கொலை,
கொள்ளை, கற்பழிப்பு செய்திகள் பலவற்றை ஊடகங்கள் மூலம் அன்றாடம்
அறிகிறோம். ஒன்றிரண்டு செய்திகள் மட்டுமே பரபரப்பாக சில நாட்கள்
பேசப்படுகிறது. அதுவும் அப்புறம் நினைவுத்திரையிலிருந்து மறைந்துவிடுகிறது.
பல செய்திகள் எந்த சலனத்தையும் உருவாக்குவதில்லை. வெறும் தகவலாக அறிந்து
கொள்வதோடு நின்று விடுகிறோம். ஏன் அப்படி? சமூகத்தின் மனசாட்சி
மரத்துப்போய்விட்டதா? அப்படி சொல்வது கடுமையான விமர்சனமாகிவிடும். ஆனால்
சமூகத்தின் பொதுப் புத்தியில் குற்றச் செயல்களுக்கு எதிரான விழிப்புணர்வு
போது மானதாக இல்லை. குறிப்பாக ஜனநாயகப் பூர்வமானதாக இல்லை.
முதலாவதாக,
நாட்டில் நடைபெறும் அனைத்து கிரிமினல் குற்றங்களும் வெளிச்சத்திற்கு
வருகிறதா? நிச்சயம் இல்லை. சாதிச் செல்வாக்கு, பணச் செல்வாக்கு இவற் றால்
மூடி மறைக்கப்படும் குற்றச்செயல்களே அதிகம். அதையும் மீறி வெளிவருவது சரிபாதிக்கூட இருக்காது. அப்படி வெளிச்சத்திற்கு வந்த கிரிமினல் செயல்களில்
எத்தனை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது? அதில் எத் தனை மீது முறையான
குற்றப்பத்திரிகை தாக் கல் செய்யப்பட்டது? எத்தனை வழக்குகள் உரிய காலத்தி நடத்திமுடிக்கப்பட்டது? அதில் எத்தனை வழக்கில் குற்றவாளிகள்
தண்டிக்கப்பட்டார்கள்? இப்படி கேள்விகளை எழுப்பி, விவரங்களை சேகரித்து அலச
விரும் பினால், முதலில் விவரங்கள் கிடைப்பதே அரிது. கிடைக்கிற விவரங்களோ
அதிர்ச் சியையூட்டும்.
இந்தியாவில் 28 விழுக்காடு கிரிமினல் வழக்குகளில்
மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதாவது நூற்றுக்கு 72 பேர்
எளிதாக தப்பிவிடுகின்றனர். கொலை வழக்குகளில் நூற்றுக்கு 64 பேரும், கொள் ளை
வழக்குகளில் நூற்றுக்கு 79பேரும் தப்பி விடுகின்றனர். முறையே 36 பேரும்
21பேரும் தண்டிக்கப்படுகின்றனர். இது நமது காவல் துறை செயல்பாட்டின் ஊனத்தை
படம்பிடிக் கிறது. நீதித்துறையின் லட்சணத்துக்கு சாட்சி யாக
உள்ளது.
வழக்குகள் பதிவு செய்வதில் அகில இந்திய சராசரியை விட 10 விழுக்காடு
அதிகம் பெற்று தமிழகம் முன்னிலையில் இருப்பதும்; தண்டனை பெறும்
விகிதத்திலும் தமிழகம் அகில இந்திய சராசரியை விட சற்று மேலே உள்ளதும் அரசு
தன் சாதனையாக பீற்றிக் கொள்ள உதவலாம்; ஆனால் மக்கள் மகிழ்ச்சி யடைய
எதுவுமில்லை.ஏனெனில் உப்புசப்பு இல்லாத சில சில்லரை
பிரச்சனைகளில் வழக்குப்பதிந்து ஆயிரம், இரண்டாயிரம் அபராதம் கட்டவைத்து,
தங்கள் சாதனை புள்ளி விபரத்தை பெருக்கிக் காட்டும் வித்தை தமிழக
காவல்துறைக்கு கைவந்திருக்கிறது; அவ்வளவுதான். சமூகத்திற்கு சவாலான
குற்றங்கள், குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தாழ்த்தப்பட்ட
மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதி லும்,
தண்டனை பெற்றுத்தருவதிலும் மிகவும் பின்தங்கியே உள்ளது தமிழகம்.
இந்தியாவின் பொது வியாதியிலிருந்து தமிழகமும் தப்ப வில்லை. வாச்சாத்தி
வழக்கு எவ்வளவு காலம் இழுத்தடிக்கப்பட்டது என்பதும்; பரமக்குடி
துப்பாக்கிச்சூட்டில் அரசின் பாரபட்சமான போக்கும்; விழுப்புரம் இருளர்
பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான வழக் கில் காவல்துறையின்
நகைப்புக்கிடமான செயல்பாடும் காவல்துறையின் சீழ்பிடித்த ரணத்தை நமக்கு
காட்டுகிறதல்லவா?
நீதித்துறையும் பெரும் நம்பிக்கையூட்டு வதாகவும்
கூறமுடியாது. சுமார் 30 லட்சம் வழக்குகள், 21 உயர்நீதிமன்றங்களில் தேங்கிக்
கிடக்கின்றன. மாவட்ட மற்றும் கீழ்நிலை நீதி மன்றங்களில் தேங்கிக்கிடக்கும்
வழக்குகள் சுமார் 2.6 கோடியாகும். உயர்நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும்
கிரிமினல் வழக்குகள் மட்டும் சுமார் 7 லட்சத்திற்கும் மேல் இருக்கும்.
போதுமான நீதிபதிகள் இல்லாமை ஒரு கார ணம். குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யாமல் வழக்கை இழுத்தடிப்பதும்; வழக்கை நடத்து வதில் காட்டப்படும்
எல்லையற்ற மெத்தன மும் இடையூறும் எல்லாமுமாக சேர்ந்து வழக் குகள் மலைபோல்
தேங்கிடச் செய்கின்றன.
விசாரணைக் கைதியாகவே சிறைகளில் பல
ஆண்டுகள் அப்பாவிகள் அடைக்கப்பட் டுள்ள கொடுமையில் இந்தியா பெரும் பங்கு
வகிக்கிறது. அதிலும் தமிழகம் தனி இடம் வகிக்கிறது. இதனை தனியாக
பரிசீலித்தால் பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் தான் இதில் பெரும் எண்ணிக்கையினர். நம் சமூக நீதி பாழ்பட்டிருப்பதன் கோரச்சாட்சி இது.
தூங்கும்
நீதித்துறை போதுமான நீதிபதிகள் இல்லை என்று புலம்புவது போல காவல்
துறையிலும் போதுமான ஆட்கள் இல்லை என்ற குரல் கேட்கிறது. அமெரிக்காவில் 10
லட்சம் மக்கள் தொகைக்கு 27 போலீஸ், கன டாவில் இது 30 ஆக உள்ளது.
பிரிட்டனில் 20 ஆக உள்ளது. சீனமும் பிறநாடுகளிலும் இது இரண்டிலக்க எண்ணாக
உள்ளது. ஆனால் இந்தியாவில் 10கூட இல்லை. 9 மட்டுமே என்பதும்;
காவல்துறையில் கணிசமான பகுதி யினர் விஐபி, விவிஐபி எனப்படுகிற பெரிய
மனிதர்களின் பாதுகாப்புப் பணிகளிலுமே உள்ளனர். ஆக, போதுமான எண்ணிக்கையில்
காவல்துறை இல்லை என்பதும்; தேவைக் கேற்ப பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்படு
வதில்லை என்பதும் பிரச்சனையின் ஒரு பக்கம் மட்டுமே.
இதை எல்லாவற்றையும் விட
காவல் துறைக்கு அளிக்கப்படும் பயிற்சி அவர்களை மரத்துப்போன, மனசாட்சியற்ற
இயந்திரங்ளாய் மாற்றிவிடுகிறது. ஏவிவிட்டால் கடித்துக் குதறுகிற மிருக
இயல்பு, இவர்களுக்கு பயிற்சியின் போதே வழங்கப்பட்டு விடுகிறது. இதைத்தான்
முதலமைச்சர் ஜெயலலிதா புகழ்கிறார். மனித உரிமை, பெண்ணுரிமை, சமூக நீதி,
சாதிய ஒடுக்குமுறை, இவைக் குறித்த ஜன நாயகப்பூர்வமான பார்வை காவல்துறைக்கு
இல்லை; வழங்கப்படுவதில்லை.
ஒரு உதாரணம் போதும், நம் காவல்துறை யின்
ஊனப்பார்வையை பறைசாற்ற; ஒரு ஊரில் சாதிக்கலவரம் நடப்பதாக வைத்துக்
கொள்ளுங்கள். அங்கு நம் காவல்துறை எப்படி செயல்படும். அனுபவத்தை உரசுங்கள்.
ஆதி க்கச் சக்தியினர் தெருவில் செல்லும் போது, ஊர் நாட்டாமையை அழைத்து
மென்மையாக பேசி சம்பந்தப்பட்டவர்களை காவல்நிலை யத்திற்கு அழைத்துவர
வேண்டுகோள் விடுக்கும். விசாரணையும் நட்பாக நடைபெறும். ஆனால்
ஒடுக்கப்பட்டவர்கள் சேரியில் காவல்துறை பேயாட்டம் போடும். பண்டபாத்
திரங்களை உடைக்கும்; கையில் அகப்பட்ட வர்களை உதைக்கும்; மனைவியை, அம்மா வை
பிணையக் கைதியாக பிடித்து வரும்.
இந்த பாரபட்ச அணுகுமுறை
அறுபத்தைந்து ஆண்டுகளாகியும் மாறவேயில்லையே! காவல்துறையை நவீனமயமாக்கினால்
போதாது. மனசாட்சியுள்ளதாகவும் மனிதஉரிமை யை மதிப்பதாகவும்
பயிற்றுவிக்கப்பட வேண் டும். குறிப்பாக சாதிவெறி, மதவெறி, தீண்டா மை,
ஆணாதிக்க வெறி இல்லாத காவல்துறை நம் நெடுங்கனவாகவே போய்விடுமோ?
மக்களும்
விழிப்புணர்வு பெற வேண்டும். தங்கள் உரிமைகள் எவை? எவை? ஒருவர் கைது
செய்யப்படும்போது என்னென்ன செய்யலாம்? எதை எதை செய்யக்கூடாது? என்பனவற்றை
அறிந்து வைத்துக் கொள்வது என்பது முதல் நிபந்தனை.
கடுமையான தண்டனை தான்
குற்றங் களை குறைக்கும் என்று கருதுவதும்; பாஸ்ட் புட் மாதிரி உடனடி தண்டனை
வேண்டுமென தவறாக கருதி போலீசாரின் அத்துமீறல்களு க்கும் மோதல்
கொலைகளுக்கும் வக்காலத்து வாங்குவதும் மிகவும் ஆபத்தானது. தாமதிக்கப்பட்ட
நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது சரி தான். ஆனால் அவசர கோல தண்டனை அதைவிட
ஆபத்தானது. காவல்துறை குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில்
ஒப்படைப்பதை மட்டுமே செய்ய வேண்டும். தண்டிக்கும் அதிகாரம் ஒருபோதும்
எங்கேயும் காவல்துறைக்கு வழங்கப்படவில்லை; வழங் கப்படவும்
கூடாது.
கிரிமினல்களைசுட்டுக்கொல்லக்கூடாது எனில் அவர்கள் நீதிமன்றங்களில்
தப்பிவிடு கிறார்களே! எனவே என்கவுண்ட்டர் எனப் படுகிற மோதல் கொலைகள் சரி
என்பது போ ன்ற மனோநிலை பொதுவில் உள்ளது. ஊடக ங்கள் அதை
நியாயப்படுத்துகின்றன. அதற்கு ஆதரவாக வலிந்துகட்டி பிரச்சாரம் செய்கிறது.
இது மிகமிக ஆபத்தானது. காவல்துறை வழக் கை சீக்கிரம் முடித்ததாகக் காட்டவும்
மக்க ளின் கோபத்திலிருந்து தப்பவும்; உண்மை யான குற்றவாளிகளை
தப்புவிக்கவுமே என் கவுண்ட்டர்கள் செய்யப்படுகின்றன என்பதை பொதுமக்கள்
உணரவேண்டும். சமீபத்தில் ஒரு ஆங்கில நாளேட்டில் முன்னாள் போ லீஸ் அதிகாரி
எழுதிய கட்டுரையில், என் கவுண்ட்டருக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக மகிழ்வுடன்
குறிப்பிடுகிறார். இது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர வேண்டும்.
விழிப்புணர்வை விதைக்க வேண்டும்.
அதைபோல் “மக்களே திருடனை உதை த்துக்
கொன்றனர்” என்பது போன்ற செய்திகள் ஊடக பரபரப்புக்கு உதவலாம். ஆனால் மிக
வும் ஆபத்தானப் போக்கு இது.கும்பல் கூடும் போது எளிதில்
உணர்ச்சிவசப்படும் மக்க ளின் மனோநிலையை குற்றவாளிகள் பயன் படுத்தி
அப்பாவியை அல்லது சாட்சியை அழி க்கவும்; வழக்கை திசைதிருப்பவும் உதவிடும்
போக்கு இது. சந்தேகப்படுபவர்களை பிடித் துக்கொடுப்பது சரி; மக்கள் தாங்களே
தண் டனை வழங்குவது ஆபத்தானது. காவல் துறையின் அத்துமீறலுக்கு இது லைசென்ஸ்
வழங்கிவிடும்.
அப்படியானால், என்ன வழி என்று கேட் போருக்கு, பதில் உண்டு.
வாச்சாத்தி வழக்கி லாகட்டும், சிதம்பரம் பத்மினி வழக்கிலா கட்டும்
இறுதியில் நியாயம் கிடைக்க உதவி யது ஒன்றுபட்ட அமைப்பு ரீதியான போராட்ட
மும் முயற்சியும் அல்லவா? பிரேமானந்தா வழக்கில் அவர் தண்டனை பெற உதவியது
மக்களின் தொடர்ச்சியான கண்டனமும் போராட்டக்குரலும் அல்லவா? எங்கெல்லாம்
மக்கள் அமைப்பாக திரள்கிறார்களோ- எங் கெல்லாம் அமைப்புரீதியாக
இணைந்துநின்று அநீதிக்கு எதிராக விடாமல் போராடுகிறார் களோ, அங்கெல்லாம்
அவர்களால் வெற்றி பெற முடிகிறது. திரட்டப்பட்ட மக்களின் கோபம் மட்டுமே
தீமைகளை சுட்டெரிக்கும். மாறாக என்கவுண்ட் டர்களும், ஆத்திரத் தாக்
குதல்களும் எதிர்விளைவையே உருவாக்கும்.
0 comments :
Post a Comment