என்ன கணக்கு ?

Posted by அகத்தீ Labels:

 


என்ன கணக்கு ?

 

பெரும்பாலோர் வீட்டில்

பூஜை அறை இருக்கிறதோ இல்லையோ

பூஜை ஷெல்ப் ஒன்று நிச்சயம் இருக்கும் !

அதில் யார் யார் இருக்கிறார்கள்

கொஞ்சம் பட்டியலிடுங்கள் !

ஒற்றைக் கடவுள் இருக்கும் வீடு

அநேகமாய் இருக்காது

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கூட்டணி

கூட்டணிதான் நல்லது என்கிற கணக்கா ? இல்லை

யாராவது காப்பாற்ற மாட்டாரா என்கிற கணக்கா ?

ஒன்று தெரியுமா ? இந்தக் கூட்டணியில்

அவ்வப்போது சேர்த்தலும் கழித்தலும்கூட நடக்கும் !

கோவில் தர்க்கா மசூதி சர்ச் எங்கும்

நேர்ச்சைக் கடன் தீர்க்க பயணமும் உண்டு

சாமிகளுக்கும் கோயிலுக்கும் சாதி வீம்பும் உண்டு

இந்த வட்டம் நம்பிக்கை சார்ந்ததா ?

வெறும் சடங்கு சார்ந்ததா  ?

தெரியாமல்தான் தெய்வங்களும்

செயலற்று பேச்சு முச்சற்றுக் கிடக்கின்றன ….

 

சுபொஅ.

25 /04 /26 .

 

சுபொஅ.

 

 


0 comments :

Post a Comment