இளைஞர்கள் வீரியமான விதை நெல்தான்...
சு.பொ.அகத்தியலிங்கம்.
தினமணி நாளேட்டில் (10 -8-2012) ‘காக்க காக்க இளைஞரைக் காக்க’ என்ற தலைப்பில் மா.பா.குருசாமி ஒரு கட்டுரை தீட்டியிருக்கிறார்.இளைஞர்களை “விதை நெல்” என்ற மூதறிஞர் மேற்கோளெல்லம் சுட்டுகிறார். மெத்த சரி.
“இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்கிற கட்டுரையாளரின் நல்லெண்ணமும் போற்றுதலுக்கு குரியது. ஆனால் பார்வை இன்னும் விசா லப்பட வேண்டும்.
முதலாவதாக,பஞ்சாபில் ராணுவத்தில் சேர்வதில் இளைஞ்ர்கள் பேரார்வம் காட்ட வில்லை என்பதாக, ஒரு விதிவிலக்கான செய்தியைக் காட்டி முடிவுக்கு வருவது தவறானது.தமிழகம் உட்பட பல மாநிலங் களில் இராணுவத்திற்கு ஆள் எடுக்கும் நேரங்களில் கூட்ட நெரிசல் தாங்காமல் சில அசம்பாவிதங்கள் நடந்த செய்தியை கட்டு ரையாளர் அறிய மாட்டாரா? வேலையின்மை யும் இளைஞர்களை ராணுவத்திற்கு விரட்டு கிறது, தேசபக்தியும் சற்றும் சளைத்ததல்ல. கார்கில் போரில் நம் இளைஞர்கள் செய்த தியாகம் கணக்கில. பஞ்சாபிலும் நடந்தது என்ன என்பதை நாம் அறிய வேண்டும். ஒன்று- ராணுவத்துக்கு ஆளெடுப்புச் செய்தி போதுமான அளவு விளம்பரப்படுத்தாமல் இருந்திருக்கவேண்டும். இரண்டு,எல்லா காலத்திலும் இளைஞர்கள் ஆர்வம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என ஏன் எதிர்பார்க்கவேண்டும்? ஒரு காலத்தில் ராணுவத்தில் சேர ஆசைப்பட்ட அவர்கள் இன்று வேறு துறைகளை ஏன் தேர்வு செய்யக் கூடாது?
அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவன் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் பற்றி கட்டுரையாளர் கூறுகிறார். பண்பாட்டுச் சீரழிவு வேதனை அளிக்கத்தான் செய்கிறது. ஆனால் அது விதிவிலக்கான நிகழ்வு.
உண்மையில் இன்றைய மாணவர்கள் கல்வியில் காட்டுகிற வெறித்தனமான அக் கறையை பொதுவிஷயங்களில் காட்டுவது இல்லை என்று வேண்டுமானால் சொல்ல லாம். அதற்கு இன்றைய அரசியல், பொரு ளாதாரச் சூழ்நிலைகளையே குற்றவாளி யாக்க வேண்டும். மாணவர்களையோ இளைஞர்களையோ அல்ல.
போதைப் பழக்கம் கவலையளிக்கிறது. சமூகப் பொருளாதார பண்பாட்டுக் களம் போதை மீதான மோகம் அதிகரிக்கக் காரண மாக உள்ளது.உலகமய தத்துவம் இதற்கு தீனி போடுவதை அடையாளம் காட்டாமல் போதைக்கு எதிரான போர் அரைகுறை யாகவே இருக்கிறது.
கல்வியோ,வேலையோ இளைஞர்கள் ஒவ்வொருவரின் விருப்பத் தேர்வாக உள்ளது?அவன்/அவள் எதைப் படிக்க வேண்டும்? என்ன வேலை செய்ய வேண்டும்- இவற்றை தீர்மானிப்பது எது?அவனா/அவளா? இல்லை. இல்லை. எல்லாம் வியாபாரமாகி விட்ட சூழலில்-கடும் போட்டியாகிவிட்ட சூழலில் அவன்/அவள் விருப்பத்துக்கு மாறாக கல்வியும் வேலையும் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. விரும்பிச் செய்வதற்கும் கடமைக்குச் செய்வதற்கும் வேறுபாடு இருக் கத்தான் செய்கிறது.
கட்டுரையாளரே கூட கல்வி நிலையங் களை வியாபாரிகளிடமிருந்து மீட்டு கல்வி யாளர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றல் லவா கூறுகிறார். கல்வியில் தனியார் மயத்தை எதிர்க்காமல் கல்வியாளர்களிடம் ஒப்படைத்தால் சரியாகிவிடும் என்பது ஆபத் தான தீர்வல்லவா? கல்வி வழங்குவது அரசின் கடமையாக்கப்பட வேண்டாமா?அதை ஏன் கட்டுரையாளர் வற்புறுத்தவில்லை?
வேலையின்மை, கிடைக்கிற வேலையிலும் சமூகப்பாதுகாப்பின்மை, இதனால் எதிர் காலம் குறித்து ஏற்படும் அச்சம், உலகமயம் உருவாக்கும் பணமைய உளவியல், நுகர்வு வெறி,கிரெடிட் கார்டு கலாச்சாரம் இவை உரு வாக்குகிற சமூக பதற்றமே இளைஞர்களை யும் பாதிக்கிறது.
இதைப் பற்றி பேசாமல் இளைஞர்கள் பற்றி அவநம்பிக்கை புராணம் வாசிப்பது அர்த்தமற்றது.
மறுபக்கம், எல்லா வகையிலும் நம்பிக்கை யற்ற சூழல் நிலவும் போதும் அதையும் மீறி எமது இளைஞர்கள் சாதனைகள் படைப்ப திலும் போர்க்களத்திலும் முன்னிலையில் நிற்பது பெருமை அல்லவா?
“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது” - என்ற வள்ளுவப் பெருமான் வாக்கு எவ்வளவு தெளி வானது! .இதை மறக்கலாமா?
கடைசியாக ஒன்று; விடுதலைப் போரா கட்டும், தமிழகத்தில் மொழிப்போராகட்டும் மொத்த இளைஞர்களுமா ஈடுபட்டார்கள்? இல்லையே. துடிப்புள்ள முற்போக்கான ஒரு பகுதி இளைஞர்களே முதலில் களம் ஏகுவர். சூழல் கொதிநிலையை எய்தும் போது அது மாபெரும் எழுச்சியாகும். இளம் தலைமுறை எப்போதும் வீரியவிதைதான்.
ஆனால் உரம். தண்ணீர், சூரிய ஒளி,காற்று அனைத்தும் வேண் டும். பூச்சிகள் அரிக்காமல் காக்கவேண்டும். உழவன் பயிரைக் காப்பதுப் போல் முதியோர் களும் சமூகமும் இளைஞர்களை வளர்த் தெடுக்க வேண்டும். புரட்சிகர தத்துவம் இளை ஞர்களைக் கவ்விப்பிடித்தால் இந்தியா உல கிற்கே வழிகாட்டும்.அந்தந்திக்கு நோக்கி விரைவோம்...
நன்றி: தீக்கதிர் 11 ஆகஸ்ட் 2012
0 comments :
Post a Comment