வெறும் பயணக் கதை அல்ல;

Posted by அகத்தீ Labels:

 



வெறும் பயணக் கதை அல்ல;

கம்யூனிஸ இயக்கத்தின் பிரசவ வலி

சு.பொ.அகத்தியலிங்கம் .

 

[ புதிய புத்தகம் பேசுது .2021 ஏப்ரல்  இதழில் இடம்பெற்றுள்ள நூலறிமுகம் இங்கு மீள் பதிவாக தரப்படுகிறது . ]

 

“1923 ல் கான்பூரில் நடைபெற்ற சதிவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக் கைதியாக ஒவ்வொரு நாளும் 15 மைல்கள் என் காலில் பூட்டப்பட்ட விலங்கு களை இழுத்துக் கொண்டே செல்லும்படி நடத்தியே கூட்டிச் சென்ற போதும்கூட எனக்கு அத்துன்பங்கள் எல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை. ” என்கிறார் தோழர் செளகத் உஸ்மானி .

 

கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பின்னப்பட்ட கான்பூர், மற்றும் மீரட் சதிவழக்குகளில் 16 ஆண்டுகாலம் சிறைத்தண்டனையை அனுபவித்தவர் இவர்.

 

செளகத் உஸ்மானி போன்ற இளைஞர்கள் தேசவிடுதலைக் கனவை நெஞ்சில் சுமந்து கொண்டு மலைதாண்டி, நதி தாண்டி நடந்த ஓர் சாகசப் பயணம் – விடுதலைப் போருக்கு உதவி கோரி மீண்டும் ஓர் பயணம் – தோழமை நாட்டின் வெற்றியைக் கண்டுகளிக்க மூன்றாவது பயணம் என மூன்று முறை சோவிய த் யூனியனுக்கு பயணித்ததை சொல்லும் பயணநூலே “ஒரு புரட்சியாளனின் பயணங்கள்.” இந்நூல் வாழ்க்கை வரலாறல்ல ; ஆயின் அவர் வாழ்வின் முக்கிய கட்டங்களைச் சொல்லும்.

 

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் கிளை சோவியத் நாட்டில் தாஷ்கண்டில் 1920 அக்டோபர் 17 ஆம் நாள் உதயமானது . அதன் நூற்றாண்டைக் கொ ண்டாடி முடித்திருக்கிறோம்.

 

யாரோ நாலு பேர் சொகுசாக விமானம் ஏறிப்போய் தாஷ்கண்டில் உடகார்ந்து உருவாக்கிய கிளை என நினைத்துவிடாதீர்க ள். அந்தக் கிளையின் பிரசவ வலியை பலர் அறியமாட்டோம். ஆவணங்களில் இருந்து சில தகவல்களை மட்டுமே அறிந்திருப்போம். அந்த வலியை அங்குலம் அங்குலமாக அறிந்த செளகத் உஸ்மானி அவர் வார்த்தைகளில் அதைச் சொல்லுகிறார்.

 

முதல் பகுதி அந்த சாகசப் பயணத்தின் கதைதான். மெளலா பக்ஸ் உஸ்தா என்ற இயற்பெயர் கொண்ட செளகத் உஸ்மானி இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிக்கானீர் நகரில் ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்தவர். 1920 ஆ ம் ஆண்டு ஆப்க ன் அமீர் அமானுல்லாகான் அழைப்பை ஏற்று ஆப்கன் சென்று ஹிஜ்ரத் இயக்கத்தில் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராட ஏராளமான இளைஞர்கள் கால்நடையாகவே புறப்பட்டனர். ஒன்றல்ல இரண்டல்ல 36 ஆயிரம் பேர். அவர்கள் நடந்தே கடந்த தூரம் சுமார் முன்னூறு மைல்கள், அதில் செளகத் உஸ்மானியும் ஒருவர்.

 

பனிக்காற்றிலும் மழையிலும் போதுமான உணவின்றி இந்திய விடுதலை என்கிற ஒற்றை லட்சியமே உந்துவிசையாக நடந்தனர். சோவியத் வெ ற்றியு ம் சாத னைகளும் ஒரு ப குதி இ ளை ஞர்களை ஈர த்தது. துருக்கியில் பிரிட்டிஷாரால் அநியாயமாக பதவி நீக்கப்பட்ட காலிப்பை மீண்டும் அப்பதவியில் உடகார வைக்க வேண்டும் என்கிற உந்துதலும் கிலாபத் இயக்கமாக இதில் இருந்தது.

 

பயணம் புறப்படுகிறபோது எந்த இளைஞரும் கம் யூனி ஸ்டாக வேண்டும் மார்க்சியம் கற்க வேண்டும் எனும் வேட்கையோடு புறப்படவில்லை. ஆனால் இந்திய விடுதலைப் போரில் தலைமை தாங்கிய மிதவாதத் தலைமையின் போக் கில் நம்பிக்கை அ ற்ற இளைஞர்களுக்கு செஞ்சேனையின்  வீரம் ஈர்த்தது. அவர்கள் இந்தப் பயணத்தில் இணைந்து நின்றனர்.

 

ஆப்கானிலிருந்து சோவியத் எல்லையிலுள்ள திர்மிஷ் எனும் இடம் வரை கால்நடை, ஒட்டகம், படகு என பயணித்த சாகச அனுபவம் ஒரு வகை. ஓரிடத்தில் உஸ்மானி எழுதுகிறார்;

 

“அந்த இடத்தை நோக்கி நாங்கள் இறங்கிச் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. வழுக்கு பாறையில் கவனமாகச் செல்ல வேண்டும். இவ்வாறு அந்தப் பாதையில் ஒரு டஜன் மைல் நடந்து வந்தபின் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உண்டாக் கு ம் செ ய்தி எங்களுக்காகக் காத்திருந்தது. ஆம். நாங்கள் பாதை மாறி வந்து விட்டோம் .” இப்படி பல உ ண் டு . பெருக்கெடுத்து ஓடும் ஆற்றைத் தாண்டுவது, வெயிலைத் தாங்க முடியாமல் இரவு மட்டும் பயணிப்பது.. அந்த வலியை என்னென்பது?

 

சோவியத் யூனியனில் திர்மிஷ் நகரில் உற்சாகமாக கம்யூனிஸ்டுகள் வரவேற்றாலும் அதன் பின்னரும் பயணம் எளிதாகவில்லை. சோவியத் யூனிய னை ச் சூழ் ந்திருந்த எதிர்புரட்சிக்காரர்களிடம் சிக்கி பட்ட வேதனை கொடுமையானது. அதனை செளகத் உஸ்மானி வார்த்தையில் பார்ப்போம்,

 

“என்ன வாழ்க்கை இது! ராஜஸ்தானில் ஒட்டகங்கள் அல்லது குதிரைகள் இரண்டைப் பிணைத்திருப்ப து போன்று கால்களி ல் சங் கி லி க ளா ல் நாங்கள் பிணைக்கப்பட்டிருந்தோம். கைகளிலும் விலங்கிடப்பட்டிருந்தோம். ஒரு தடித்த வளை ய ம் எங்க ள் க ழு த்தைச் சு ற் றி மாட்டப்பட்டது. அது எங்களைப் பிணைத்திருந்த சங்கிலியுடன் கோர்க்கப்பட்டது .இரவு நேரங்களில் எங்களின் கால்களில் பிணைக்கப்பட்ட சங்கிலிகள் நீக்கப்பட்டன. ஆயினும் ஒருவரின் ஒரு காலோ டு மற்றொருவரின் கால் பிணைக்கப்பட்டது. தூங்குவதற்கும் சிரமப்பட்டோம்.”

 

இந்தப் பயணக்குழுவினர் எல்லோரும் ஒரே போன்ற நோக்கத்தோடு இல்லை.இதனால் பிளவு, கருத்து வேறுபாடு, சிக்கல் எல்லாம் சந்தித்தனர்.

 

செளகத் உஸ்மானி சொல்கிறார், “ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும்? 36 பேரும் [ஏனையோர் அவரவர் வழியில் சென்றுவிட்டனர்] அவியலான கூட்டத்தினர். எங்கள் போர்த்திறனும் உண்மையில் பெரிய அளவிற்குப் பரிட்சித்துப்பார்த்த ஒன்றுமல்ல. எனினும் எங்களுக்கு வேறு எந்த வழியும் கிடையாது. ஒன்று, போரிட்டுச் சாக வேண்டும். அல்லது எங்கள் கண் முன்னாலேயே நகரம் சூறையாடப்படும் . நாங்கள் பிற்போக்குவாதிகளின் கையில் வீழ வேண்டும். அதன் மூலம் ஓர் இழிவான கோழைத்தனமான மரணத்தை எதிர்கொள்ள வேண்டும்.”

 

இறுதியில் கெர்கி புரட்சிக் குழுவுடன் இணைந்து போரிட்ட அனுபவத்தை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகமலே சோவியத்தை காக்கும் சர்வதேசக் கடமையைச் செய்த தோழர்களை அவர் தியாகத்தை உஸ்மானி எழுத்தில் படிக்கும்போதே ரெட் சல்யூட் அடிக்கத் தோன்றுகிறது.

 

எதிர்புரட்சியை முறியடித்து தாஷ்கண்ட் செல்வது, மாஸ்கோ மற்றும் தாஷ்கண்ட் ராணுவப் பள்ளியில் பயில்வது, கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை உருவாவது என முதல் பாகம் சாகசமும் பிரமிப்புமாய் விரிந்துள்ளது சோவியத் யூனியன் சென்றவர்கள் பெரும்பாலோர் இஸ்லாமியராய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

அந்த முதல் கிளை ஆரம்பிக்கப்பட்டபோது, “நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சுமார் ஆறுமாதம் இணையாமல் இருந்தேன். இதற்கான காரணம் எளிது. எனக்கு மார்க்சியம் என்றால் என்ன என்றே தெரியாது. என்னுடைய பிரதானக் குறிக்கோள் ஒரு ராணுவ வீரனைப் போல் சண்டையிட வேண்டும் என்பது மட்டுமே ஆகும். இந்தியாவை விடுவிப்பதற்கான போராளியாய் இருக்க விரும்பினேன் . அவ்வளவுதான்.” என்கிறார் செளகத் உஸ்மானி.

 

இந்திய விடுதலை மீதும் இந்தியர்கள் மீதும் சோவியத் மக்களின் நல்லெண்ணமும் நட்பார்ந்த பார்வையும் அங்கு சோவியத் தேசம் முழுவதும் விரவிக் கிடப்பதை பலவேறு சம்பவங்களூடே நிறுவிச் செல்கிறார்.

 

காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்தது, உடல் நலிவுற்று சிங்கார வேலர் வீட்டில் ஓய்வெடுத்தது, பல்வேறு புரட்சிகர இளைஞர் குழுக்கள், காங்கிரஸ் தலைவர்களோடு உரையாடியது, தொடர்பு கொண்டது எனத் தொடங்குகிறது இரண்டாம் பாகம்.

 

1928 ஜூலையில் மாஸ்கோவில் நடந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது காங்கிரசில் சிக்கந்தர் சூர் என்கிற புனைப் பெயரில் செளகத் உஷ்மானி பங்கேற்றது, ஸ்டாலினு டன் தலைமைக்குழுவாக மேடையில் அமர்ந்தது என பல அரிய தகவல்களின் தொகுப்பாய் நீள்கிறது இரண்டாம் பாகம்.

 

இந்திய புரட்சிகர இளைஞர்களின் ஈர்ப்பாக சோவியத் யூனியன் இருந்ததும், நேரு, தாகூர் உட்பட பலர் சோவியத் நாட்டை வியந்து பாராட்டியதையும், எதிர்புரட்சியை மீறி சாதனை படைக்க உதவிய ஐந்தாண்டு திட்டங்கள் குறித்தும் நிறைய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

 

லெனினும் சரி, ஸ்டாலினும் சரி இந்திய விடுதலையை விரும்பினர், அதற்குத் தார்மீக ஆதரவைத் தெரிவித்தனர், மார்க்சிய பயிற்சி அளிக்க முன்வந்தனர் ஆனால் ஒரு போதும் தனிநபர் சாகசத்தை பய ங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்றும் , த ற்போ து முக்கியமானது தேசியவிடுதலைப் போர்தான் சோஷலிசத்துக்கான போர் அல்ல , ஆகவே தேசிய முதலாளித்துவ சக்திகளையும் இணைந்தே விடுதலைக்குப் போராட வேண்டும் என்றும் உறுதியாகக் கூறியதாக செளகத் உஸ்மானி எழுத்தினூடே அறிய முடிகிறது.

 

செளகத் உஸ்மானி எழுதுகிறார், “தனிப்பட்ட வன்முறைத் தாக்குதல்களைத் தவிர்ப்பது குறித்தும் , மக்களைப் பெ ரும் தி ர ள் போராட்டங்களுக்குத் தயாரிப்பது குறித்தும் புரட்சியாளர்களிடம் அறிவுறுத்தும்படி நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். கம்யூனிஸ்ட் அகிலம் தனிப்பட்ட வன்முறைத் தாக்குதல்களை ஊ க்குவிக்கவி ல்லை என என்னிட ம் சொல்லப்பட்டது.”

 

இந்த அத்தியாயத்தைப் படித்தபின் பல கேள்விகள் எழும். முதல் கிளை துவங்குவதில் முன் நின்ற எம். என் ராய் ஏன் பின்னர் முரண்பட்டார்? எதில் முரண்பட்டார் ? முதல் கிளையில் உறுப்பினராக இருந்த அனைவரும் பின் என்ன ஆனார்கள்? தாஷ்கண்ட் பெஷவார் சதிவழக்குகள், கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு விவரங்கள் என்ன? இப்படி பலவற்றை தேடிப் படிக்க வேண்டிய – அறிந்து கொள்ள வேண் டிய கட்டாயத்தை இளம் கம்யூனிஸ்டுகளுக்கு இந்நூல் ஏற்படுத்திவிட்டது.

 

மூன்றாம் பாகம், 1974 ல் செளகத் உஸ்மானி சோவியத் நாடு சென்று கிட்டத்தட்ட ஐம்பது ஆ ண் டு இடைவெ ளியில் ஏ ற்பட்ட பிரமாண்டமான வளர்ச்சியை மாறுதலைக் கண்டு வியந்து விவரிக்கிறார்.

 

“நான் முதன் முதலில் சோவியத் யூனியன் சென்ற போது இருந்த நிலைமைகளுடன், இன்றைய [1974] மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ள, வளமான சோவியத் யூனியனை ஒப்பிட்டஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.”

 

ஏராளமான தகவல்கள், புள்ளிவிபரங்கள், நேரில் கண்ட காட்சி சித்தரிப்பு மூலம் சோவியத்தின் பாய்ச்சல் வேக வளர்ச்சியை சுட்டுகிறார் உஸ்மானி. சமய சகிப்புத்தன்மை குறித்து நேரில் கண்டதை முஸ்லீம்கள் தொழுகைக்குப் போவதை சுட்டிக்காட்டுகிறார். ஓர் இடத்தில், ரஷ்யர் அல்லாத நண்பர் என்னிடம் கூறினார் என்கிற பீடிகையுடன் நண்பர் கூற்றாகச் சொல்கிறார், “மாஸ்கோவில் உள்ள தேவாலயம் வரலாற்றில் எப்போதும் போலவே இப்போதும் திறந்திருக்கின்றன. ஆனால், மக்கள் அங்கு சென்று வழிபடாவிட்டால் அது சோவியத் அரசின் குற்றமல்ல.”

 

சோவியத்தில் மக்கள் நல்லபடி வாழ்ந்ததை இந்நூலில் படித்து முடித்தபின், அந்த சோவியத் ஏன் சிதைந்தது என்பதை அறியும் ஆவலும் இயல்பாக ஏற்படத்தானே செய்யும்.

 

கம்யூனிசம் இங்கு விதைக்கப்பட்டதின் பின்னாலுள்ள மகத்தான தியாகத்தின் ஆழமும் வலியும் லட்சிய வேரும் நம் கண்களைக் குளமாக்கும். தூக்கத்தை மறந்து அசைபோட வைக்கும். இந்த தியாகத்தை உள்வாங்கி நாளை கம்யூனிச லட்சியத்தை முன்னெடுக்க விழையும் ஒவ்வொரு இளைஞரும் படிக்க வேண்டிய நூல் இது ஐயமில்லை.

 

இந்நூலை வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும், தமிழில் நன்கு மொழிபெயர்த்த தோழர்கள் ச.வீரமணி, தஞ்சை ரமேஷ் ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.

 

ஒரு புரட்சியாளரின் பயணங்கள் ,

ஆசிரியர் : செளகத் உஸ்மானி ,

தமிழில் : ச.வீரமணி , தஞ்சை ரமேஷ் ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,

7 ,இளங்கோ சாலை ,தேனாம்பேட்டை , சென்னை – 600 018.

 

தொலைபேசி :044 -24332424 ,24332924  ,243356935

 

பக்கங்கள் : 232 , விலை : ரூ.240./

 


நரபலி வழக்கத்தில் இல்லையாம்.

Posted by அகத்தீ Labels:

 


 

நரபலி வழக்கத்தில் இல்லையாம்.

@@@@@@@@@@@@@@@@@@@

**************************************************

 

 

நேற்றின் சுவடுகளைப் புதைத்து எழுகிறது

இன்றின் பிரமாண்டம்

கொண்டாட்டம் குதூகலம் சூழ்ந்திருக்கும் வேளையில்

ஓர் முலையில் அழுகுரல்

நெருங்க நெருங்க பல்கிப் பெருகுகிறது

நரபலி வழக்கத்தில் இல்லை என்கின்றனர்

வாழ்வுரிமையைப் பறித்து விரட்டல் நரபலி இல்லையாம் !

ஆம் ! அது ஆன்மீக முத்தமாயிருக்குமோ ?

 

சுபொஅ.

 

 


நூல் அறிமுகம்: *தட்டப்பாறை*

Posted by அகத்தீ Labels:

 


நூல் அறிமுகம்:  *தட்டப்பாறை* – சு.பொ.அகத்தியலிங்கம்

Spread the love



தட்டப்பாறை

டாக்குஃபிக்சன் [ DOCUFICTION ]

ஆசிரியர் : முஹமது யூசுஃப் ,

வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ் ,

214 ,புவனேஷ்வரி நகர் மூன்றாவது முதன்மைச் சாலை ,

வேளச்சேரி ,சென்னை – 600 042.

90424 61472 , 98416 43380

பக்கங்கள் : 534 ,

விலை : 600 /

“எல்லோரும் வாசிக்கும் புத்தகங்களை மட்டுமே நீங்களும் வாசித்தால் எல்லோரும் சிந்திப்பது போல் மட்டுமே உங்களாலும் சிந்திக்க முடியும்.” என ஹாருகி முரகாமி சொன்னதை முன்னுரையில் முஹமது யூசுஃப் சுட்டி – நம் தலையில் ஓங்கிக் குட்டி,  இது புது வழித்தடத்தில் பயணிக்கும் டாக்குஃபிக்சன் எனச் சொல்லிவிட்டார். அப்புறம் விமர்சனமும் வழக்கம் போல் எழுதினால் எப்படி ?

இது நாவலா ? ஆம். ஏனெனில் ஓர் அழுத்தமான கதை இருக்கிறது. தொலைத்துவிட்ட தொப்புள்கொடி உறவு தேடி அலையும் இலங்கைத் தமிழரின் வலியும் கண்ணீரும் மிகுந்த கதை இருக்கிறது. இது தகவல் பெட்டகமா ? ஆம். மனித குலத்தின் தொப்புள்கொடி தேடி உலகெங்கும் பயணித்து அள்ளிக்கொட்டிய தகவல்கள் அப்பிக்கிடக்கின்றன. ஆகவேதான் இது டாக்குஃபிக்சன்.

“ தட்டப் பாறையில் விஞ்சி நிற்பது கதையா? தகவலா? ” என பட்டிமன்றம் நடத்தலாம் . இரண்டு தரப்பும் பேச நிறையச் செய்திகள் உண்டு .

தேவசகாயம், டேனியல், அபு, இருளன், கடக்கரை என்கிற கதாபாத்திரங்களூடே தொடங்கும் கதை தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறையில் துவங்கினாலும் இந்தியா முழுவதும் பயணிக்கிறது. இலங்கையில் முடிகிறது. தகவல்களினூடே உலகெங்கும் வியாபிக்கிறது.

ஜெபா, மேரியம்மா, பென்ஸி, என கண்ணீரின் உருவகமான பெண் கதாபாத்திரங்களும்; செல்வி, செளம்யா, ஜோதி என கேள்விக்குறியாய் நிற்கும் கதாபாத்திரங்களும் நெஞ்சைப் பிசைகிறார்கள் .

புலம்பெயர்தலின் வலியை இலங்கை தமிழ் அகதியான ஜெயசீலன் எனும் தேகசகாயத்தின் வலியோடுதூத்துக்குடியில் சொல்லத்துவங்கி, இலங்கை மண்ணில் டேனியல், மேரியம்மா என்கிற இசக்கி, தேவசகாயம் இவர்களின் தீர்வை எட்டா வலி நிவாரணியோடு முடிகிறது கதை. கண்ணீரின் வெப்பமும் கதை நெடுக – ஊறுகாயாய் கொஞ்சம் அபு, செளம்யா காதல்.

May be an image of 1 person and text that says 'ஆதாரம். இயலாத தட்டப்பாறை முஹம்மது யூசுகப் வாழ்வின் மீதான தீவிரத்தேடல் உள்ள ஒருவனுக்கு இதில் அனைத்தும் அவனுடைய நிலத்தின் ஆட்களுக்கு அவை கடக்க தகவல்கள். மோளை பள்ளை, ஆட்டின் புல்லையும் டையனையும் அலைந்ததில் ஆட்டாம்புழுக்கை வாசம். தட்டப்பாறை ன்பது துவல்ல வாசித்ததும் நீங்கள் தேடப்போகும் உங்களி் விசாலமான எண்ணங்கள் தான் -யூசுகப் முஹம்மது யூசுகப் தட்டப்பாற லறை ? தாலு 650/- www.be4books.com'

ஜாரெட் டைமண்ட் எழுதிய ‘துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு’ எனும் நூல், பில் பிரைசன் எழுதிய ‘ அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு’ எனும் நூல், ஆக இரண்டு நுல்களையாவது குறைந்தபட்சம் வாசித்து உள்வாங்கிவிட்டு இந்நூலில் புகுந்தால் நிறைய கேள்வி கேட்க, விவாதிக்க இயலும். ஏனெனில் உலக வரைபடமாயினும், வரலாறு ஆயினும் ஆசியாவையோ, அரபு நாடுகளையோ மையமிட்டு இல்லையே ஏன் என்கிற வலுவான கேள்வியை அவை முன்வைக்கின்றன. மேலும் பள்ளியில் புவியியல் பாடத்தில் குறைவான மதிப்பெண் வாங்கியவரா நீங்கள், அப்படியாயின் இந்திய வரைபடத்தையும், உலக வரைபடத்தையும் ஒரு பென்சிலையும் கையில் வைத்துக் கொண்டு வாசிக்கவும் பயணப்பாதையை, தகவல் பாதையை கோடிட்டி அறிந்தால் புவியியல் மனதில் பாறையில் செதுக்கிய சித்திரமாகிவிடும்.

இவரின் முந்தைய மணல் பூத்த காடு மற்றும் கடற்காகம் ஆகிய இரண்டு நாவலும் இஸ்லாமியரின் வாழ்க்கை, தத்துவம், முரண்பாடுகள் பற்றிப் பேசின; இந்நூல் கிறுத்துவத்தை மையம் கொண்டுள்ளது, ஆதிப் பழங்குடியைத் தேடி, மதங்களூடே, சாதியூடே பயணிக்கிறது.

இந்நூலில் மார்க்சிஸ்டாக [மாவோயிஸ்டாக இருப்பானோ] அறிமுகமாகும் ராணுவத்தில் பணியாற்றிய இருளன் மூலம் கிறுத்துவ தொண்டு நிறுவனங்களின் நோக்கம் தோலுரிக்கப் படுகிறது. இந்த மண்ணை அடிமைப் படுத்திய வெள்ளைக்காரன் அவன் தேவைக்குத்தான் இந்நாட்டின் வேர்களைத் தேடி வகைப்படுத்தி இருப்பான். நாம் மறுக்கவில்லை. அதைத்தானே ஆர் எஸ் எஸ் காரனும் சொல்லி எல்லாவற்றையும் மறுதலித்து வேதப் பழமைக்கு நம்மை தள்ளிப் புதைக்க முயற்சிக்கிறான்.

இந்நூலில் பல இடங்களில் பேசப்படும் தகவல்களைச் சரியாக உள்வாங்கப்பட்டாவிடின் குழப்பம் ஏற்படவே வாய்ப்புண்டு. கிறுத்துவ பாதிரிமார்களும் ஆய்வாளர்களும் தேடி அலைந்து சேகரித்துத் தொகுத்த நூல்களின் உள்ளுறையில் பிழைகள் இருக்கலாம், நோக்கமும் இருக்கலாம், ஆயினும் அதனுள் உறுத்துகிற உண்மைத் தகவல்களை என்ன செய்வீர்கள்? அவற்றினூடே பயணித்து ஆய்ந்து மேலும் சரியான தகவல்களைக் கண்டறிந்து நம் வரலாற்று பண்பாட்டு வேரை அடையாளம் காட்ட வேண்டுமே தவிர உதறவோ ஒதுக்கவோ முடியாது.

பொன்னீலனின் மறுபக்கம் நாவலில் தன் தொப்புள் கொடியைத் தேடும் ஓர் ஆர் எஸ் எஸ் ஆய்வாளன் மூலமே கதை நகரும் தகவல்கள் கொட்டப்படும் ; ஆனால் அவை அனைத்தும் ஓர் எல்லை வகுத்து – மண்டைக் காட்டு மதக்கலவரத்தை மையம் கொண்டு செய்யப்படுவதால் கதைப் போக்கில் மதவெறி அம்பலப்படும் .

சாதி, மத, இன, மொழி அடையாளங்களைத் தாண்டி மனித குலம் ஒன்றெனச் சொல்ல விழைகிறார் முஹமது யூசுஃப்; அதற்காக தேடித் தேடி சேகரித்த நிறைய விவரங்களை வாரி இறைத்திருகிறார்.

மகிழ்ச்சி.

பாராட்டுக்கள்.

ஆயின் இலக்கை எய்த முடிந்ததா ? என்னைப் பொறுத்தவரை இலக்கை நெருங்க முயற்சித்திருக்கிறார் இன்னும் கொஞ்சம் செதுக்கி இருந்தால் பளிச்செனத் துலங்கி இருக்குமோ ?



படைப்பாளர் மொழிபெயர்ப்பாளர் சுப்பாராவ் ஒவ்வொரு புத்தாண்டின் தொடக்கத்திலும் தான் படித்த நூல்களின் நெடும் பட்டியலை வெளியிட்டு நம்மை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குவார். முஹமது யுசுஃப் ஒவ்வொரு கதையிலும் நூலிலும் தான் படித்த நூல்களை புகுத்திவிடுவார். இந்நூலில் சுப்பாராவின் நெடும் பட்டியல் போல் அது நீள்கிறது. இதையெல்லாம் நாம் படிக்காமல் இந்நூலைப் பற்றி எப்படிப் பேசுவது என்கிற மலைப்பு ஏற்படுகிறது. இந்நூல் பற்றிய அலசல் கதை சார்ந்ததாக மட்டுமாக அமையவே முடியாது. கருத்து சார்ந்ததாகவும் நிச்சயம் இருந்தாக வேண்டும். இல்லையேல் நியாயம் வழங்கியதாக இருக்காது .

இந்நூலில் ஓரிடத்தில் போகிறபோக்கில் ஒரு தகவலைச் சொல்லி  “குரங்கிலிருந்து பிறந்தான் மனிதன் எனும் டார்வின் கொள்கை அன்றோடு நீர்த்துப் போனது” என்கிறார். அது உண்மை இல்லையே ! டார்வின் தான் சேகரித்தவைகளின் அடிப்படையில் செய்த யூகத்தில் உள்ள குறைபாடுகள் பிந்தைய ஆராய்ச்சிகளால் சீர் செய்யப்பட்டு படிமலர்ச்சிக் [பரிணாமக்] கொள்கை வலுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளதே உண்மை. இதுபோல் இன்னும் பல நூலில் விவாதத்திற்குரியன.

இந்நூல் நெடுக எத்தனை மேற்கோள் நூல்கள், இணைய விவரங்கள், எத்தனை இனக் குழுக்கள், எத்தனை ஆதி குடிகளின் பெயர்கள், எத்தனை ஆடுகளின் வகைகள் என ஒவ்வொன்றையும் எண்ணிச் சொல்ல ஓர் போட்டி வைக்கலாம். அதில் நிச்சயம் வெற்றி பெறுவது கடினமே! வாசிப்புக்கு இடையூறாக இருப்பினும் டாக்குஃபிக்சன் என்பதால் அடுக்கப்பட்டுள்ள ஆங்கிலப் பெயர் பட்டியல் எத்தனை அதற்கும் ஒரு போட்டி வைக்கலாம்.

சிலர் சொல்லுவது போல் ”இந்த ஆளு பாரேன் எவ்வளவு விசயம் சொல்றாரு!” என வாசகனை பிரமிக்க வைக்கும் வகையில் வசீகர நடையில் எழுதி இருக்கிறார். வாழ்த்துகள்.

நூறு பக்கங்களுக்குள் கதை அடங்கிவிடும்; ஆனால் கதை நடந்த உலகை, பிரச்சனைகளை, தேடலை அதில் அடக்க முடியாதே ஆகவே 534 பக்கங்கள். ஆனாலும் இன்னும் பெரும்பகுதி வெளியேதான் கிடக்கிறது.

அடுத்தடுத்த நாவலில் கவனித்துக் கொள்வார். அவற்றையும் வாசிக்கக் காத்திருப்போம்….

 


நிம்மி மோதி நிம்மி மோதி

Posted by அகத்தீ Labels:

 


நிம்மி மோதி நிம்மி மோதி



நிம்மி மோதி நிம்மி மோதி

நிம்மி மோதி நிம்மி மோதி

வாயில சுட்ட வடை நூறு

திண்ணு பாத்தது யாரு...


                                                (நிம்மி...)


காற்றுல கணக்கெழுதி

கல்லா கட்டுவேன்... நான் 

கல்லா கட்டுவேன்...


கஞ்சிப் பானையை கவுத்து வசிச்சி

சோறு பொங்குவேன்..... நான்

சோறு பொங்குவேன்

                                          (நிம்மி)

வீட்டு  உறி நெய்யை ஊரானுக்கு ஊற்றிக் கொடுப்பேன் - நான்

ஊற்றிக் கொடுப்பேன்


பசிச்சழும் குழந்தையை 

போட்டு மிதிப்பேன் - நான்

பொண்டாட்டியையும் சேர்த்து மிதிப்பேன்

                                   (நிம்மி)

விதை நெல்ல மூட்ட கட்டி 

விற்றுத் திம்பேன் - நான்

விற்றுத் திம்பேன்...

                                     

உத்திரத்தை உருவி அடுப்பெரிப்பேன்

ரத்தக் காட்டேரிக்கு விருந்து வைப்பேன்

நான் விருந்து வைப்பேன்

                                               (    நிம்மி) 

திரிசங்கு சொர்க்கதில உங்களுக்கு

வீடு கட்டித் தருவேன் - நான்

வீடு கட்டித் தருவேன்...


 குடியிருக்கும் பூமியசும்மா 

தூக்கித் தருவேன் அம்பானிக்கு /அதானிக்கு

தூக்கித் தருவேன்...


                      (   நிம்மி) 


                                            சுபொஅ.

குடும்பத்திலும் நாட்டிலும்

Posted by அகத்தீ Labels:

 


குடும்பத்திலும் நாட்டிலும்





 

 

எப்போதும்

தலைவர் சர்வாதிகாரியாகவே இருக்கிறார்

கடினமாகவோ மென்மையாகவோ!

 

நிரந்தர இரண்டாமிடத்தவர்

புழுங்கிக் கொண்டே இருக்கிறார்

கூடுதலாகவோ குறைவாகவோ!

 

மூத்த குடிமக்கள்

புறக்கணிப்பதாய் புலம்பித்தீர்க்கிறார்கள்

பகீரங்கமாகவோ மனதிற்குள்ளோ !

 

இளையதலைமுறை

கோபத்தோடேதான் மோதுகிறார்கள்

மூத்தோர் வழிவிடவில்லை என்றே !

 

குழந்தைகளைக்

கொண்டாடுவதாய் பேசிக்கொண்டே

கூண்டுக்கிளி ஆக்கவே முயல்கிறார்கள் !

பாசம் வேஷம் நீதி அநீதி

விசுவாசம் துரோகம் லாபம் நட்டம்

ஏற்றம் இறக்கம் நட்பு பகை

 

குடும்பத்திலும் நாட்டிலும்

எல்லாம் இப்படித்தான்

ஜனநாயகம் பேச்சோடுதான்!

 

போராடித்தான்

எங்கும் எல்லோரும்

மூச்சுவிட முடிகிறது !

 

சுபொஅ.


போகி நெருப்பை ஊதிப் பெரிதாக்கு

Posted by அகத்தீ Labels:

 

போகி நெருப்பை ஊதிப் பெரிதாக்கு


போகி நெருப்பை ஊதிப் பெரிதாக்கு - கொடும்
வேளாண் சட்டங்களைக் கொளுத்திக் கரியாக்கு !
திருதராஷ்டிர ஆலிங்கனம் மகாபாரதத்தோடு
முடியவில்லை ; நீதிபதி ஆசனத்திலும் உண்டு….
ஒப்புக்கு கதைகேட்டு ஓய்ந்தவனா எம்விவசாயி ?
வரலாறுநெடுக வஞ்சகத்தை துரோகத்தை சகுனிகளை
சந்தித்து மீண்டவரே எம்உழவர் பெரும்படையும்
சிந்தித்து முடிவெடுத்தார் ; போராட்டம் தொடரும்
போகி நெருப்பில் பெட்ரோல் ஊற்றியதுபோல்
நெஞ்சில் கனன்றெரியுது எம்உழவர் கோபாக்னி
எரியட்டும் ஆணவ ஆட்சி ! எரியட்டும் காவி - கார்ப்பரேட் அநீதி !
பொங்கட்டும் புதுநீதி ! உழவர் உழைப்பாளர் சமூகநீதி !
சுபொஅகத்தியலிங்கம்.
13 ஜனவரி 2021.

பொங்கள் நன்னாளில் புத்தி வந்தது

Posted by அகத்தீ Labels:

 


பொங்கள் நன்னாளில்
புத்தி வந்தது


விடியக் காத்திருக்கும் இரவில்
மொட்டவிழ்ந்தது ஓர் கனவு
பேசும் முகம் புலப்படவில்லை
பேச்சு மட்டும் தெளிவாய்க் கேட்டது …
“ யார் நீங்கள் ?”
நடுங்கும் குரலில் நான் கேட்டேன் .
“ கடவுள்”
என்றது கம்பீரமாய் ..
“ உருவம் புலப்படவில்லையே ?
நம்புவது எப்படி ?
சந்தேகக் கணையைத் தொடுத்தேன் …
கை கொட்டி உரக்கச் சிரித்தார்
மெல்ல வாய் திறந்தார்
“ உழவனின் வியர்வையில்
நானிருப்பேன்
உழைப்பவன் குருதியில்
உறைந்திருப்பேன்
பசிப்பவன் முன்பு
ரொட்டியாய் வருவேன்
தவிக்கும் வாய்க்கு
தண்ணீராய் தெரிவேன்
நீங்கள் கட்டும்
பிரமாண்ட கோயிலிலோ
சர்ச்சிலோ மசூதியிலோ
நானில்லை
வியர்வையில்
ரத்தத்தில்
கண்ணீரில்
நானிருப்பேன்
குருதேவர் ரவீந்திர நாத் தாகூரும்
தேசப்பிதா காந்தியும் அதைத்தான்
எப்போதும் சொன்னார்கள்
உழவு செய்யாவிடில்
நாற்று நடாவிடில்
உரம் இடாவிடில்
நீர் பாய்ச்சாவிடில்
ஒரு கவளம் சோறுமின்றி
உலகமே முடங்கிப் போகும்
முற்றும் துறந்த முனிவரும்
பசியால் தவத்தை மறப்பார்
ஆம்… அதைத்தான்
வள்ளுவனும் சொன்னார்
‘உழவினார் கைமடங்கின் இல்லை இல்லை விழைவதும்
விட்டோம் என்பார்க்கும் நிலை ..’
உழைப்பைப் போற்று
உழவைப் போற்று
அங்கே நான் இருப்பேன்…”
கடவுள் பேசி மறைந்தார்
நான் விழித்தேன்
பொங்கள் நன்னாளில்
புத்தி வந்தது மக்களுக்கு
ஆட்சியாளருக்கு அல்ல...
சுபொஅ.