comments :

Post a Comment